பெண்கள் வலுவூட்டல் மீதான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தும் Pelwatte

Pelwatte Dairy Industries, 100 இற்கு மேற்பட்ட பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் மற்றும் பாற்பண்ணைத் துறையில் பணியாற்றும் 1200 க்கும் மேற்பட்ட பெண்களை வலுவூட்டியதன் மூலம் சரியான நேரத்தில் சமூக முயற்சிக்கு மேற்கொண்ட அர்ப்பணிப்பின் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளது. பணியிடத்தில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை கடைபிடிப்பது தொடர்பான அதன் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க Pelwatte நிறுவனம் World Vision International உடன் இணைந்து கிராமிய சமூகங்களில் பெண்களுக்கு ஆதரவாக பல திட்டங்களைத் தொடங்கியது. இந்த திட்டங்கள் பண்ணை பால் சேகரிப்பு, தன்னியக்க முறை, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் விவசாய முயற்சியாண்மை நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கியிருந்தது.

Pelwatte ஒரு பாகுபாடற்ற தொழில் தருனர் கொள்கையை பின்பற்றுவதுடன் பெண்களின் தேவைகள் மீது விசேட கவனம் செலுத்துவது மட்டுமன்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம் மற்றும் நெகிழ்வான வேலை நேரத்தை வழங்குகிறது. இந்நிறுவனம், போஷிக்கப்படும் துணை தொழிற்துறைகளின் வளர்ந்து வரும் தொழிற்படையினுள் உள்ள பால் விநியோகஸ்தர்கள் மற்றும் பாற்பண்ணையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த, Pelwatte Diary Industries இன் மனிதவள முகாமையாளர் ஹர்ஷான் கருத்து தெரிவிக்கையில், ” பெரும்பாலும் ஆண்கள் நிறைந்த ஒரு தொழிற்துறையில், 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எங்கள் தலைமைத்துவ சபை மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தில் குறைந்தது 25% பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தும் வழி முறைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் Pelwatte சம வாய்ப்பு வழங்கும் தொழில் தருனராக திகழ்வதை நாங்கள் உறுதிசெய்கிறோம். எங்கள் அபிவிருத்தி முயற்சிகள், கள உத்தியோகத்தர்கள் மற்றும் எங்கள் சமூக முகாமையாளர்கள் எங்கள் தொலைநோக்குப் பார்வை மற்றும் திட்டங்களை அடைவதற்கு உண்மையிலேயே உறுதுணையாக உள்ளனர்,” என்றார்.

பெண்களை வலுவூட்டும் பல்வேறு திட்டங்களை World Vision International (WVI) உடன் இணைந்து  Pelwatte Industries முன்னெடுக்கின்றது. Pelwatte நிறுவனம் WVI உடன் இணைந்து பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு கால்நடைகளை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், கால்நடை கொட்டகை மற்றும் தீவன உற்பத்தி மையங்களை நிறுவ உதவியுள்ளது. WVI இன் பாலுற்பத்தி அபிவிருத்தி திட்டம் பால் உற்பத்தியின் தரம் மற்றும் சிறிய அளவிலான பால் விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. தொழில்நுட்ப பயிற்சி, வணிக பயிற்சி மற்றும் பாலைக் கையாளுதல் மற்றும் கால்நடை முகாமைத்துவம் ஆகியவற்றில் அறிவை வளர்ப்பதன் மூலம் இந்த திட்டம் திறனை கட்டமைக்கின்றது. இந்த திட்டம் பாலுற்பத்தியாளர்களின் குழுக்களை நிறுவி, குளிரூட்டும் வசதிகளுடன் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நுவரெலிய மாவட்டத்தில் உள்ள அனைத்து பால் சார்ந்த தொழில்களுக்கும் பால் உற்பத்தியில் அண்மைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தித்திறனை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து தேவையான அறிவுடன் பயிற்சி அளிக்கப்படும்.

Pelwatte ஒரு உண்மையான இலங்கை வர்த்தகநாமமாகும். இது பெண்களுக்கு சமமான வாய்ப்புகளைக் கொண்ட ஒரு உள்ளடங்கலான சமூகத்தை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளது. Pelwatte நிறுவனத்தின் பெற்றோர் லீவு திட்டத்தின் பயன்பாட்டை ஊக்குவித்தல், ஆற்றல் கொண்ட சிரேஷ்ட நிர்வாகிகளாக மாறுவதற்கு பெண்களை வலுவூட்டல் மற்றும் உதவுதல், பாலின சமநிலையை மேம்படுத்துதல் மற்றும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துதல் போன்ற முயற்சிகள் Pelwatteவின் சிறந்த பணியிட நெறிமுறைகளை ஊக்குவிக்கும் பயணத்தின் முக்கிய சிறப்பம்சங்களாகும். Pelwatte சம ஊதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளதுடன், பெண்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளில் பாலின ஊதிய இடைவெளிகளை குறைப்பதில் முன்னோடியாக உள்ளது.

ஹர்ஷான் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘’குறைவான பிரதிநிதித்துவம் மற்றும் வணிக முகாமைத்துவத்தில் சம ஊதியம் இல்லாதது முதல் விவசாயத் தொழிலாளர்களுக்கு பயிற்சி, கருவிகள் மற்றும் நிதி ஆகியவற்றிற்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் வரை, பெண்கள் தொடர்ந்து தங்கள் பணியிடங்களில் சவால்களை எதிர்கொள்கின்றனர். பாலின சமத்துவத்தை உருவாக்குவது மற்றும் பெண்களின் உரிமைகள், கல்வி மற்றும் வலுவூட்டல் ஆகியவற்றை ஆதரிப்பது எங்கள் வணிகத்திற்கான பகிரப்பட்ட மதிப்பை உருவாக்குவதில் முக்கியமானதாகும். பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் தொடர்ந்து கையாள்வோம், மேலும் ஆண்களைப் போலவே அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வோம்,” என்றார்.

இந் நிறுவனத்தில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சிரேஷ்ட தர உத்தரவாத முகாமையாளர் திருமதி சசிகலா தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கையில், “நான் 11 ஆண்டுகளுக்கு முன்பு Pelwatte Dairy Industriesஇல் ஒரு நுண்ணுயிரியலாளராக பணியாற்றத் தொடங்கினேன். பின்னர் உதவி தர உத்தரவாத முகாமையாளராகவும் பின்னர்  முகாமையாளராகவும் இந்த பதவியை வகிப்பதற்கு முன்பு பணியாற்றினேன். எனது பிரிவில் நான் மட்டுமே பெண், ஆனால் சக ஊழியர்களும் ஒட்டுமொத்த கலாசார அமைப்பும் மிகவும் உறுதுணையாக இருக்கின்றன. எனது வேலையின் ஒரு பகுதியாக, தாமதமான மாலை நேரங்களில் கூட, அடிக்கடி கள விஜயத்துக்காக நான் நியமிக்கப்படுவதுண்டு, ஆனாலும் நான் எப்போதும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர்கின்றேன். எனக்கு விருப்பமான வேலை நேரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த நட்பான சூழலைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”, என்றார்.

Pelwatte பெண்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் அனைவருக்கும் பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்கிறது. எந்தவொரு வாய்மொழி அல்லது உடல் ரீதியான துன்புறுத்தல் அல்லது பணியிடத்தில் பாகுபாடு ஆகியவற்றை இல்லாதொழிக்க அனைத்து ஊழியர்களும் தெளிவாக வரையறுக்கப்பட்ட, நடத்தை நியமங்களை பின்பற்ற வேண்டும் என்று நிறுவனம் கோருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top