WNPS உடன் இணைந்து கண்டல் தாவர மீளுருவாக்கத்திற்கு தலைமை தாங்கும் ஹேமாஸ் Consumer

அழகு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணி உற்பத்தியாளரான ஹேமாஸ் Consumer, உயிரியற் பல்வகைமை பாதுகாப்புக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் ஆனவிலுந்தாவ ஈரநில சரணாலயத்திற்குள் ஒரு விஞ்ஞான ரீதியான கண்டல் தாவர மீளுருவாக்க திட்டத்திற்காக  வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் (WNPS) கைகோர்த்துள்ளது.

தெரிந்தெடுக்கப்பட்ட காணித் துண்டுகளில் கண்டல் தாவரங்களை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் மூன்று ஆண்டுகளுக்கு WNPS உடன் ஹேமாஸ் நெருக்கமாக பணியாற்றும். இந்த திட்டமானது தங்கொட்டுவையில் உள்ள ஹேமாஸ் உற்பத்தி தொழிற்சாலைக்கு அருகிலேயே உள்ளது. கண்டல் தாவர மறுசீரமைப்புக்கான முழுமையான அணுகுமுறையின் உதவியுடன், இந்த 3 ஆண்டு கால திட்டம், மீட்டெடுக்கப்பட்ட கண்டல் தாவரங்களை அனைத்து தரப்பினரதும் சீரான கண்காணிப்புடன் செழிக்கும் வரை கவனமாக வளர்க்கப்படுவதை உறுதி செய்யும்.

பங்கேற்பு மூலமாகவும், எதிர்கால சந்ததியினருக்கு கண்டல் தாவரங்களை மீட்டெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து அருகிலுள்ள சமூகங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் தங்கொட்டுவை தொழிற்சாலை இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும். விழிப்புணர்வு அமர்வுகளை நடத்துவதன் மூலம் கண்டல் தாவர பாதுகாப்பில் உள்ளூர் சமூகங்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதில் WNPS உடன் ஹேமாஸ் குழு முக்கிய அங்கமாக இருக்கும். கடந்த 30 ஆண்டுகளில் இலங்கையின் கண்டல் தாவர காடுகளில் 50% க்கும் மேற்பட்டவை அழிக்கப்பட்ட பின்னணியில் இந்த நீண்டகால திட்டம் பலனளிக்கிறது. இதன் முக்கியமான கூறு என்னவெனில், நிதியத்தின் ஒரு பகுதி விஞ்ஞான ஆய்வு மற்றும் தொடர்ச்சியான பகுப்பாய்வு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் அளவீடு ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்டல் தாரவங்கள் உலகின் மிகவும் ஆக்கவளமுடைய சூழல் அமைப்புகளில் ஒன்றாகும், அவை  ஆயிரக்கணக்கான விலங்கினங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவளிக்கின்றன. மேலும் வெப்பமண்டல காடுகளை விட 4 மடங்கு அதிகம் கார்பனீரொக்சைட்டை (CO2) உறிஞ்சுவதாகவும், புயல்கள், சுனாமிகள் மற்றும் வெள்ளங்களிலிருந்து சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அவை குளம் மற்றும் முகத்துவாரங்களை அரிப்புகளிலிருந்து பாதுகாக்கின்றன, கரையோர கடற்கரை நீரின் மாசுபாட்டைக் குறைக்கின்றன. மேலும், பொழுதுபோக்கு மைதானங்களையும் பறவைகளை பார்த்து ரசிக்கும் வாய்ப்புகளையும், எரிபொருளுக்கான விறகினையும் மற்றும் மேலும் பலவற்றையும் வழங்குகின்றன. இறால் பண்ணைகள் கட்டுவது, மாசுபடுத்தும் பொருட்களை வெளியேற்றுவது, சட்டவிரோத கட்டுமானங்கள், நகரமயமாக்கல் மற்றும் சுற்றுலா போன்ற அதிகப்படியான மனித செயல்பாடுகளால் இந்த பல்துறை சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆபத்தில் உள்ளன.

ஆனவிலுந்தாவ ஈரநிலம் 1,397 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளதுடன், இது ரம்சார் சாசனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் ஆறு நியமிக்கப்பட்ட ஈரநிலங்களில் ஒன்றாகும். நூற்றுக்கணக்கான பறவை இனங்கள், மீன் இனங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஒரு சரணாலயமாக இருப்பதுடன், ​​ஆனவிலுந்தாவ சுற்றுச்சூழல் அமைப்பு கிராமவாசிகளுக்கு ஒரு வாழ்வாதாரத்தை பெற்றுத்தர பெரிதும் பயனளித்துள்ளது.

ஹேமாஸ் Consumer  மற்றும் WNPS உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஹேமாஸ் கொன்ஷியுமர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஃபியோனா ஜுரியான்ஸ் முனசிங்க,

“மனித நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள ஆனவிலுந்தாவ ஈரநிலத்தை சுற்றியுள்ள கண்டல்தாவர சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டத்தைத் சரியான நேரத்தில் தொடங்க வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்,  மனித நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. இலங்கையின் சுற்றுச்சூழல் வளங்கள் சில காலமாக அதிவேகமாக குறைந்து வருகின்றன, அவை நம் கட்டுப்பாட்டிலிருந்து விலகுவதற்கு முன்பு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய முக்கியமான நேரம் இதுவாகும். நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பற்றிய மிகுந்த விழிப்புடன் இருக்கும் ஒரு நிறுவனம் என்ற முறையில், ஹேமாஸ் எப்போதுமே இயற்கை பாதுகாப்பு முயற்சிகளில் முன்னணியில் இருந்து வருவதுடன், இதுபோன்ற திட்டங்களுக்கு தொடர்ந்து நிதியுதவியும் அளித்து வருகின்றது. இதனை எதிர்காலத்திலும் நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். ஒரு உண்மையான இலங்கை நிறுவனமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் குறைப்பு, மீள்சுழற்சி மற்றும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மேம்படுத்தப்பட்ட கார்பன் அடிச்சுவடுகளை நோக்கி நாம் எடுக்கும் பல முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். ஹேமாஸின் மிகவும் புகழ்பெற்ற இரண்டு வர்த்தகநாமங்களான பேபி செரமி மற்றும் குமாரிகா ஆகியவை இந்த திட்டங்களுக்கு முன்னோடியாக உள்ளதுடன், மேலும் இந்த திட்டத்திற்கு முக்கிய ஆதரவாளர்களாகவும், பசுமையான இலங்கையை வளர்ப்பதற்கான அவர்களின் முயற்சிகளிலும் அவர்கள் உரிய ஆதரவை வழங்குகிறார்கள்,”என்றார்.

வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பேசுகையில் கடல்சார் செயற்குழு தலைவர் கிரஹாம் மார்ஷல் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் கண்டல் தாவர காப்பானது தற்போது மொத்த நிலப்பரப்பில் 0.32% ஆக உள்ளதுடன், மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த திட்டத்தில் ஹேமாஸுடன் இணைவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த விலைமதிப்பற்ற சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம். இந்த முயற்சி WNPS இன் கடல்சார் செயற்குழுவால் முன்னெடுக்கப்படுவதுடன், அவர்கள் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தால், வன பாதுகாப்புத் திணைக்களத்தால் தொடங்கப்பட்ட மற்றும் சொந்தமான, வயம்ப பல்கலைக்கழகத்தால் ஆதரிக்கப்படும் இந்த முக்கியமான திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றது. கடல் பரப்பளவு நிலப்பரப்பை விட 8 மடங்கு அதிகமாக இருக்கும் ஒரு தீவில், கடல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடல்சார் செயற்குழுவின் செயல்பாட்டின் அடிப்படையானது இதை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்டல் தாவர பாதுகாப்பின் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு இதன் பாதுகாப்பானது செயற்குழுவின் நிகழ்ச்சி நிரலில் முதலிடம் பெற்றது” என்றார்.

Hemas Consumer தொடர்பான விபரங்கள்

இலங்கையின் வீட்டு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Hemas Holdings PLC யின் துணை நிறுவனமாகும். குடும்பங்கள் ஆரோக்கியமாக வாழ உதவ வேண்டும் என்ற ஒரு எளிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அடிப்படை நம்பிக்கை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நமது வளர்ச்சியைக் காண்பித்துள்ளது. இன்று முன்னணி பொது நிறுவனமாகநுகர்வோர், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நகர்வியக்கம் ஆகிய துறைகளில் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் ஒரு வரிசை மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை நாங்கள் ஏற்படுத்துகின்றோம். எங்கள் அடுத்த பயணத்தில், நாங்கள் தொடர்ந்து மாறுபட்ட மற்றும் தீவிர உணர்வு கொண்ட அணிகளில் முதலீடு செய்து, அர்த்தமுள்ள வழங்கல்களை தோற்றுவித்து, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து, அனைத்தையும் உள்ளடக்கிய உலகத்தை வென்றெடுப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top