Huawei யின் வருடாந்த பருவகால சேவை சலுகைகள்; மெகா தள்ளுபடிகள், பரிசுகளுடன் ஆரம்பம்

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்க வருகிறது. நாடு முழுவதும் உள்ள Huawei சேவை மையங்கள், அது தனது உயர் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களையே எப்போதும் மையப்படுத்தியுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகக் காணப்படுகின்றது. நத்தார் மற்றும் புத்தாண்டு பருவகாலத்தை அது வரவேற்கும் விதமும், அதில் தனது வாடிக்கையாளர்களை கௌரவிப்பதும் அதன் சேவையின் சிறப்பின் மற்றொரு அடையாளமாகும்.

Huawei யின் பருவ கால கொண்டாட்டம், Huawei யின் வருடாந்த பருவகால சேவை சலுகைகள் யாவும் தற்போது ஆரம்பமாகியுள்ளதோடு, முழு மூச்சுடன் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். கடந்த நவம்பர் 24ஆம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வு 2021 ஜனவரி 10ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். Huawei யின் பருவகால சேவை சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் யாவும், அதன் நம்பிக்கைக்குப் பாத்திரமான வாடிக்கையாளர்களுக்கு பருவகால போனஸ், பரிசுகள் மற்றும் சாதனங்களின் உதிரிப்பாகங்கள், பழுதுபார்ப்புகளில் நம்பமுடியாத தள்ளுபடிகளை வழங்குகிறது.

Huawei சேவை பருவகால சலுகைகள் ஆனது, வருடத்தின் ‘பரிசுகள் மற்றும் மகிழ்ச்சி’ இனைக் கொண்டு வரும் காலமாக அமைகிறது. நத்தாரின் வருகையானது, பரிசுகளையும் நல்லெண்ணத்தையும் பகிர்வதை குறிக்கிறது. இப்பருவகாலத்தில் தமது சேவை நிலையங்களுக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அன்பளிப்புகள், அற்புதமான பரிசுகளை, Huawei வழங்க தயாராகவுள்ளது.

கொழும்பு, மஹரகம, கண்டி, அநுராதபுரம், காலி, யாழ்ப்பாணம் ஆகிய Huawei சேவை மையங்களுக்கு விஜயம் செய்யும் வாடிக்கையாளர்கள், தெரிவு செய்யப்பட்ட சாதன உதிரிப் பாகங்களை 50% வரையான விலைக்கழிவிலும், குறைந்த கட்டணத்துடனான சாதன பழுதுபார்த்தலையும், இலவச தூய்மைப்படுத்தல், சாதனங்களின் கிருமி நீக்கம் உள்ளிட்ட மேலும் பல சேவைகளையும் பெற முடியும்.

Huawei சேவை பருவால சலுகைகள் மூலம், Huawei வாடிக்கையாளர்கள் இப்புதுவருடத்தை தங்களது சாதனங்களுக்கு புதிய தோற்றத்தை வழங்கி கொண்டாடும் அதே நேரத்தில், தெரிவு செய்யப்பட்ட சாதனங்களுக்கான உதிரிப் பாகங்களை 50% வரையான தள்ளுபடியுடன் பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் புதிய வகையான திரைப் பாதுகாப்பானையும் (frosted screen protector) பெறலாம். இது கைரேகை பதிவதனை எதிர்ப்பதோடு, எண்ணெய் தன்மையான அழுக்குகளுக்கும் எதிர்ப்பாகவும், நீடித்து உழைக்கும், வழுக்கிச் செல்லாத வகையிலானது என்பதோடு, அதனை விலைக் கழிவுடன் ரூ. 200 இற்குப் பெற்றுக் கொள்ளலாம். தங்களது சாதனங்களை மேலதிக கரிசனையுடன் கவனித்துக் கொள்பவர்களுக்கு, Huawei சேவை மையத்தினால் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு புதிய, ஸ்டைலான சாதனங்களின் பின்புற பாதுகாப்பான் (back cover protector) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ரூ. 150 எனும் விலைக்கழிவுடனான விலையில் கிடைக்கிறது. தங்களது Huawei சாதனங்களை பழுதுபார்ப்பதற்காக வரும் வாடிக்கையாளர்கள், இலவச தூய்மைப்படுத்தல் மற்றும் கிருமியழித்தல் சேவையையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்த தூய்மையாக்கல் மற்றும் கிருமியழித்தல் சேவைகளும், அனைத்து Huawei ஸ்மார்ட்போன்கள், டெப்லெட்டுகள், மடிகணனிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், கைப்பட்டிகள், Free Buds ஆகியவற்றிற்கு கிடைக்கிறது.

Huawei அதன் அனைத்து சலுகைகளிலும் உயர் மட்ட சேவைத் தனித்தன்மையை பேணுவதற்கும் வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கும் உறுதி பூண்டுள்ளது. இதன் விளைவாக, Huawei சேவை மையங்கள், தொடர்ச்சியாக Huawei இனால் கண்காணிக்கப்படுவதோடு, அனைத்து சாதன பழுதுபார்ப்புகளும் நன்கு பயிற்றப்பட்ட, அனுபவம் வாய்ந்த Huawei தொழில்நுட்ப வல்லுநர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது அமுலில் உள்ள Huawei வருடாந்த பருவகால சலுகைகள் தொடர்பில், இலங்கைக்கான Huawei சாதனங்களின் தலைவர் பீட்டர் லியு தெரிவிக்கையில், “புத்தாண்டு பருவத்தின் புத்துணர்ச்சியை அனுபவிக்கும் வகையில், Huawei பயனர்களுக்கு இவ்வருடாந்த பருவகால சலுகைகளை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். அத்துடன் பழைய சாதனங்களை வைத்துள்ள Huawei பயனர்கள், எமது நாமத்தை நம்பி எங்களுடன் தொடர்ந்தும் இணைந்துள்ளனர். எனவே அவர்களுக்கு எமது நன்றியைக் காட்ட வேண்டிய தருணமாக நாம் இதனைக் கருதுகிறோம். பழைய சாதனங்களைக் கொண்டுள்ள பயனர்கள் தங்களது சாதனங்களை பழுதுபார்க்கவும், மிகக் குறைந்த விலையில் அவற்றை புதுப்பிக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பாக, Huawei யின் வருடாந்த பருவகால சலுகைகள் அமைந்துள்ளன” என்றார்.

திரை மாற்றுதல், மின்கலம் மாற்றுதல், பிரதான சுற்றுப் பலகை (main board) மாற்றுதல் போன்ற, பழுதுபார்ப்பு அவசியமான சாதனங்களுக்கு, இவ்வருடாந்த Huawei பருவகால சலுகைகளில், விசேட தள்ளுபடியுடனான கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.

Huawei MediaPad T2-7 சாதனங்களை கொண்டுள்ளவர்களுக்கு, அதன் திரையை மாற்றும் போது, அதற்கான புதிய பின்புற மூடியை மாற்றுவதற்கான ஒரு அரிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவை இரண்டையும் வெறும் ரூ. 3,699 எனும் விலையில் பெற்றுக் கொள்ளலாம். தற்போது Huawei பயனர்கள் தங்கள் பழைய சாதனங்களுக்கு, தள்ளுபடியுடனான விலையில் அசல் மின்கலத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் தங்களது சாதனங்களுக்கு புத்துணர்வு வழங்கலாம். GR3 2017, GR5 2017, T2 7, Y3 2, Y3 2017, Y5 2017, Y6 2, Y6 2019, Y6 Pro 2018, Y7 ஆகிய Huawei சாதன பயனர்கள், ரூ. 1,899 எனும் மிகக் குறைந்த விலையில் தங்களது சாதனங்களுக்கான மின்கலத்தை மாற்றிப் பெறலாம். Nova 2i, Nova 3, Nova 3i, P10, P10 Plus, P30 lite, P9, T3 10, Y7 2019, Y9 2018, Y9 2019 உள்ளிட்ட Huawei சாதனங்களுக்கு இந்த அற்புதமான சலுகையை ரூ. 2,599 எனும் விலையில் பெற்றுக் கொள்ளலாம். அத்தியாவசிய சேவை வழங்கல்களின் அடிப்படையில் இவ்வாறான அனைத்து சேவைகளையும் Huawei உள்ளடக்கியுள்ளது. பயனர்கள் தங்கள் சாதனங்களுக்கான மின்கலங்களை மாற்றிக் கொள்வது மட்டுமல்லாமல், பிரதான சுற்று பலகையையும் விசேட தள்ளுபடியில் பெற்றுக் கொள்ளலாம். Y3 2017 – 3G மொடலின் main board இனை ரூ. 3,842 இற்கும், அதன் 4G மொடலிற்கு  ரூ. 4,399 இற்கும் Y5 2017 – ரூ. 4,399, Y7 2016 – ரூ. 4999, Y7 Pro 2018 – ரூ. 4399, Y9 2018 – ரூ. 5,599 இற்கும் மாற்றிக் கொள்ள முடியும்.

திரை மாற்றீடு தேவைப்படும் பழைய சாதனங்களை அருகிலுள்ள சேவை மையத்திற்கு எடுத்துச் சென்று நம்பமுடியாத விலையில் புதிய திரையை மாற்றி பெற்றிடலாம். Huawei Y3 2017 (Gold), Y5 2017 (Black), Y6 2018 (Black/White) ஆகியவற்றின் திரைகளை ரூ. 2,999 எனும் விலையில் மாற்றிப் பெறலாம். Nova 2i (White) is Rs. 3499, Nova 3i (Pearl White/Iris Purple) ஆகியவற்றை ரூ. 4,999 இற்கும், MediaPad தொடரில், MediaPad T2 7 இற்கான திரையை மாற்றுவதற்கு ரூ. 2,999, MediaPad T1 10 இற்கு ரூ. 2,999 மற்றும் MediaPad M3 Lite இற்கு ரூ. 3,999 எனும் விலையிலும் திரையை மாற்றீடு செய்யலாம்

சேவை மையங்களால் இவ்வாறான பழுதுபார்ப்பு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், Huawei சேவை வருடாந்த பருவகால சலுகை, விசேட கட்டணத்தில் வழங்கப்படுகின்றன. பயனர்கள் பின்புற மூடியின் வண்ணத்தை மாற்றுதல் உள்ளிட்ட, தங்கள் சாதனங்களுக்கான கவர்ச்சிகரமான மாற்றங்களையும் குறைந்த விலையில் மேற்கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளான Huawei  Y6 Pro வின் Midnight black மற்றும் Amber Brown நிறங்களின் பின்புற மூடிகள் ரூ. 1,699 எனும் விலையில் கிடைப்பதோடு, MediaPad T2 7 இனது Champagne நிற பின்புற மூடி, ரூ. 1,699 எனும் விலையிலும் கிடைக்கிறது.

தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei நிறுவனம், முழுமையாக இணைக்கப்பட்ட, புத்திசாலித்தனமான உலகிற்காக, ஒவ்வொரு நபருக்கும், வீட்டுக்கும், நிறுவனத்திற்கும் டிஜிற்றல் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில் உறுதியாக உள்ளது. உலகளாவிய மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான Huawei, புகழ்பெற்ற விருது விழாக்களில் முறையாக கௌரவிக்கப்பட்டு, உலகளாவிய தரக்குறியீடுகளின் தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய தரக்குறியீடுகள் தொடர்பான, BrandZ Top 100 பட்டியலில் Huawei 45ஆவது இடத்தையும், Forbes உலகின் மிக மதிப்புமிக்க தரக்குறியீடுகள் பட்டியலில் 79ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அத்துடன் சமீபத்திய Brand Finance Global 500 மிகவும் மதிப்புமிக்க தரக்குறியீடுகள் பட்டியலில் முதல் 10 மதிப்புமிக்க தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Interbrand இனது, சிறந்த உலகளாவிய தரக்குறியீடுகள் பட்டியலில் Huawei 68ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் Fortune உலகளாவிய 500 பட்டியலிலும் அது இடம்பிடித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top