Global Banking and Finance Review Awards 2021 இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வருடத்திற்கான விற்பனை வர்த்தகநாமமாக தெரிவான Singer

இலங்கையின் முதற்தர நுகர்வோர் இலத்திரனியல் சாதன விற்பனையாளரான Singer (Sri Lanka) PLC,  வணிக உலகில் மிகவும் பிரபலமான நிகழ்வான 11ஆவது Global Banking and Finance Review Awards இல் 2021 ஆம் வருடத்திற்கான விற்பனை வர்த்தகநாமம்  “Retail Brand of the Year Sri Lanka 2021” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த மதிப்புமிக்க விருதை Singer தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வென்றெடுத்துள்ளதுடன், இலங்கையின் விற்பனை துறையில் மீண்டும் தனது எழுச்சியை பறைசாற்றியுள்ளதுடன், விற்பனை துறையில் தன்னை ஜாம்பவானாக மீண்டும் நிரூபித்துள்ளது. சிறந்த உள்நாட்டு மற்றும் உலகளாவிய விருது வழங்கும் நிகழ்வுகளின் வெற்றியாளர்களில் ஒருவராக Singer தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன்,  அதன் வெற்றி ஓட்டத்தை மேலும் விரிவுபடுத்துகின்றது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட Global Banking and Finance Review சஞ்சிகையானது ஏற்பாடு செய்யும் இந்த வருடாந்த விருது வழங்கும் விழாவானது வணிக உலகில் புத்தாக்கம், உத்வேகம் தரும் மாற்றங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகளை அங்கீகரிக்கும் நிகழ்வாகும். இது உலகெங்கிலும் உள்ள பல கூட்டாண்மை நிறுவனங்கள் விரும்பும் உலகளாவிய அங்கீகாரமாகும்.

இது தொடர்பில் தனது கருத்தை பகிர்ந்து கொண்ட Singer (Sri Lanka) PLC இன் குழும பிரதான நிறைவேற்று அதிகாரி மஹேஸ் விஜேவர்தன, ” இந்த பாராட்டு உண்மையில் எங்களுக்கு பெருமை அளிப்பதுடன் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம் ஒப்பிடமுடியாத விற்பனை அனுபவத்தை வழங்க ஒட்டுமொத்த குழுவினரும் மேற்கொண்ட கடின உழைப்புக்கு ஒரு சான்றாகும். மிகவும் சவாலான ஆண்டாக இருந்த நிலையில், “புதிய இயல்பு நிலைக்கு” ​​ஏற்றவாறு எங்கள் செயல்பாடுகளை நெறிப்படுத்தியதன் மூலம், வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பணியாற்றவும் எங்களால் முடிந்தது. எனவே உலகின் சிறந்த விற்பனை தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளுடன் இலங்கையர்களின் வாழ்க்கையை உயர்த்தவும் வளப்படுத்தவும் முன்னின்று செயல்படும் ஒரு உண்மையான இலங்கை நிறுவனமாக இந்த விருதைப் பெறுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். Singer Sri Lanka PLC, வலுவான நிதிப்பெறுபேறுகள், மீட்டெழுச்சி மற்றும் இந்த சவாலான காலங்களில் முன்னணியில் திகழவேண்டும் என்ற அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக Fitch Ratings மதிப்பீடுகளால் (AA) LKA stable என மதிப்பிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,” என்றார்.

Singer (Sri Lanka) PLC நுகர்வோர் சாதன சந்தையில் முன்னணியில் உள்ளதுடன், நாடு முழுவதும் வளர்ந்து வரும் தனது நுகர்வோருக்கு பரந்த அளவிலான உயர்தர உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகநாமங்களை வழங்குவதில் புகழ்பெற்றது. சிங்கர் மெகா, சிங்கர் ப்ளஸ் காட்சியறைகள் மற்றும் ஈ- கொமர்ஸ் இயங்குதளம் (www.singer.lk) ஆகியவற்றைக் கொண்ட 432 சில்லறை விற்பனை நிலையங்கள் ஊடாக  சிங்கர் தனது வாடிக்கையாளர் தளத்தை அடைகின்றது. சிங்கரானது 600 இற்கும் மேற்பட்ட மின்னணு பொருட்கள், 1200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50 இற்கும் மேற்பட்ட சர்வதேச புகழ்பெற்ற வர்த்தக நாமங்களிலான சாதனங்களைக் கொண்டுள்ளது. கொள்முதல் செய்யும்போது நுகர்வோருக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்காக, சிங்கர் தனது நுகர்வோருக்கு வட்டி இல்லாத இலகு தவணைத் திட்டங்கள், சிறப்பு விலைக்கழிவுகள், இலவச சலுகைகள் மற்றும் கடனட்டைச் சலுகைகளையும் வழங்குகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top