உலகாளவிய CHINT விருது விழாவில் இலங்கைக்கு ‘சந்தைப்படுத்தல் புத்தாக்க விருது 2020’

இலங்கையினால் அங்கீகரிக்கப்பட்ட, ஏக விநியோகஸ்தரான CHINT Energy (Pvt) Ltd நிறுவனத்திற்கு, 2021 ஜனவரியில் இடம்பெற்ற உலகளாவிய CHINT மாநாட்டில், பெருமைக்குரிய விருதான ‘சந்தைப்படுத்தல் புத்தாக்க விருது’ (‘Marketing Innovation Award’) வழங்கப்பட்டுள்ளது.

CHINT குளோபல் மாநாடு, இணைய வழி ஊடாக நடைபெற்ற இந்நிகழ்வில், 150 இற்கும் மேற்பட்ட உலகளாவிய விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய, CHINT Energy நிறுவனம் இந்த பாராட்டுக்குரிய விருதை வென்றுள்ளது. நிறுவனத்தின் மகத்தான சந்தைப்படுத்தல் சிறப்பபு, 100% வளர்ச்சி, வலுவான சந்தைப் பங்குகளையும் கொண்டிருந்ததான்  மூலம் இம்மைல்கல் எட்டப்பட்டுள்ளது..

CHINT Energy நிறுவனமானது, சந்தைப்படுத்தல் முயற்சிகளில் டிஜிட்டல் மற்றும் வழமையான சந்தைப்படுத்தல் ஆகிய இரு வழிமுறைகளிலும் புதுமையான சந்தைப்படுத்தல் நுட்பங்களை முன்னெடுத்து வருவதன் மூலம், அது தனது சந்தையின் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளது. CHINT Energy நிறுவனம், தனது முகவர் வலையமைப்பு மற்றும் தயாரிப்பு முதலீடுகளை விரிவுபடுத்தியுள்ள அதே நேரத்தில், CHINT அதன் வர்த்தக நாமம் மீது வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையையும் உருவாக்கி வருகிறது. COVID-19 தொற்றுநோய் பரவல் காரணமாக அதிக பாதிப்புகளைச் சந்தித்த வருடமான 2020ஆம் ஆண்டில் இந்நிறுவனம், மீள் எழுச்சியை மேற்கொண்டு, மட்டிட முடியாது வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.

இவ்விருது குறித்து CHINT Energy நிறுவனத் தலைவர், பஹாம் நௌமான் தெரிவிக்கையில், “இந்த முக்கியமான விருதைப் பெறுவதில் நாங்கள் பணிவுடன் பெருமை கொள்கிறோம். 150 நாடுகள் பங்குபற்றிய உலகளாவிய மாநாடொன்றில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். 24 மணி நேரமும் புதிய வெற்றிகளை அடையும் நோக்கில், அயராது உழைத்த எமது நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நாம் இவ்விருதை அர்ப்பணிக்க விரும்புகிறோம். இவ்வாறான ஸ்திரமற்ற போக்கைக் கொண்டுள்ள சந்தை நிலைமைகளிலும், விநியோகஸ்தர்களுக்கு ஆதரவு வழங்க முன்வந்த CHINT Global நிறுவனத்தின் பங்களிப்பை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.” என்றார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட, CHINT Energy நிறுவனத்தின் முகாமைத்துப பணிப்பாளர் காமில் ஹுஸைன் “இவ்விருதைப் பெறுவதில் நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். இந்த உலகளாவிய 2020 மாநாட்டில் சந்தைப்படுத்தல் கண்டுபிடிப்புகளை அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்ட ஒரேயொரு விருது இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்விருதை பெற்றுக் கொண்டதன் மூலம், எமது நாட்டுக்கு பெருமை சேர்ப்பதில் நாம் இன்னும் பெருமிதம் கொள்கிறோம். அர்ப்பணிப்பு மற்றும் உலகத்தரம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நாம் கொண்டுள்ளதன் மூலமே, இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. மிகத் திறமையான எமது குழுவே எமது வெற்றியின் தூணாக இருந்து வருவதோடு, இது போன்ற ஒரு அற்புதமான குழுவின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். “

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலங்க ரத்நாயக்க தலைமையிலான எமது நிறுவனத்தின் விற்பனை மற்றும் விநியோகக் குழுவின் தொலைநோக்கு பார்வையே, சந்தையில் CHINT Energy உச்சம் தொடுவதற்கு வழி வகுத்துள்ளது.

2019ஆம் ஆண்டில் CHINT Global நிறுவனத்திடமிருந்து அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் எனும் அந்தஸ்தை பெற்ற CHINT Energy நிறுவனம், நாடு முழுவதும் 25 வலுவான முகவர்கள் மூலம் தனது வலையமைப்பை விஸ்தரித்துள்ளது. CHINT Energy பரந்த அளவிலான ஸ்மார்ட் எனர்ஜி தீர்வு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் சுவிட்சுகள், சொகக்கட்டுகள், சர்க்யூட் பிரேக்கர்கள், பாதுகாப்பு சாதனங்கள், மோட்டார் கட்டுப்பாட்டு சாதனங்கள், கொன்ட்ரக்டர்கள், சூரிய ஆற்றல் உபகரணங்கள் (switches, sockets, circuit breakers, protection devices, Motor control devices, contractors, solar energy equipment) என பல சாதனங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் ஒரே கூரையின் கீழ் இவ்வாறான ஏராளமான தயாரிப்புகளைக் கொண்ட, அனைத்து ஸ்மார்ட் எனர்ஜி தீர்வுகளின் வழங்குநராக இருப்பதில் CHINT Energy பெருமிதம் கொள்கிறது. இது அதன் முதன்மை அனுபவ மையமொன்றையும் நிறுவியுள்ளது, இங்கு முழு CHINT தயாரிப்பு அம்சங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரே இடத்தில் அனைத்து தீர்வுகளையும் கொண்ட ‘One stop shop’ தீர்வு வழங்குநர் எனும் பாராட்டைப் பெற்ற, CHINT Energy நிறுவனமானது, இலங்கையர்களின் அனைத்து மின்சார மற்றும் ஸ்மார்ட் எனர்ஜி தேவைகளையும் பூர்த்தி செய்வதோடு, விற்பனைக்குப் பின்னரான வலுவான சேவைகளையும் முன்னெடுத்து வருகிறது. தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது முதல் விநியோக சேவைகள், தொழில்நுட்ப உதவிகள், மலிவு விலை கட்டமைப்பு, பிரத்தியேக தயாரிப்பு உத்தரவாதங்கள் வரை நிறுவனம் வழங்கும் முழுமையான சேவைகளை சில்லறை, மொத்த மற்றும் தொழில்துறை வாடிக்கையாளர்களிடையே CHINT Energy தனியான இடத்தை தனதாக்கியுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற விற்பனைக் குழுவினால் கையாளப்படும் விற்பனைக்குப் பிந்திய சேவைகளை வழங்குவதில் CHINT Enery புகழ் பெற்றுள்ளது. அவர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம், CHINT Enery நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளின் அளவை மேலும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top