முழுமையாக இணைந்த, தடையற்ற வாழ்க்கைக்கு வலுவூட்டும் Huawei Nova 7i, FreeBuds 4i, Watch GT2 Pro

Huawei பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதுடன், இதனை அன்றாட வாழ்க்கையில் உற்பத்தித்திறனையும் செயல்திறனையும் மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் கருதுகின்றது. இந்த பின்னணியில், Huawei ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது மட்டுமல்லாமல், ஸ்மார்ட் கடிகாரங்கள், ஸ்மார்ட் பட்டிகள், உண்மையான வயர்லெஸ் இயர்பட்கள் போன்ற அணியக்கூடிய தொழில்நுட்ப பொருட்களையும் அறிமுகப்படுத்துகிறது.

Huawei Nova தொடர் அதன் புதுமையான ஸ்மார்ட்போன்களுக்காக புகழ்பெற்றது. இது நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் எதிர்கால அம்சங்களின் கலவையுடன் கூடியது. வடிவமைப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் Huawei Nova 7i வேறுபட்டதல்ல என்பதுடன் சந்தேகத்திற்கு இடமின்றி Nova தொடரில் செலுத்தும் பணத்திற்கு சிறந்த பெறுமதியை வழங்கும் சாதனங்களில் ஒன்றாகும்.

ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட Nova 7i மூன்று வண்ண வகைகளுடன் வருகிறது. Sakura Pink, Midnight Black மற்றும் Crush Green ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது. Huawei Nova 7i ஆனது 8GB RAM, 128GB சேமிப்பகம், வேகமான சார்ஜிங் போன்றன இதன் கவர்ச்சிகர அம்சங்கள் என்பதுடன் இவை தொழில்நுட்ப ஆர்வலர்களைக் கவரும் நடுத்தர சாதனமாகும். Nova 7i இல் 48MP main camera, 8MP Ultra wide-angle lens, 2MP Macro lens மற்றும் 2MP Depth lens ஆகியவை தொழில்தரமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவுகின்றது. Night, Portrait, Panaroma, HDR, slow motion, Super Macro,Time Lapse, போன்ற சிறப்பம்சங்களை புத்தாக்கமாக ஆக்கத்திறனுடன் படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்கும் நோக்கில் கொண்டுள்ளது. இது திரையின் மேல் இடது மூலையில் பஞ்ச் துளை வழியில் துளையிடப்பட்ட மிகவும் செயல்திறன் கொண்ட 16MP செல்பி கெமராவையும் கொண்டுள்ளது.

இக்காலத்தில், ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் ஸ்மார்ட்போன்கள் வழியாக இசையைக் கேட்கப் பழக்கப்பட்டுள்ள போதிலும், உயர் தரமான ஒலி அனுபவத்திற்காக ஒரு ஹெட்போனை  பயன்படுத்த வேண்டியது அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். வயர் கொண்ட ஹெட்போன்கள் சில நேரங்களில் இதனை ஒரு மோசமான அனுபவமாக மாற்றுகின்றன. அப்படியானால், Huawei FreeBuds 4i உண்மையான வயர்லெஸ் இயர்பட்கள் புதிய மாற்றீடாகும். Active Noise Cancellation (ANC) தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்படும் நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் மூழ்கடிக்கும் ஒலி அனுபவத்தை உறுதிப்படுத்துகின்றது.

Ceramic White, Carbon Black, Red ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் இலகு எடைகொண்ட FreeBuds 4i, நீள்வட்டமான சார்ஜிங் கேஸினைக் கொண்டுள்ளமையானது வடிவமைப்பைப் பொருத்த வரையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். அதன் பணிச்சூழலியல் வடிவமைப்பு பாவனையாளரை 24/7 வசதியாக அணிய அனுமதிக்கும் அதே நேரத்தில் இது காதுகளில் நிலையாக பொருந்துவதை உறுதியளிக்கிறது.

அணியக்கூடிய தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள பல்நோக்கு ஸ்மார்ட் கடிகாரங்களில் Huawei Watch GT2 Pro ஒன்றாகும். இந்த இலகுரக ஸ்மார்ட்வாட்ச் 1.3 அங்குல தெளிவான திரையைக் கொண்டுள்ளதுடன், இது மிகவும் தனித்துவமான அணியக்கூடிய வடிவமைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. இது டைட்டானியம் உடல் மற்றும் sapphire crystal watch dial கொண்டது.

FreeBuds 4i மற்றும் Watch GT2 Pro இரண்டையும் புளூடூத் வழியாக சிக்கல் இல்லாத செயன்முறையினால் ஹவாய் நோவா 7இ உடன் இணைக்க முடியும். முதல் முறையாக பயன்படுத்தும் பாவனையாளர் ஸ்மார்ட்போனின் புளூடூத் செயல்பாட்டை இயக்கி, FreeBuds 4i இன் சார்ஜிங் கேஸினைத் திறக்க வேண்டும். பின்னர் ஸ்மார்ட்போனுடன் இணைப்பதற்கு pop-up notification அறிவிப்பு தோன்றும். முதல் இணைப்பு முடிந்ததும், சார்ஜிங் கேஸிங் திறக்கப்படும் போது FreeBuds 4i  தானாகவே இணைக்கப்படும்.

புளூடூத் தொழில்நுட்பம் வழியாக Nova 7i உடன் இணைக்கப்படும் போது Huawei Watch GT2 Pro, கடிகார  இடைமுகத்திலிருந்து அத்தியாவசிய ஸ்மார்ட்போன் பணிகளை அணுக பாவனையாளரை அனுமதிக்கிறது, அதாவது பாவனையாளர் உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது ஸ்மார்ட்போனில் கவனம் செலுத்த தேவையில்லை. Huawei Nova 7i, ரூபா 52,999 என்ற விலையிலும், Huawei FreeBuds 4i, ரூபா 20,999 என்ற விலையிலும், Watch GT2 Pro ரூபா 57,999/-  என்ற விலையிலும், Huawei experience centers,  நாடு முழுவதிலும் உள்ள Singer காட்சியறைகளிலும் கிடைப்பதுடன், Singer.lk and Daraz.lk ஆகிய இணையத்தளங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top