அண்மைய கோவிட் – 19 அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச அவசர ரீலோட் சலுகையை மீண்டும் ஆரம்பிக்கும் HUTCH

நாட்டில் நிலவும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு இந் நேரத்தில் மிகவும் அவசியமான நிவாரணத்தை வழங்கும் பொருட்டு HUTCH தனது இலவச அவசர நேர ரீலோட் சேவையை இரண்டாவது வருடமாக மீண்டும் செயற்படுத்தியுள்ளது.  பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை வாடிக்கையாளர்கள் அவசர அழைப்புகளை மேற்கொள்ளவும், எஸ்.எம்.எஸ்களை அனுப்புவதற்கும் நாளாந்தம் ரூபா 10 ரூபா இலவச ரீலோட் HUTCH இனால் வழங்கப்படும்.

*288 # ஐ டயல் செய்வதன் மூலமோ அல்லது HUTCH Self Care app மூலமாகவோ நாளாந்தம் அவசர ரீலோட்டை செயல்படுத்தப்படலாம் என்பதுடன் இது அனைத்து முற்கொடுப்பனவு சந்தாதாரர்களுக்கும் கிடைக்கிறது. மொபைல் மீதி நிறைவடைந்த வாடிக்கையாளர்கள், தமது அவசர தேவைகளுக்கு இந்த  ரீலோட்டினை பயன்படுத்தும் நோக்கிலேயே HUTCH இந்த முயற்சியை முன்னெடுக்கின்றது.

“இலங்கை தற்போது கோவிட் தொற்றுநோயின் 3 வது அலையுடன் போராடி வருவதுடன், இதன் விளைவாக நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் பல சந்தாதாரர்கள் தங்கள் மொபைல் கணக்குகளை ரீசார்ஜ் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்கள் இந்த சவாலை எதிர்கொள்வது இதுவே முதல் முறை அல்ல, கடைசி அலைகளின் போது இந்த சலுகையை நாம் வழங்கியிருந்தோம். இந்த ரீலோட்டானது வாடிக்கையாளர்களின் மொபைல் மீதி குறைவாகும்போது அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்கின்றது,” என Hutch இன் சந்தைப்படுத்தலுக்கான சிரேஷ்ட முகாமையாளர் ஐரங்க அமந்தகோன் தெரிவித்தார்.

சமூக பொறுப்புள்ள கோர்ப்பரேட் குடிமகனாக, 2020 மார்ச் மாதத்தில் கோவிட் – 19 இன் 1 வது அலையின் தொடக்கத்திலிருந்து இலவச ரீலோட் போன்ற சரியான நேரத்திற்கான முயற்சிகள் உட்பட பல கோவிட் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் Hutch முன்னணியில் உள்ளது. HUTCH நிறுவனமானது o-Doc உடன் இணைந்து, சுவ சரண டெலிமெடிசின் சேவையை அனைத்து இலங்கையர்களுக்கும் பயணக் கட்டுப்பாடுகளின் போது இலவசமாகத் தொடங்கியதுடன், இது வீட்டிலிருந்தவாறே பொது மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனைக்கான வாய்ப்பை வழங்குகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top