HNB உடன் இணைந்து Steorra லோயல்ட்டி திட்டத்தை வெளியிட்டுள்ள Sterling ஒட்டோமொபைல்

பராமரிப்புக்கு பின்னரான உத்தரவாதத்தை அறிமுகப்படுத்திய ஒட்டோமொபைல் துறையில் முன்னோடி நிறுவனமான Sterling Automobiles Lanka, முன்னணி வங்கியான Hatton National Bank (HNB) உடன் இணைந்து Steorra லோயல்டி திட்டம் என்ற புதுமையான எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு என்றும் முன்னுரிமையளிக்கும் நிறுவனமான Sterling Automobiles, அதன் பயணத்தில் இந்த வர்த்தகநாமத்துக்கு ஆதரவளித்த நுகர்வோர் மற்றும் அதன் சேவைகளைப் பெற எதிர்பார்க்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் நோக்கத்துடன் இந்த முன்னோடி எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக, Sterling Automobiles நிறுவனம் HNB வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்கள் தமது Steorra லோயல்டி திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட புள்ளிகளை, வங்கி வழங்கும் Sterling-HNB இணைந்த வர்த்தகநாமத்துடன் கூடிய டெபிட் அட்டை மூலம் பணமாக மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், வாகன பற்றரி, ஓடியோ, டயர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்பு விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட ஒட்டோமொபைல் தொடர்பான சேவை வழங்குநர்களுடனும், தள்ளுபடிகள் , சலுகைகள் போன்ற மேலதிக நன்மைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக  குத்தகை மற்றும் காப்புறுதி நிறுவனங்களுடனும் Sterling கைகோர்த்துள்ளது.

Steorra லோயல்டி திட்டத்தின் பொறிமுறையானது, Sterling பராமரிப்புக்குப் பின்னரான நிலையங்களில் இருந்து சேவைகளைப் பெறும் ஒரு வாடிக்கையாளர் இந்த திட்டத்திற்கு பதிவு செய்ய விரும்பினால், அவர் HNB சேமிப்பு  கணக்குடன் இணைக்கப்படும் HNB-Sterling இணைந்த வர்த்தகநாமத்துடன் கூடிய டெபிட் அட்டையை தெரிவு செய்யும் வாய்ப்பு அல்லது பல நன்மைகளைக் கொண்ட Steorra லோயல்டி அட்டையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்.

இந்த திட்டத்திற்கு பதிவுசெய்தவர்கள் Sterling பராமரிப்புக்கு பின்னரான நிலையத்தின் தற்போதைய வாடிக்கையாளர் தளம் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் , இதுவரை அவர்கள் பெற்றுள்ள சேவைகளின் அடிப்படையில் வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகிய மூன்று லோயல்டி வகைகளில் ஒன்றினுள் உள்ளடக்கப்படுவர். Sterling பராமரிப்புக்கு பின்னரான நிலையத்தின் ஒட்டோமொபைல் தொடர்பான பழுது மற்றும் சேவைகளில் இருந்து பெறப்பட்ட ஒவ்வொரு சேவைக்குமான கட்டணப்பட்டியலின் மதிப்புக்கு ஏற்ப லோயல்டி புள்ளிகள் சேர்க்கப்படும்.

HNB-Sterling இணைந்த வர்த்தகநாமத்திலான டெபிட் அட்டை மூலம் வழங்கப்படும் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று, Sterling  பராமரிப்புக்கு பின்னரான நிலையத்திலிருந்து சேவைகளைப் பெறுவதன் மூலம் பெறப்படும் லோயல்டி புள்ளிகளை சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்பதாகும்.

மேலும், அவர்கள் HNB டெபிட் அட்டை தொடர்பிலான பல்வேறு விற்பனையகங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பலவற்றிலிருந்து கிடைக்கும் அனைத்து சலுகைகளுக்கும் உரித்துடையவராகின்றனர். அத்துடன், சேமிப்புக்கு எதிராக 0% வட்டியில், 12 மாதங்களில் திருப்பிச் செலுத்தும் கடனையும், ஒரு வருடத்துக்கு இலவச இணையம், மொபைல் மற்றும் இணைய வங்கியியல் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

காப்புறுதி மற்றும் குத்தகை நிறுவனங்கள், கார் பற்றரி, ஓடியோ மற்றும் பாதுகாப்பு அமைப்பு விநியோகஸ்தர்கள் மற்றும் வாகன மதிப்பீட்டாளர்கள் மற்றும் ஓட்டுநர் பள்ளிகள் உள்ளிட்ட Sterling நிறுவன பங்காளர் வணிகர்கள் வழங்கும் பல்வேறு சலுகைகளுக்கு மேலதிகமாக பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் விசேட சலுகைகள் மூலம் HNB-Sterling இணை வர்த்தகநாமம் கொண்ட டெபிட் அட்டை மற்றும் Sterling Steorra லோயல்டி அட்டை உரிமையாளர்கள் நன்மையடைவார்கள்.

இரண்டுமே வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவை நிறுவனங்களாக இருப்பதால், வர்த்தகநாமம் மீதான விசுவாசமானது நம்பிக்கை, நம்பகத்தன்மை, பணத்திற்கான பெறுமதி மற்றும் சேவையின் தரம் ஆகிய தூண்களில் தங்கியுள்ளது என்று நம்புகின்றது. Sterling Automobiles மற்றும் HNB ஆகியன தமது இரண்டு வர்த்தகநாமங்களும் தமக்கு விசுவாசமாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு Steorra பெறுமதி சேர்க்கும் என்று நம்புகின்றன.

“Sterling Automobiles எனும் அவர்களது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துச் செல்லும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாகும். அத்துடன் மலிவு விலையில் வாகனங்களை வாங்க முடிவது போன்றே சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாகவும் Sterling நிறுவனம் நாட்டு மக்கள் மத்தியில் சிறந்த நன்மதிப்பைப் பெற்றுள்ளது. HNB போன்றே அந்த நிறுவனம் பணத்திற்கு ஏற்ற பெறுமதியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக சிறந்த பிரபல்யமான சந்தை இலச்சினையாக துறையில் நிலைத்து நிற்கின்றது. அதனால் இந்த பங்குடைமையின் மூலம் எமது நம்பிக்கையான வாடிக்கையாளர் கட்டமைப்பிற்கு தேவையான உச்சளவு பெறுமதியை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.” என HNBஇன் வாடிக்கையாளர் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு (SME) வங்கி நடவடிக்கைகள் தொடர்பான பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் 252 வாடிக்கையாளர் நிலையங்கைளக் கொண்டுள்ள HNB, டிஜிட்டல் வங்கியியலில் புதிய முன்மாதிரியை முன்னோக்கி நகர்த்தும் நோக்கில் வெளிநாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலங்கையின் பிரமாண்டமான மற்றும் மிகுந்த தொழில்நுட்ப புத்தாக்கங்களைக் கொண்ட வங்கியாகும். வங்கி தொடர்ச்சியாக உள்நாட்டில் மற்றும் சர்வதேச ரீதியாக விசேட விருதுகளுக்கு தகுதி பெற்றுள்ளதுடன் அண்மையில் LMD சஞ்சிகையினால் முதல் முறையாக வெளியிடப்பட்ட 2019/20இல் நாட்டிற்குள் பல விருதுகளுக்கு தகுதி பெற்றிருந்த (Most Awarded) 50 நிறுவனங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு HNB தெரிவானது. சிறந்த சவால் நிறைந்த வெற்றிகரமான பொருளாதார சூழலுக்கு மத்தியில் வங்கி நிலையான வளர்ச்சி, செயற்பாடுகள் மற்றும் நிதி சேவைகள் பிரிவுகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மேம்பாடுகள் போன்ற அளவீடுகளை கருத்திற் கொண்டு ஏஷியன் பேங்கர் விருது வழங்கும் நிகழ்வில் 2020இல் இலங்கையில் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக 11ஆவது தடவையும் விருதுகளுக்கு தகுதி பெற்றதோடு 2019ஆம் ஆண்டுக்கான Best Corporate Citizen Sustainability என்ற விசேட விருது வழங்கும் நிகழ்வில் ஏழு விருதுகளை வென்றெடுத்தது.மேலும் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் (2017-2019) சர்வதேச நிதி சஞ்சிகையினால் சிறந்த நுண்நிதி வங்கியாகவும் HNB விருதுகளுக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் வங்கி தொடர்ச்சியாக பல விருதுகளை வென்றதுடன் ‘த பேங்கர்’ சஞ்சிகையினால் உலகில் சிறந்த 1000 வங்கிகள் பெயர் பட்டியலில் இடம்பிடித்தது. அத்துடன் பிஸ்னஸ் டுடே சஞ்சிகையினால் வெளியிடப்பட்டிருந்த இலங்கையின் சிறந்த 10 நிறுவனங்கள் (Business Today Top 10) பட்டியலிலும் மற்றும் CIMA மற்றும் ICCSL மூலம் நாட்டின் ‘சிறந்த மதிப்பிற்குரிய நிறுவனம்’ பட்டியலிலும் HNB தரப்படுத்தப்பட்டிருந்ததுடன் Fitch ratings மூலம் HNBஇன் தேசிய நீண்டகால வகைப்படுத்தல் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு அங்கு Fitch ratings இன் இரண்டு இடங்களைக் கடந்து மேலே சென்று ‘AA+(lka)’ கடன் தரப்படுத்தலைப் பெற்றுக் கொள்ள HNBக்கு முடிந்தமை விசேட அம்சமாகும்.

Steorra லோயல்டி திட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள, அழையுங்கள் 0117 600 800.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top