மீண்டும் ஒரு முறை வெற்றியை சுவைத்த IIT இன் மெய்நிகர் Careers Week 2021

இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT), தனது 30 ஆவது ஆண்டு கல்வி மேன்மையை கொண்டாடியதுடன்,கொவிட் 19 தொற்றுநோயை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டிய தேவையின் பொருட்டு தனது முதலாவது IIT Careers Day 2021 நிகழ்வை ஒன்லைன் தளத்தின் ஊடாக  நடாத்தியிருந்தது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக  IIT இந்த நிகழ்வை ஒரு மெய்நிகர் தளத்தில் நடாத்திய போதிலும், இந்த ஆண்டு வளாகம் ஒரு படி மேலே சென்று நிகழ்வை பல நாட்கள் நீடித்ததன் மூலம் அதிக எண்ணிக்கையிலான IIT இளமானி மற்றும் பங்கேற்பு நிறுவனங்களுக்கு ஒருவரையொருவர் தொடர்புகொள்வதற்கு அதிக நேரம் வழங்கியது.

மே மாதம் 31 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெற்ற IIT Careers Week இல் தமது மூன்றாம் ஆண்டில் பட்டப்படிப்பைத் தொடரும் ஆர்வம்மிக்க 500+ IIT மாணவர்கள் உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கலந்துகொண்டனர். IIT தனது 4 ஆண்டு பட்டப்படிப்பு பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஒரு வருட கட்டாய தொழில் பயிற்சியை உள்ளடக்கியுள்ளது. இது பணியிட இணக்கத்தன்மைக்கு தேவையான திறன்களையும் அறிவையும் எளிதாக்க உதவுகிறது, இதன் மூலம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்து பணியிட சூழலுக்கு தடையின்றி மாறுவதற்கு உதவுகிறது. இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் 80+ க்கும் மேற்பட்டவை இந்த 9 நாட்களில் ஒன்லைன் கலந்துரையாடல்களை நடாத்தியிருந்ததுடன், ஒவ்வொரு அமர்விலும் 100 முதல் 200 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். MAS Active, MAS Twinery , MAS Linea Aqua, MAS Attune, IFS, Virtusa, WSO2, Dialog Ideamart, CodeGen International, hSenid Business Solutions, hSenid Mobile Solutions, 99x Technology, Zone 24/7 Aesturnum போன்ற முன்னணி நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. இவை விளையாட்டு வடிவமைப்பு,  வெப் டெவலப்மென்ட், சைபர் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளை பிரதிநிதித்துவம் செய்தன.

முன்னைய வருடங்களைப் போலவே ஒவ்வொரு வருடமும், உள்நாட்டு புளூ சிப், பல்தேசிய நிறுவனங்கள் உள்ளிட்ட இலங்கையின் முன்னணி ICT மற்றும் ICT அல்லாத நிறுவனங்கள், IIT இளங்கலை பட்டதாரிகளை சந்திக்கும் தளமாக உள்ளது. IIT பட்டதாரிகள் ஏன் தங்கள் நிறுவனத்தில் சேர வேண்டும் என்று சந்தித்து தெளிவுபடுத்தும் வாய்ப்பை இந்த நிறுவனங்களுக்கு வழங்குவதுடன், ​​நூற்றுக்கணக்கான IIT இளமானி பட்டதாரிகளுக்கு இந்த உயர்மட்ட நிறுவனங்களுடன் தொடர்புகொள்வதற்கும், நேர்காணல்களுக்கு முகங்கொடுத்து, ஒரு வருட தொழிற்பயிற்சியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் இது வழங்குகின்றது. இதில் பங்குபற்றும் பல தரபட்ட நிறுவனங்களில், தாம் தமது வேலை வாய்ப்பை ஆரம்பிக்க விரும்பும் நிறுவனத்தை தெரிவு செய்ய IIT மாணவர்களுக்கு முடியுமென்பதுடன், நிறுவனங்கள் தமது வேறுபட்ட தொழில் தேவைகளுக்கு பொருத்தமான இந்நாட்டின் சிறந்த ICT மற்றும் வணிக முகாமைத்துவ பட்டதாரிகளிடம் நேர்காணல் நடத்தி தெரிவு செய்துகொள்ள வாய்ப்பளிக்கின்றது.

IIT Careers Week தொடர்பில் கருத்து தெரிவித்த IIT இன் பீடாதிபதியான நயோமி கிருஷ்ணராஜா, “IIT இன் அனைத்து இளமானி பட்டப்படிப்புகளுக்கும் தொழிற்பயிற்சியானது ஒரு முக்கிய அம்சமாகும். இது மாணவர்கள் தங்கள் வகுப்பறை அறிவை நடைமுறை பயன்பாடு மற்றும் தொழில்முறை திறன்களுடன் பயன்படுத்திக் கொள்ளும் தண்மையை வழங்குகிறது. தொழிற்பயிற்சியானது தெரிவு செய்த துறையில் தொழில்முறை தொடர்புகளை வளர்க்கும் மேலதிக நன்மையைக் கொண்டுள்ளது. தொற்றுநோய் முடக்கல் நிலையையும் மீறி, வாரத்தில் 80 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பதைக் கண்டமை ஊக்கமளிப்பதாக இருந்ததுடன், தொழிற்பயிற்சி வாய்ப்புகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கியது. மேலும், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் IITயின் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது மாணவர்களுக்கு பெறுமதிமிக்கதாகும். மொத்தத்தில், இது ஒரு பெரிய வெற்றியாகும், இந்த நிகழ்வின் வெற்றியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளுக்கும் நிறுவனங்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் மற்றும் IIT யில் உள்ள வேலைவாய்ப்பு அணிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்றார்.

Virtusa நிறுவனத்தின் மனிதவள ஆலோசகர் திலான் பெரேரா, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ” தற்போதைய தொற்றுநோய் நிலையில் மாணவர்கள் மற்றும் தொழில் வழங்குநர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதானது மிகவும் வசதியானது என்பதால் இது ஒரு சிறந்த முயற்சி என்று நான் நினைக்கிறேன். மேலும், இந்த நிகழ்வில் Virtusa இற்கான நேரத்தின் போது 100+ மாணவர்கள் பங்கேற்பதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கின்றது,” என்றார்.

ஏய்டர்னம் நிறுவனத்தின் உதவி மனிதவள முகாமையாளர் சப்ரி அஷ்ரப் கருத்துத் தெரிவிக்கையில்,“180 க்கும் மேற்பட்ட இளமானி பட்டதாரிகளைச் சந்திக்க இது ஒரு அருமையான சந்தர்ப்பமாகும். தொழிற்பயிற்சிகளின் போது எங்களால் வழங்கக்கூடியவற்றை நாங்கள் தொடர்புகொண்டு பகிர்ந்து கொள்ள முடிந்தது, மேலும் இந்த ஒரு வருட காலத்தை அவர்கள்  கற்றுக் கொள்ளவும் வளரவும் பயன்படுத்தலாம். 12 ஆண்டுகளுக்கும் மேலாக IIT உடன் இணைந்து பணியாற்றி வருவதோடு, எங்கள் நீண்டகால உறவுகளை மேலும் மேம்படுத்த இதுபோன்ற பல நிகழ்வுகளை எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top