“அவுருது வாசி” பிரசாரத்தை அறிவித்த VIVO : V, Y தொடர் ஸ்மார்ட்போன் கொள்வனவுடன் கவர்ச்சிகர பரிசுகள்

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் பருவகால பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த பிரசாரத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் போது டீ- சேர்ட்கள், பரிசுப் பெட்டிகள் மற்றும் வேறு பெறுமதியான பரிசுப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் V20, V20 SE, Y12s, Y20, Y20s மற்றும் Y51  ஆகியவற்றிலிருந்து தொடங்கி வெவ்வேறு மொடல்களின் வரிசையிலிருந்து தெரிவு செய்துகொள்ள முடிவதுடன் அங்கீகரிக்கப்பட்ட vivo விநியோகஸ்தர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள விற்பனையகங்களில் இருந்து இந்த சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த  vivo Sri Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங், “நுகர்வோரை மையமாகக் கொண்ட ஒரு வர்த்தகநாமமாக, அவர்களின் பண்டிகை மனநிலைகள் மற்றும் தருணங்களுக்கு பங்களிப்பதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை வழங்குவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த பிரசாரத்தின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சலுகைகள் மூலம் மகிழ்ச்சி அளிக்க விரும்புகிறோம். மேலும் வாழ்க்கையை வளமாக்கும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களை நெருக்கமாக கொண்டு வர விரும்புகிறோம்,” என்றார்.

vivo அதன் Y தொடரின் கீழ் ஆற்றல் நிறைந்த ஸ்மார்ட்போன்களை வழங்குகிறது – Y12s, Y20, Y20s மற்றும் இந்தத் தொடரின் அண்மைய வெளியீடு Y51. இந்தத் தொடர் அதன் ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு சக்தி வாய்ந்த அம்சங்களான சிறந்த கெமரா, நீண்ட நேரம் நீடிக்கும் battery ஆயுள், பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பங்கள் மற்றும் கவர்ச்சிகரமான விலையில் மேம்பட்ட பயனர் அனுபவத்திற்கான ஸ்டைலான வடிவமைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. மறுபுறத்தில், V20 தொடரின் மெலிதான தோற்றம், இலகு எடை மற்றும் தனித்துவமான நிறங்கள் ஆகியவை பாவனையாளர்கள் உணர்வை வெளிப்படுத்தும் வாழ்க்கைமுறை மற்றும் ஆடம்பர உணர்வை சிறந்த கெமரா அம்சங்களுடன் அனுபவிக்க இயலுமைப்படுத்தும் vivoவின் விருப்பத்தை வலுவாக பிரதிபலிக்கின்றன. Y தொடர் ஸ்மார்ட்போன்கள் முழுமையான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்கும் அதே வேளையில், முதற்தர V தொடர் மேம்பட்ட கெமரா அம்சங்கள் மற்றும் உறுதியான நவநாகரிக வெளிப்பாட்டுக்கான நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் மீள்வரையறை செய்யப்பட்ட செல்ஃபி திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் புகைப்பட பிரியர்கள் மென்மேலும் ஆராய V தொடரில் Super Night பயன்முறை, Ultra Stable வீடியோ போன்ற பல அம்சங்களும் உள்ளன.

இது ஒரு குறிப்பிட்ட கால சலுகையாகும், இருப்பு கையிலிருக்கும் வரை செல்லுபடியாகும். vivo தயாரிப்புகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, தயவுசெய்து vivo Sri Lankaவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.vivo.com/lk மற்றும் vivoவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமான vivo Sri Lankaவை பார்வையிடவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top