ICTA இனால் தொழில்நுட்ப ஆரம்பமொன்றிற்கான ஆய்வு ‘ஒரு தொடக்கத்தை வழங்கும் நட்பு ரீதியான அரசாங்கத்தை நோக்கி’ திட்டம் அறிமுகம்

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் இலங்கையின் முன்னோடியான நிறுவனமாகும் என்பதுடன், நாட்டின் தொழில்நுட்ப தொடக்கத்தின் மேம்ப்பாட்டிற்கான உச்ச நிலையிலுள்ள அரசாங்க நிறுவனமுமாகும். கடந்த தசாப்தத்தில் அவ்வாறான தொடக்கத்திற்கான தொகுதியை வழங்கி நாட்டை முன்னோக்கி செலுத்துவதில் ஊக்கியாக இருந்துள்ளது. தொடக்க நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கும், தொடக்கத்திற்கான உதவும் அரசாங்கத்திற்கு பங்களிப்பு செய்வதற்குமான அதன் முயற்சிகளில், ICTA ஆனது, PricewaterhouseCoopers Sri Lanka (PwC) உடன் இணைந்து தொழில்நுட்ப தொடக்க தொகுதியொன்றை துரிதப்படுத்தும் வகையிலான ஆய்வான ‘ஒரு தொடக்கத்தை வழங்கும் நட்பு ரீதியான அரசாங்கத்தை நோக்கி’ (‘Towards a Startup Friendly Government’) எனும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது இலங்கையில் தொடக்கம் மற்றும் செயற்படுத்தலை முன்னெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் தொடர்பான ஒரு விரிவான அறிக்கையை மையமாகக் கொண்டுள்ளது. அத்தகைய தடைகளை சமாளிக்க உரிய தீர்வு வழங்கும் நடவடிக்கையையும் இவ்வாய்வு பரிந்துரைக்கிறது.

2021 ஜூன் 29ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. ICTA பிரதான நிறைவேற்று அதிகாரி, பொறியியலாளர் மஹிந்த பி. ஹேரத், ICTA தலைமை டிஜிட்டல் பொருளாதார அதிகாரி அநுர டி அல்விஸ், தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை எளிதாக்குவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர் ரிஷான் சுபசிங்க, PwC Sri Lanka நிறுவனத்தின் கோப்பரேட் நிதி மற்றும் மதிப்பீட்டு ஆலோசனை பணிப்பாளர் அருண பெரேரா, Calcey Technologies நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மங்கள கருணாரத்ன, தெற்காசியாவின் மாற்றத்திற்கான தொழில்நுட்ப முதலீடுகள், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC), உலக வங்கி குழுமத்தின் திருமதி. ருச்சிரா சுக்லா மற்றும் ICTAயின் தொடக்க தொகுதி மேம்பாட்டு பணிப்பாளர் சச்சீந்திர சமரரத்ன ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இக்கணக்கெடுப்பு ஆய்வானது, தற்போதைய தொழில்நுட்ப தொடக்க தொகுதி தொடர்பான பரந்த பார்வையை வழங்குவதுடன், இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய தடைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுத்தக்கூடிய சாத்தியமான தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தொடக்கங்களுக்கான மேம்பாட்டிற்கு அவசியமான தொடக்க தொகுதியை உருவாக்கும் வகையில், அரசாங்க அதிகாரிகள் அதனுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றக்கூடிய ஒரு கூட்டு அணுகுமுறையையும் இந்த ஆய்வு முன்வைக்கிறது.

தொடக்க தொகுதியின் முக்கிய பங்குதாரர்களைக் கொண்ட 5 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவின் உதவியுடன் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. 99X நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியும் ICTA பிரதிப் பணிப்பாளரும், வழிகாட்டல் குழுவின் தலைவருமான  மனோ சேகரம் தலைமையில், Calcey Technologies நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மங்கள கருணாரத்ன, Lankan Angel Network நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சாலிந்த அபேகோன், Bhasha Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி தனிக பெரேரா, Cemex Software (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் வெல்லிங்டன் பெரேரா, ZMessenger (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜயோமி லொகுலியன ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

ஆய்வின் முக்கியத்துவம் யாதெனில் வணிக தொடக்கமொன்றிற்காக எதிர்பார்திருக்கும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தடைகள் பற்றிய ஆழமான விடயங்களை வெளிக்கொணரும் அதே வேளையில், ஏனைய நாடுகளில் இவ்வாறான நிலைமைகளின் கீழ் பகுப்பாய்வு செய்யப்பட்ட பின்னர் பெறப்பட்ட தீர்வு நடவடிக்கை திட்டத்தையும் இது பரிந்துரைத்துள்ளது. உள்நாட்டு தொடக்கங்களுக்கான உதவிகளை வழங்குவதற்கும், இந்த தொடக்கங்களுக்கு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து உரிய ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதற்கும் முன்மொழியப்பட்ட இத்தீர்வு நடவடிக்கை திட்டமானது, உள்நாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வறிக்கையின் வெளியீட்டின் போது கருத்துத் தெரிவித்த ICTA யின் தொடக்க தொகுதி மேம்பாட்டு பணிப்பாளர் சச்சீந்திர சமரரத்ன, “புதுமை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, தொடக்கநிலையிலுள்ள நிறுவனங்கள் முக்கியமாகின்றன. தொடக்க தொகுதியை வளர்ப்பதற்கான நீண்டகால தீர்வுகளுடன், தொடக்கங்களை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கமாக கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பகுதிகள் குறித்த விரிவான தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது. இந்த முன்முயற்சியைத் தாண்டி, இலங்கையில் தொழில்நுட்ப தொடக்கங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் அரச நிறுவனங்களுடன் நாம் தொடர்ந்தும் பணியாற்றுவோம்.” என்றார்.

PWC Sri Lanka கோர்ப்பரேட் நிதி மற்றும் மதிப்பீட்டு ஆலோசனை பணிப்பாளர் அருணா பெரேரா இதன்போது கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் தொழில்நுட்ப தொடக்கங்களை விரைவுபடுத்துவதற்கான பரந்த அளவிலான வழிவகைகளை வழங்க வேண்டிய இந்த சரியான தருணத்தில், அரசாங்கத்தின் பரந்த உதவியுடன் இவ்வாறான அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளமை தொடர்பில் ICTA இற்கு நாம் நன்றி கூறுகிறோம். ஆரம்ப கட்ட ஆராய்ச்சியின் போது, ​​110 இற்கும் மேற்பட்ட தொடக்கங்களினால் எதிர்கொள்ளப்பட்ட பிரயோக ரீதியான சிக்கல்கள், வளர்ச்சியைத் தடுக்கும் விடயங்கள், நிதி மற்றும் மூலதன தடைகள், சந்தை அணுகல் போன்றவை தொடர்பில் PwC ஆய்வு செய்தது. அத்துடன், முக்கிய துறைகளில் உள்ள தொடக்க நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் புரிந்துகொள்ளும் வகையில், குழு விவாதங்களையும் PWC மேற்கொண்டது. இதே சமயத்தில, தொடக்க தடைகளை ஆராயும் வகையில், 25 இற்கும் மேற்பட்ட தொகுதிகளின் (தனியார் காப்பாளர்கள், கல்வி நிறுவனங்கள், மூலதன நிதிகள், சட்ட நிறுவனங்கள், தொழில்முறை அமைப்புகள் உட்பட) பங்காளர்கள் பேட்டி காணப்பட்டனர். இலங்கையில் தொடக்கமொன்றிற்கான வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான பரிந்துரைகளை கொண்டுவரும் வகையில், சர்வதேச ரீதியிலான இவ்வாறான நிலைமைகளின் போதான ஆய்வுகளை கருத்தில் கொண்டு, பரிந்துரைகள் மற்றும் அதற்கான தீர்வு செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. PwC Sri Lanka ஆகிய நாம் தற்போது இம்முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.

இவ்வறிக்கையானது, 12 பிரிவுகளில் உள்ள தொடக்கங்களால் எதிர்கொள்ளப்படுகின்ற, அந்நியச் செலாவணி தொடர்பான பிரச்சினைகள், அந்நிய முதலீட்டாளர்களுக்கான தடைகள், புலமைச் சொத்து, வரிவிதிப்பு, குடிவரவு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, நாடு கடந்த நிலையில் எதிர்கொள்ளும் தடைகளின் போதான அரசாங்க ஆதரவு, தரவு தனியுரிமை மற்றும் இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் கொடுப்பனவுகள், கடன் நிதி, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல், நிர்வாக பணிகளை டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட 29 தடைகள் மற்றும் அந்தந்த துறைகளுக்கு பொறுப்பான அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இத்தடைகளைத் தீர்க்கும் 44 நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கிறது.

தொழில்நுட்ப தொடக்க தொகுதி அமைப்பு உட்பட ICT துறையை முன்னோக்கி செலுத்துவதில் ஊக்கியாக  செயற்படும் ICTA ஆனது, அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அனைத்து ICTA தொடர்பான திட்டங்களுக்கும் முன்னோடியாகவும், தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை ஆதரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இலங்கையை டிஜிட்டல் முறையில் உள்ளடக்கிய நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்குடன், StartupSL உள்ளிட்ட, தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான மாற்று கடன் மதிப்பீட்டு கட்டமைப்பு, Spiralation போன்ற பல முன்முயற்சிகள் மூலம் தொழில்நுட்ப தொடக்கங்களை மேம்படுத்த ICTA பங்களித்து வருகிறது. ICTA ஆனது, இலங்கையில் உலகளாவிய ரீதியில் அளவிடக்கூடிய புதிய தொழில்நுட்ப வணிகங்களைக் காணும் நோக்கத்துடன் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் செழிக்க உகந்த சூழலை உருவாக்கும் வகையில், தொடக்க தொகுதி மேம்பாட்டுக்கு நீண்ட கால ஆதரவை வழங்க எதிர்பார்த்து நிற்கிறது.

முற்றும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top