“யூனியன் லைஃப்ஸ்டைல் போனஸ்” ஊடாக ஆரோக்கியமான வாழ்க்கை

ஆயுள் காப்புறுதிதாரர்கள் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பதை உறுதி செய்யும் வகையில், யூனியன் அஷ்யூரன்சின் புத்தாக்கமான “யூனியன் லைஃவ்ஸ்டைல் போனஸ்” ஊடாக ஆரோக்கிய நலன் தொடர்பான சேவைகளுக்கு விலைக்கழிவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காப்புறுதிதாரரின் நலனை மேம்படுத்தும் வகையில், யூனியன் லைஃவ்ஸ்டைல் போனஸ் ஊடாக, நவலோக ப்ரீமியர் வெல்னஸ் சென்ரர் மற்றும் முன்னணி மூக்குக்கண்ணாடி சேவைகளை வழங்கும் எரிக் ராஜபக்ஷ மற்றும் விஷன் கெயார் ஆகியவற்றில் பெறுமதி வாய்ந்த விலைக்கழிவுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நவலோக வெல்னஸ் சென்ரரில், காப்புறுதிதாரர்களுக்கு பரந்தளவு சுகாதார பராமரிப்பு சேவைகளை விசேட விலைக்கழிவுகளுடன் பெற்றுக் கொள்ள முடியும். விஷன் கெயாரில் மூக்குக் கண்ணாடிகள், சன் கிளாஸ்கள் மற்றும் கேட்டல் குறைபாட்டை சீர் செய்யும் சாதனங்களுக்கு 10% விலைக்கழிவையும், எரிக் ராஜபக்ஷ ஒப்டிஷியன்சில் மூக்குக் கண்ணாடிகள் மற்றும் சன் கிளாஸ்கள்களுக்கு 15% விலைக்கழிவையும் பெறலாம்.

புத்தாண்டில் வாடிக்கையாளர்களுகு;கு சிறந்த வாழ்க்கைமுறை தீர்வுகளை வழங்குவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இந்த விசேட வெகுமதிகளையும் வழங்கி வருகின்றது. இதனூடாக காப்புறுதிதாரர்கள் தமதும், தமது குடும்பத்தாரினதும் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டுள்ளமையை உணரக்கூடியதாக இருக்கும்.

வாடிக்கையாளர்களுக்கு “உங்கள் வாழ்க்கையை இன்றே அனுபவிக்கையில், உங்கள் நாளையை தினத்தை நிறுவனம் பாதுகாக்கும்” எனும் உறுதிமொழிக்கமைய, இந்த திட்டத்தினூடாக, காப்புறுதிதாரர்களுக்கு கவர்ச்சிகரமான விலைக்கழிவுகள் வழங்கப்படுவதுடன், அதனூடாக அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.

வாடிக்கையாளர்கள் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி ஒன்றுக்கு 2020 மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்து கொண்டு இந்த சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம். மாதாந்தம் ரூ.15,000 க்கு அதிகமான தொகையை கட்டுப்பணமாக செலுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதிதாரர்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.

இலங்கையின் மாபெரும் ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இலங்கையின் மாபெரும் பன்முகப்படுத்தப்பட்ட குழுமமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் துணை நிறுவனமாக அமைந்துள்ளதுடன், நிறுவனத்தின் உறுதியான, விறுவிறுப்பான மற்றும் சேவை நோக்கைக் கொண்ட நிபுணர்களினூடாக வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு புத்தாக்கமான ஆயுள் காப்புறுதி தீர்வுகள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு, காப்புறுதிதாரர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுகின்றது.

மேலதிக தகவல்களுக்கு அழைக்கவும் 011 2 990 009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *