Sterlingcars.lk – வாகனங்களை வாங்கவும், விற்பனை செய்யவதற்குமான புதிய ஒன்லைன் சந்தை

இலங்கையின் பிரபல ஒட்டோமொபைல் சேவை வழங்குனரான Sterling Automobiles Lanka Pvt Ltd நிறுவனம், SterlingCars.lk என்ற இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையத்தளமானது வாகனங்களை கொள்வனவு செய்வதற்கும், விற்பனை செய்வதற்குமான தளமாக இயங்கவுள்ளது. இந்த இணையத்தளமானது பல்வேறு வகையான வர்த்தகநாமங்கள் மற்றும் மொடல்களின் விரிவான வாகன வரிசையை வழங்குகின்றது.

SterlingCars.lk இன் வடிவமைப்பு நுகர்வோருக்கு இலவசமாக, எளிமையான, வேகமான மற்றும் நம்பகமான கொள்வனவு மற்றும் விற்பனை அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இணையத்தளத்தின் மூலம் Sterling Automobiles அனைத்து பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத கார்களுக்கான ஒன்லைன் விற்பனையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், இது வாகனம் கொள்வனவு செய்பவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் ஒரு வாகனத்திற்கான சரியான மதிப்பைப் பெற கூடிய சிறந்த தளமாக இருக்கும் என்று நம்புகிறது.

சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களின் வலையமைபின் மூலம்ஸ்டெர்லிங் கார்கள்.காம் வாடிக்கையாளர்களுக்கு Sterling Aftercare (விற்பனையின் பின் சேவை) உத்தரவாதத்துடன் வாகனங்களை வாங்க உதவும், மேலும், Sterling Aftercare நிலையத்திலிருந்து, Multipoint Inspection சான்றிதழைப் பெற்ற வாகனங்களை இந்த தளம் வேறுபடுத்துகிறது – அதாவது விற்பனைக்கு வரும் வாகனம் பரிசோதிக்கப்பட்டு அதன் நிலை Sterling Aftercare நிலையத்தில் உள்ள நிபுணத்துவம் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்களால் சான்றளிக்கப்படுகின்றது. இந்த எண்ணக்கரு, விற்பனைக்கு வரும் வாகனங்களுக்கு பெறுமதி சேர்க்கும் என்பது மட்டுமல்லாமல், வாகனத்தின் தரம் குறித்து கொள்வனவு செய்பவர்களுக்கு இது ஒரு உத்தரவாதத்தையும் வழங்கும். மேலும், இந்த இணையத்தளம் வழியாக விற்கப்படும் வாகனங்கள், விற்பனை செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருட காலப்பகுதிக்குள் Sterling Aftercare நிலையத்திலிருந்து முழு labour free சேவைகளுக்குமான தகுதியை பெறும்.

மேலும், Sterling Aftercare நிலையத்திலிருந்து ஒட்டோமொபைல் சேவைகள் மற்றும் பழுதுபார்ப்புகளைப் பெற்றவுடன், SterlingCars.lk வழியாக தங்கள் வாகனங்களை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களுக்கும் Sterling Aftercare நிலையத்தின் Sterling Steorra Loyalty திட்டத்தில் சேரும் தகுதியைப் பெறுவர். இந்த Steorra Loyalty திட்டம் வாடிக்கையாளர்களுக்கு Sterling-HNB இணை டெபிட் அட்டையை பெற்று அவர்கள் பெற்றுக்கொள்ளும் loyalty புள்ளிகளை பணமாக மாற்ற உதவும்.

SterlingCars.lk இன் மற்றொரு முக்கிய அம்சம் அதன் leasing quotation generation (குத்தகை மேற்கோள் உருவாக்கல்) அம்சமாகும். உதாரணமாக, வாகனம் கொள்வனவு செய்பவர்கள், வாகனங்கள் வழியாகவும், ஒரு குறிப்பிட்ட வாகன பட்டியலைத் தெரிந்தெடுப்பதன் மூலமாகவும், அவர் அந்த வாகனத்திற்கு செலுத்த வேண்டிய குத்தகைத் தவணை பற்றிய தகவல்களைப் பெறலாம். இதை செயற்படுத்த, வாகன கொள்வனவாளர்களுக்கு ஒரு முழுமையான தீர்வை வழங்கும் நோக்கத்துடன் Sterling Cars நாட்டிலுள்ள முன்னணி நிதி நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது.

இந்த இணையத்தளமானது பாவனையாளர்கள் தடையின்றி விளம்பரங்களை பதிவேற்ற அனுமதிப்பதுடன்,  இடுகையிட்ட 2 -3  மணி நேரத்திற்குள் அவை காட்சிப்படுத்தப்படும். எல்லா விளம்பரங்களும் சரிபார்த்தல் மற்றும் ஒப்புதல் செயல்முறைக்கு உட்படுத்தப்படும். அவை தளத்தின் பயன்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா?, மேலும் வெளியிடப்பட்ட தகவல்கள் உண்மையானவை மற்றும் முடிந்தவரை உண்மையானவை என்பதை உறுதிசெய்கின்றன.

மேசை கணினிகள், மொபைல்கள், டெப்கள் மற்றும் எல்லா சாதனங்களிலும் ஊடாடும் பயனர் அனுபவத்தை வழங்குவதற்கும் பயன்பாட்டின் எளிமையை மேம்படுத்துவதற்கும் இந்த தளம் ஏற்றதாக உள்ளது. நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவுகளை உருவாக்க திட்டமிட்டுள்ள ஒரு நிறுவனமாக  Sterling Automobiles Lanka இயங்குகிறது, இலங்கையில் ஒரு ஒட்டோமொபைல் வைத்திருக்கும்போது, ​​தீர்வுகளின் மொத்த அம்சத்தையும் வழங்கும் தளமாக அவர்களின் பயணத்தில் இது ஒரு படியாகும் என்று நம்புகிறது.

Sterling Automobiles என்பது Sterling Aftercare உத்தரவாதத்தின் கீழ் Sterling Japan ஆல் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும் மறுசீரமைக்கப்பட்ட ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய வாகனங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட உரிமம்பெற்ற சேவை வழங்குநராகும். இந்நிறுவனம் Sterling Aftercare நிலையங்கள் என அறியப்படும்,  வாகனங்களுக்கு விற்பனைக்குப் பின்னரான சேவைகளை Sterling Aftercare  உத்தரவாதத்துடன் வழங்கும் ஆறு அதிநவீன வளாகங்களை இயக்குகிறது. மஹர, உடஹாமுல்ல, இரத்மலானை, துனகஹா, நாரஹன்பிட மற்றும் காலி ஆகிய இடங்களில் அமைந்துள்ள Sterling Aftercare  நிலையங்கள் முழு அளவிலான வளாகங்களென்பதுடன், அவை எந்தவொரு வாகன சம்பந்தப்பட்ட சேவையையும் எந்தவொரு விவேகமான வாகன உரிமையாளருக்கும் வழங்க உதவுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top