“ஒவ்வொரு இலங்கையரையும் ஒன்றென கருதும்” என்ற நோக்கு நிலையுடன் தனது வர்த்தகநாமத்தை வெற்றிகரமாக புதுப்பித்துள்ள அமானா தகாஃபுல் காப்புறுதி

இலங்கையின் முதற்தர முழுமையான தகாஃபுல் காப்புறுதி நிறுவனமான அமானா தகாஃபுல் காப்புறுதி, புதிய வணிகச் சின்னம் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் அதன் நீண்டகால சேவை நோக்கு நிலையை வலியுறுத்தும் உயிரோட்டமான வர்த்தகநாம செய்தியுடன் வெற்றிகரமாக தனது வர்த்தகநாமத்தை புதுப்பித்துள்ளது.

வழக்கமான காப்புறுதியைப் போலல்லாமல் தகாஃபுல், காப்பீட்டாளர் மற்றும் காப்புறுதியுறுநர் ஆகிய இரு சாராருக்குமான வெற்றியாகும் என்பதனை உணர்ந்தமையால், இது அனைத்து இலங்கையர்களுக்கும் இலாபகரமான வாய்ப்புகளை வழங்குகின்றது.

அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ், ‘ஒவ்வொரு இலங்கையரையும் ஒன்றென கருதும்’ என்று தனது எண்ணக்கருவை புதுப்பிப்பதானது, அதன் நீண்டகால சேவை நோக்கு நிலை செய்தியை முன்னிலைப்படுத்துகின்றது.

அமானா தகாஃபுல் பி.எல்.சி. நிறுவனத்தின் தலைவர் ஒஸ்மான் காசிம் நிறுவனத்தின் புதிய பார்வை தொடர்பில் விளக்கமளிக்கையில், “அமானா தகாஃபுல் காப்புறுதி 22 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 30 மில்லியன் மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. எங்கள் அணுகுமுறையில் சில முக்கிய மூலோபாய மாற்றங்களுடன், இப்போது நாங்கள் முதன்மை நிலைக்கு வந்துள்ளோம். “ஒவ்வொரு இலங்கையரையும் ஒன்றென கருதும்” என்பதே எமது தொடர்ச்சியான நிலையாக இருந்துள்ளது. “ஒவ்வொரு இலங்கையரையும் ஒன்றென கருதும்” என்பதன் உண்மையான அர்த்தம் நாம் அனைத்து இலங்கையர்களுடனும் நிற்கின்றோம் என்பதாகும். ஏதேனும் ஒன்று இயல்பாகவே நியாயமானதாகவும் நல்லதாகவும் இருக்கும்போது, ​​மக்கள் அதை உணர்ந்து அதற்கு வருகிறார்கள்” என்றார்.

தலைவர் காசிம் மேலும் தெரிவிக்கையில்; ““தகாஃபுல்” என்பது ‘ஒருவர் மற்றொருவரை பாதுகாப்பது’ என்பதாகும். ஒருவர் அமானா தகாஃபுலில் காப்புறுதி மேற்கொண்டால், காப்பீட்டு நிதியில் இருந்து உபரியின் ஒரு பகுதியை பெறுவதற்கான வாய்ப்பு அவருக்கு  உள்ளது. அதில், அமானா தகாஃபுல் ஒரு நிதி முகாமையாளராக, ஒன்றாக ஒவ்வொரு இலங்கையருக்கும் நன்மைகளை வழங்குகிறது.

அமானா தகாஃபுல் கடந்த 250 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள காப்புறுதித் துறையின் நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், மேலும் அவை இன்றியமையாதவை என்றும் சமரசத்துக்குட்பட்டவை அல்ல என்றும் நம்புகிறது. காப்புறுதியில் சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், தகாஃபுல் எப்போதுமே தொழில்துறையில் ஏனையோருக்கு இணையாக அல்லது அவற்றை விட சிறந்ததாக திகழ்கின்றது.

அமானா தகாஃபுல் காப்புறுதி இலங்கையில் தக்காஃபுல் எண்ணக்கருவின் முன்னோடியாகும். மேலும் இலங்கையில் உள்ள முழு அளவிலான தகாஃபுல் காப்புறுதி நிறுவனமாகும்.

அமானா தகாஃபுல் காப்புறுதி மக்கள் நட்பு நெறிமுறை நடைமுறைகளை அதன் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருக்கிறது, மேலும் அது இலங்கையில் உள்ள முழுமையான தகாஃபுல் காப்பீட்டு நிறுவனமாகும். இலங்கை சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒட்டுமொத்த சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ப அமனா தகாஃபுல் முழுமையான ஆயுள் மற்றும் பொது காப்பீட்டுத் தீர்வுகளையும், சுகாதார காப்பீட்டுக் கொள்கைகளையும் வழங்குகிறது.

மேலதிக விபரங்களுக்கு வாடிக்கையாளர்கள் 011 750 1000 என்ற துரித அழைப்பு இலக்கத்தை அழைப்பதன் ஊடாகவோ,  www.takaful.lk  என்ற இணையத்தளத்தின் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top