Huawei Service Carnival இலவசமாக 50GB கிளவுட் ஸ்டோரேஜ், பற்றரி மாற்றுவதற்கான சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் மேலும் நன்மைகளை வழங்குகிறது

உங்கள் பழைய சாதனத்திற்கு புத்துயிர் அளியுங்கள், இப்போது Huawei சேவை நிலையங்களில் ஒரு விலை பற்றரி மாற்று சலுகையைப் பெறுங்கள்

2021 மே 22 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் Huawei Service carnival, வர்த்தகநாமத்துடன் நீண்டகாலமாக இணைந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்கான Huawei நிறுவனத்தின் முயற்சிகளின் ஓர் அங்கமாக Huawei பாவனையாளர்களுக்கு அற்புதமான சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இலவச சிஸ்டம் மேம்படுத்தலுக்கான பழுதுபார்ப்பு தள்ளுபடி கூப்பன்கள் , இலவச சுத்தப்படுத்தல் மற்றும் சாதனங்களை கிருமி நீக்கம் செய்தல் மற்றும் மூன்று மாதங்களுக்கு இலவச 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், சிறப்பு தள்ளுபடியுடன் ஒரு விலை பற்றரி மாற்றுதல் போன்ற உற்சாகமான நன்மைகள் வரை, Huawei Service carnival பாவனையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத சலுகைகளை அளிக்கிறது. பாவனையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட Huawei சேவை நிலையங்களில் ஏதேனும் ஒன்றுக்கு ஒரு முறை விஜயம் செய்வதன் மூலம் அவர்களின் பெரும்பாலான ஸ்மார்ட்போன் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள முடியும்.

Huawei Service carnival வழங்கும் பல நன்மைகளில், மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் இலவச 50GB கிளவுட் ஸ்டோரேஜ் ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.

இப்போது Huawei பாவனையாளர்கள் பழைய பற்றரிகளை புதிய, அசல் பற்றரிகளின் மூலம் கவர்ச்சிகரமான விலையில் மாற்றுவதன் ஊடாக தங்கள் பழைய சாதனங்களுக்கு புத்துயிர் ஊட்டமுடியும். Huawei  இனால் அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களுக்கு செல்லும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த சிறப்பு சலுகையை 90 நாள் மேலதிக உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். Huawei Y3 2017, P8 Lite, Y3 2018, Honor 4C, G Play mini சாதங்கள் இச்சலுகைக்கு தகுதியுடையாவதுடன், பற்றரி மாற்றும் கட்டணம் ரூபா 1,899/-. Huawei GR3 2017, P9 Lite, P9, Y6 2018, Y7 2018, GR5 2017, MediaPad M3 Lite 10.1, MediaPad T2 7.0 ஆகியவற்றுக்கான பற்றரி மாற்றும் கட்டணம் ரூபா 2,599/- என்பதுடன் Huawei Mate 20, Mate 20 Pro, Mate 8, Nova 2i, Nova 3i, Nova 7i, P10, P20 Pro, P30 Lite, Y5 2018, Y7 Pro 2019 ஆகியவற்றுக்கான பற்றரி மாற்றல் கட்டணம், உழைப்பு கட்டணம் உள்ளடங்கலாக ரூபா 2,799/- ஆகும். அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையத்திலிருந்து பற்றரியை மாற்றுவது உயர் தரமான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான சேவையையும் கூடுதல் கட்டணங்கள் இன்றி ஒரு விலையில் மின்கலத்தை மாற்றலையும் உறுதி செய்கிறது.

Huawei பாவனையாளர்கள் இந்த Carnival இல் பங்கேற்க ஒரு Huawei ID உருவாக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதே நேரத்தில் Huawei ஆதரவு செயலியில் காட்டப்படும் “Huawei Service Carnival”பேனரைக் கிளிக் செய்வதன் மூலம் சலுகைகளை கோரலாம். உங்களிடம் ஏற்கனவே ஒரு Huawei ID இருப்பின், நன்மைகளை பெற்றுக்கொள்ள நீங்கள் Huawei  ஆதரவு செயலிக்கு செல்ல வேண்டுமென்பதுடன், நீங்கள் ஒரு புதிய பாவனையாளராக இருந்தால், உங்களுக்கு ஒரு Huawei ID தேவை என்பதுடன் இதனை சில எளிய படிமுறைகளில் உருவாக்க முடியும்.

Huawei Service Carnival தொடர்பான மேலதிக விபரங்களை Huawei ஆதரவு செயலியிலிருந்து பெறலாம் மற்றும் அதன் லைவ் செட் அம்சத்தை மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top