இலங்கையில் முதலாவது Dell Concept காட்சியறையை திறந்துள்ள E-City

முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான E-City அண்மையில் Dell இன் மொத்த நுகர்வோர் தயாரிப்பு வரிசையைக் காட்சிப்படுத்தும் முதல் Dell Concept காட்சியறையை பம்பலப்பிட்டிய யுனிட்டி பிளாசாவில் ஆரம்பித்துள்ளது. Dell நுகர்வோர் தயாரிப்புகளுக்கான இந்த பிரத்தியேக காட்சியறையை ஆரம்பிக்க கணினி தொழில்நுட்பத்தின் உலகளாவிய முன்னணி நிறுவனமான Dell Technologies உடன் E-City கைகோர்த்துள்ளது.

மேம்பட்ட அனுபவத்தை வழங்க ஒரு பிரத்தியேக காட்சியறையாக நிறுவப்பட்டுள்ள, 350 சதுர அடி இடப்பரப்பைக் கொண்ட புதிய concept காட்சியறையானது வாடிக்கையாளர்களுக்கு Dell இன் நுகர்வோர் தயாரிப்புகளின் வரிசையை ஆராயவும், உண்மையான சுய-ஷொப்பிங் அனுபவத்தைப் பெறவும், தயாரிப்பு விலைகளை ஒப்பிட்டு அவர்களின் கனவு தயாரிப்புகளை பல வகையான தெரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது.

Dell Technologies தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளதுடன், தனிநபர் கணினிகள் / மடிகணினிகள் மற்றும் கணினி துணைப்பொருள்கள் ஆகியவற்றிற்கான உலகளாவிய சந்தையில் முன்னணி நிறுவனமாக உள்ளது. Dell Technologies உலகெங்கிலும் டிஜிட்டல் மாற்றத்திற்கு முன்னோடியாக உள்ளதுடன்,  ஒரு பிரத்தியேக Dell concept   காட்சியறைகள் ஒவ்வொரு இலங்கையருக்கும் தனிநபர் கணினிகள், மடிகணினிகள் மற்றும் பிற கணினி துணைப்பொருள்கள்  உள்ளிட்ட டெல்லின் அண்மைய தொழில்நுட்ப தீர்வுகளை வெளிப்படுத்துகிறது.

இந்த அறிமுக நிகழ்வில் உரையாற்றிய  E-Cityஇன் தலைவர் வசந்த தினுவன், “Dell தயாரிப்புகளின் சிறந்த வரிசையை ஒரே இடத்தில் பயன்படுத்தி அனுபவத்தைப் பெறுவதற்கான இடமாக E-City  திகழ்கின்றது. 2013 ஆம் ஆண்டில் நாங்கள் மீண்டும் செயற்பாடுகளைத் தொடங்கியதிலிருந்து, Dell நிறுவனத்துடன் ஒரு வலுவான உறவை உருவாக்கினோம். நாடு முழுவதும் எங்கள் வாடிக்கையாளர்களின் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்தோம். Dell concept காட்சியறையில் உள்ள எங்கள் குழு சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கவும், வாடிக்கையாளரின் வருகையை உண்மையிலேயே மறக்கமுடியாத ஒன்றாக மாற்றவும் உறுதிபூண்டுள்ளது,”என்றார்.

Dell Technologies இன் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான முகாமையாளர், கிரிஷான் பெர்ணான்டோ கருத்து தெரிவிக்கையில், “டெல் வர்த்தகநாமம் பல இலங்கையர்களின் இதயங்களுக்கு நெருக்கமாக உள்ளது, ஏனெனில் நாங்கள் நீண்ட காலமாக இலங்கை சந்தையில் செயல்பட்டு வருகிறோம். இலங்கையில் முதன் முதலில் Dell concept காட்சியறையை தொடங்க E-City உடன் இணைந்தமை தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கருத்துக் காட்சியறை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும், மேலும் அவர்களின் பழுது மற்றும் விற்பனைக்கு பின்னரான சேவை தேவைகள் அனைத்தும் மிகுந்த கவனத்துடன் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யும்,”என்றார்.

இந்த முழுமையான காட்சியறை கொழும்பின் மையத்தில் ஒரு உயர்தர வணிக மையத்தில் அமைந்துள்ளமையானது வாடிக்கையாளர்களுக்கு வசதியான அணுகலை வழங்குகிறது. E-City குழு, முழுமையான Dell நுகர்வோர் தயாரிப்பு வரிசையையும் நன்கு அறிந்திருக்கின்றமையால் வாடிக்கையாளர் தங்களுக்கு ஏற்ற தயாரிப்புகளைத் தெரிவு செய்ய உதவுகிறது. இங்கு வருகை தரும் எந்தவொரு வாடிக்கையாளருக்கும் மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுகின்றமை நிச்சயமாக காணக்கிடைக்கும் காட்சியாகும். வாடிக்கையாளரை வரவேற்பதில் இருந்து தயாரிப்புகளை பார்வையிடல், நிபுணர் ஆலோசனை வரை உதவி செய்வதுடன், ஒவ்வொரு வாடிக்கையாளரும் முழுமையாக திருப்தி அடைவதை உறுதிசெய்ய  E-City குழு மிகவும் திறமையான மற்றும் வேகமான சேவையை வழங்குகிறது.

இந்த புதிய தொடர்பில் தனது கருத்தை வெளியிட்ட Dell Technologies இன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வாடிக்கையாளர் மற்றும் நிறுவன விநியோகத்துக்கான தலைமை அதிகாரி ஆபிட் அஸ்லாம் கருத்து தெரிவிக்கையில், “Dell தயாரிப்புகள் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை வர்த்தகநாமத்துடனான ஈடுபாட்டின் மூலம் பலப்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைவதற்காக புதிய concept காட்சியறை தொடங்கப்பட்டதுடன், இது உண்மையில் சிறந்த சேவைகளை வழங்கும் பல்நோக்கு வர்த்தகநிலையமாக செயல்படும்,” என்றார்.

E-City அதன் சிறந்த விற்பனைக்கு பின்னரான சேவைக்கு நன்கறியப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட Dell Concept காட்சியறையானது Dell நுகர்வோரின் அனைத்து பழுதுபார்க்கும் தேவைகளையும் முழு வெளிப்படைத்தன்மை மற்றும் கவனத்துடன் பூர்த்தி செய்யும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top