Huawei Nova 7 SE, FreeBuds 4i, Band 6 ஒன்றிணைந்து எல்லையற்ற ஸ்மார்ட் திறன்களை ஒருங்கிணைக்கிறது

புதுமையான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஒத்திசைவான உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, உயர்நிலை அம்சங்கள் மற்றும் மலிவு விலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அதன் ஸ்மார்ட் சாதனங்களை விரிவுபடுத்தி வருகிறது. தொழில்நுட்ப ஆர்வலர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஸ்மார்ட்போனான Huawei Nova 7 SE ஆனது, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களால் வடிவமைக்கப்பட்ட முதலாவது இடைத்தர 5G ஸ்மார்ட்போன் ஆக விளங்குகிறது.

Nova 7 SE என்பது ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது Huawei நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற Nova தொடரின் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இது 6.5 அங்குல பெரிய திரை, 90.3% திரைக்கு உடல் விகிதத்துடன் அற்புதமான பார்வையிடல் அனுபவத்தை வழங்குகிறது. Nova 7 SE ஆனது வெள்ளி, பச்சை, ஊதா (Space Silver, Crush Green, Midsummer Purple) ஆகிய 3 வண்ணங்களில் வருவதுடன், அது அதன் வெளிப்புற தோற்றத்தை மேலும் மேம்படுத்துகிறது. புதுமையான குவாட் கெமரா, 8GB RAM மற்றும் 128GB எனும் பாரிய சேமிப்பகம் மற்றும் Kirin 820 5G Chipset ஆகியற்றின் காரணமாக: மின்னல் வேகம், ஒருபோதும் பின்னடைவை ஏற்படுத்தாத செயற்றிறன், ஒரே நேரத்தில் பல விடயங்களை மேற்கொள்ளும் மல்டி-டாஸ்கிங் திறன்களை வழங்க உதவுகின்றது.

Nova 7 SE ஆனது, ஒரு குவாட் கெமரா அமைப்பைக் கொண்டுள்ளதுடன், இது 64MP உயர் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கெமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP பொக்கே லென்ஸ் மற்றும் 2MP மெக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளதன் மூலம், தெளிவான, நிஜ வாழ்க்கை புகைப்படங்களை கைப்பற்ற உதவுகிறது. இதன் 16MP முன்பக்க கெமரா ஒரு நாளின் பகல் வேளையிலும், குறைந்த ஒளி நிலைகளிலும் ஒரே வகையில் சமமாக சிறப்பாக செயற்படுகிறது. Nova 7 SE ஆனது, 4,000 mAh கொண்ட நீடித்து நிலைக்கும், மின்கலத்தை கொண்டுள்ளதன் மூலம், நாள் முழுவதும் அனைத்து ஸ்மார்ட்போன் பணிகளிலும் உங்களுக்கு ஈடுகொடுக்க போதுமானதாக அமைகிறது.

Huawei FreeBuds 4i ஆனது, சமீபத்திய ANC வலு கொண்ட true wireless earbuds (மெய்யான வயர்லெஸ் இயர்பட்) ஆகும் என்பதுடன், மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். அதன் வர்த்தக முத்திரையான Active Noise Cancellation (ANC) அம்சம் ஆனது, பயணத்தின் போதும், நடைப்பயிற்சி அல்லது வேறு எந்தப் பணியில் ஈடுபடும்போதும், வெளிப்புற இரைச்சலை அகற்றி, சிறந்த ஒலி அனுபவத்தை வழங்க உதவுகிறது.

அணிகலன் தொழில்நுட்பத்தில் Huawei முன்னணியில் உள்ளது. நடுத்தர மற்றும் உயர்நிலை ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் உடற்பயிற்சி பேண்ட்களை அது வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் சமீபத்தில் வெளியான Huawei Band 6 ஆனது, ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட, இலகுரக ஸ்மார்ட் Band ஆகும். இது தொழில்துறையில் முன்னணி வாய்ந்த AMOLED முழுத் திரை பார்வை கொண்ட திரையம்சத்துடன் வருகிறது.

Huawei FreeBuds 4i மற்றும் Huawei Band 6 ஆகிய இரண்டையும் Nova 7 SE ஸ்மார்ட் போனுடன் இணைப்பதற்கு, ஒரு சில எளிய படிகள் மட்டுமே காணப்படுகின்றன. FreeBuds 4i இனை இணைக்க, பயனர்கள் செய்ய வேண்டியது, அதன் சார்ஜிங் மூடியை திறந்ததும், தொலைபேசியின் திரையில் பொப்-அப் அறிவிப்பு (pop-up notification) தோன்றும். அதன் முதன் முறை இணைத்தல் முடிந்ததும், அதன் பின்னரான ஒவ்வொரு தடவையிலும் சாதனத்தை இனங்காண்பதன் மூலம், earbud கள் தானாக இணைக்கப்படும். Huawei Band 6 ஐ நேரடியாக Bluetooth வழியாகவோ அல்லது Huawei Health செயலியின் மூலமாகவோ இணைக்க முடியும். Band 6 ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும்போது மேலதிக அம்சங்களை அனுபவிக்க உதவுகிறது. Band 6 ஐ ஒரு எளிய செயல்பாட்டின் மூலம் Huawei Health செயலியுடன் இணைக்க முடியும்.  Health செயலியை திறக்க> சாதனங்களை உள்ளிடுக> சாதன மாதிரியைத் தெரிவு செய்து இணைக்க. (Health app> enter Devices> select device model and pair)

Huawei Health செயலியானது, ஸ்மார்ட் சாதனங்களை வசதியாக நிர்வகிப்பதற்காக Huawei App Gallery வழியாக தரவிறக்கம் செய்யக்கூடியதாகும். Huawei Nova 7 SE ஆனது, ரூ. 68,999 ஆகவும், Huawei FreeBuds 4i ரூ. 20,999 ஆகவும், Huawei Band 6 ரூ. 15,999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, நாடு முழுவதிலுமுள்ள Huawei அனுபவ மையங்கள், சிங்கர் காட்சியறைகள், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் ஒன்லைனில் Daraz.lk மற்றும் Singer.lk வழியாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top