“Readers Portal” ஊடாக நான்காவது தொடர்ச்சியான ஆண்டாக இலங்கைக்கு திரும்பும் Big Bad Wolf Book Sale 2020

உலகின் பிரமாண்ட புத்தக விற்பனை 2020 ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை ஒன்லைனில்

இது உத்தியோகபூர்வமானது, உலகின் மிகப் பெரிய புத்தக விற்பனை இலங்கைக்கு திரும்பியுள்ளது. இம் முறை புத்தாக்க முயற்சியாக, Big Bad Wolf Book Sale 2020 ஒன்லைன் தளத்துக்கு நகரவுள்ளதுடன், இந்த “The Readers Portal” ஒக்டோபர் 1 ஆம் திகதி 4 ஆம் திகதி வரை நாளாந்தம் 24 மணி நேரமும் இயங்கவுள்ளது. இந்த இணையத்தளமானது கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதனை ProRead Lanka (Pvt) Ltd  பணிப்பாளர் நிசான் வாசலதந்திரி ஏற்பாடு செய்திருந்ததுடன், Big Bad Wolf Books இன் இணை ஸ்தாபகர்களான  அண்ட்ரூ யாப் மற்றும் ஜாக்குலின் என்ஜி ஆகியோருடன் Big Bad Wolf Book Sale Sri Lanka வின் பங்காளர் தீபக் மாதவன் இதன்போது மலேசியாவிலிருந்து நேரடி இணைய மாநாடு மூலம் பார்வையாளர்களுடன் இணைந்திருந்தார்.

இலங்கையில் உள்ள வாசகர்கள் மீண்டும் பிரபல 50% – 90% வரையான தள்ளுபடியை அனுபவித்து மகிழ முடிவதுடன், இவ்வாண்டு மூன்று மடங்கு அதிக புத்தக்கங்கள் கிடைக்கவுள்ளன. இம்முறை முன்னைய கண்காட்சிகளை விட 70% அதிக புதிய தலைப்பிலான புத்தகங்கள் விற்பனைக்கு வரவுள்ளதுடன், இவை இதற்கு முன்னர் இலங்கையில் கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  அனைத்து விதமான ஆர்வங்களையும் கொண்ட வாடிக்கையாளர்களுக்காக  சிறப்பாக விற்பனையாகும் தலைப்புகள், நாவல்கள், விஞ்ஞான புனைகதை, காதற்புனைகதை, இலக்கியம், கிராஃபிக் நாவல்கள், வணிக புத்தகங்கள், சுய உதவி, கட்டிடக்கலை புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் மற்றும் பலவற்றை பெற்றுக் கொள்ள முடியும். இந்த ஒன்லைன் விற்பனையில் பல வகையான சிறுவர் புத்தகங்கள்; கதைப் புத்தகங்கள், செயற்பாட்டு புத்தக்கங்கள், போர்ட் புத்தகங்கள், வண்ணம் தீட்டும் புத்தகங்கள், பட புத்தகங்கள் மற்றும் சிறப்பு ஊடாடும் புத்தகங்கள் என்பன மிகவும் பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கின்றது.

இந்த இணையத்தளமானது ரசிகர்களுக்கு அவர்களின் வீடுகளின் சௌகரியத்தில் இருந்தவாறு புத்தகங்களை வாங்குவதற்கான தடையற்ற மற்றும் வினைத்திறனான முறையை வழங்குமென்பதுடன், இது மொபைல்களின் ஊடாக பிரவேசிப்பதற்கு இலகுவானதென்பதுடன், விற்பனைக்கான அணுகலை எளிதாக்குகிறது. Disney, Star War மற்றும் Harry Potter போன்ற புத்தகங்களையும் இந்த பிரபல தலைப்புகள் உள்ளடக்கவுள்ளன. இணையதளத்தில் உள்ள பரிந்துரைப் பிரிவு வாசகர்களுக்கும், வாசகர்கள் அல்லாதவர்களுக்கும் அவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் தங்களுக்கு ஏற்ற புத்தகங்களைத் தெரிவு செய்ய உதவும். மேலும் keywords, ISBN, titles மற்றும் authors போன்றவற்றின் ஊடாக சுலபமாக புத்தகங்களை தேடிக்கொள்ளும் வாய்ப்பை இந்த இலகுவாக பாவிக்கக்கூடிய இணையத்தளம் வழங்கவுள்ளது.

“ஒன்லைன் விற்பனையானது பொதுவானது, ஆனால் ஒன்லைன் புத்தக விற்பனையானது அரிதானது, உலகின் மிகப் பெரிய ஒன்லைன் புத்தக விற்பனையை ஒன்லைன் மூலம் நடாத்துவது சவால் மிக்கது எனினும் உற்சாகமானது. தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட முக்கிய உலகளாவிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், எங்கள் ரசிகர்களை ஏமாற்ற நாங்கள் விரும்பவில்லை. ரசிகர்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை – இது இந்த ஆண்டு ஒன்லைன் தளம் வழியாக விற்பனை திரும்புவதற்கான முதன்மைக் காரணம். இது பாதுகாப்பு தொடர்பான கவலைகளை சமாளிப்பது மட்டுமல்லாமல், இலங்கையில் வாடிக்கையாளர் வசதிக்காக ஒரு புதிய வழியைத் திறக்கிறது ” என்று Big Bad Wolf Book Sale இன் இணை ஸ்தாபகர், அண்ட்ரூ யாப் தெரிவிக்கின்றார்.

ProRead Lanka (Pvt) Ltd இன் பணிப்பாளர், நிஷான் வாசலதந்திரி கருத்து தெரிவிக்கையில், ” 2009 ஆம் ஆண்டில் இந்த புத்தக விற்பனை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து புத்தாக்கமான மாற்றமே எமது வியாபாரத்தின் அடிப்படையாகும். மலேசியாவிலிருந்து புத்தகங்கள் அனுப்பப்பட்டாலும், உள்ளூர் விரைவு அஞ்சல் கட்டணங்கள் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ரூ. 8,000 க்கு மேல் புத்தகம் வாங்கினால் விரைவு அஞ்சல் கட்டணம் இலவசம். இதன் பொருள் என்னவென்றால், தொந்தரவில்லாத ஷொப்பிங் அனுபவமாகும், இதில் பாவனையாளர்கள் இனி போக்குவரத்து நெரிசல், வரிசைகளில் காத்திருக்க தேவையில்லை. மேலும் COVID19 இலிருந்து பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. புத்தகங்களை ஒர்டர் செய்து, அவற்றை உங்கள் வீட்டு வாசலுக்கே பெற்றுக் கொள்வது எளிதானது, என்றார்.

“உலகெங்கிலும் உள்ள புத்தக ஆர்வலர்களுக்கு மலிவு விலையில் புத்தகங்களுக்கான அணுகல் கிடைக்க வேண்டும் என்றும், வாசிப்பு நடைமுறை அனைவரிடையிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் Wolf Team நம்புகிறது. இது Big Bad Wolf புத்தக விற்பனையின் முதன்மை குறிக்கோளாகும். தொற்றுநோய் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்புகிறது, இதனை ஒன்லைன் தளத்தால் சமாளிக்க முடியும். இது மற்றைய நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. சரியான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்ய தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விநியோக பங்காளிகளும் பின்பற்றுவார்கள். Big Bad Wolf புத்தக விற்பனை குழு அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதுடன், குழுவானது முழு செயல்முறையையும் கண்காணிக்கும் என்று உறுதியளிக்கிறது” என Big Bad Wolf Book Sale இன் இணை ஸ்தாபகர், ஜாக்குலின் என்ஜி குறிப்பிடுகின்றார்.

Big Bad Wolf Online Book Sale Sri Lanka 2020 இற்கான பார்வையாளர்கள் இணையத்தளத்தின் banner இனை பார்வையிடுவதன் மூலம் தற்போதைய ஊக்குவிப்புகளை பார்வையிட முடியும். மேலும் பிந்திய போட்டிகள் மற்றும் ஊக்குவிப்புகள் தொடர்பான அறிவிப்புகளை எமது சமூக ஊடக பக்கங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விற்பனையானது 2020 ஒக்டோபர் 1 முதல் 4 வரை தினசரி 24 மணித்தியாலமும் www.bigbadwolfbooks.lk ஊடாக இடம்பெறும். www.facebook.com/bbwbookssrilanka மற்றும் www.instagram.com/bigbadwolfbooks_lk  ஊடாக Big Bad Wolf Book Sale 2020 தொடர்பான பிந்திய தகவல்களுக்கு இணைந்திருங்கள்.

BIG BAD WOLF புத்தக விற்பனை தொடர்பில்

அண்ட்ரூ யாப் மற்றும் ஜாக்குலின் என்ஜி, இருவரும் தாம் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக Big Bad Wolf புத்தக விற்பனையை முதன் முதலாக மலேசியாவின் கோலாலம்பூரில் ஒரு களஞ்சியசாலை விற்பனையாக 2009 இல் ஆரம்பித்தனர். இது சர்வதேச விநியோகஸ்தர்களிடமிருந்த பல தரப்பட்ட மேலதிக புத்தகங்களை வழங்குகிறது. மலிவு விலை மற்றும் புத்தகங்கள் எளிதில் கிடைப்பதானது ஒரு பெரிய ஈர்ப்பாக இருந்தது, குறுகிய காலத்தில் Big Bad Wolf புத்தக விற்பனை நாடு முழுவதும் ஒரு முக்கிய நிகழ்வாக மாறியது.பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விலையில் 50% முதல் 90% வரை தள்ளுபடியில் புத்தம் புதிய ஆங்கில புத்தகங்களை வழங்குவதுடன், Big Big Bad Wolf புத்தக விற்பனையானது, fiction மற்றும் non- fiction bestsellers, young adult fiction மற்றும் பல தரப்பட்ட குழந்தைளுக்கான புத்தகங்களின் விரிவான தொகுப்பையும் இவை கொண்டுள்ளன.மலேசியா மற்றும் இலங்கை உட்பட, Big Bad Wolf புத்தக விற்பனை தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான், மியான்மர், தாய்வான், கம்போடியா மற்றும் கொரியா ஆகிய நகரங்களிலும் தனது கால்தடத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top