தெற்காசியாவில் Dell Technologies இன் சிறந்த விநியோகஸ்தர் விருதினை வென்ற Singer

நாட்டின் முன்னணி நுகர்வோர் சாதன விற்பனையாளரான Singer Sri Lanka PLC, 2021 ஆம் ஆண்டிற்கான Dell Technologies South Asia CSB Partner Connect நிகழ்வில், ‘ஆண்டின் சிறந்த பிராந்திய விநியோகஸ்தர்’ மற்றும் ‘ஆண்டின் சிறந்த விநியோகஸ்தர் – இலங்கை’ விருதுகளை வென்றது. இந்த மெய்நிகர் நிகழ்வானது 2020 ஆம் ஆண்டில் விநியோகஸ்தர்களின் பிராந்திய செயல்திறனை  மீளாய்வு செய்வதற்காக நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் Dell Technologies Asia Emerging Markets இன் உப தலைவர் அனோதை வெட்டாயாகோர்ன், Dell Technologies இன் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிராந்திய விநியோகஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

பிராந்தியத்தில் வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், மியான்மார், சிங்கப்பூர், புருனே, மொங்கோலியா முதலிய நாடுகளின் கடும் போட்டியை வெற்றிகொண்டு Singer வெற்றியை தனதாக்கியது. இந்த இரட்டை விருதுகள், பல சவால்கள் நிறைந்த 2020 ஆம் ஆண்டில் மடிகணினி வியாபாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான Singer இன் தனித்துவமான பங்களிப்பை மீண்டும் பறைசாற்றியுள்ளது.

Singer Sri Lanka PLC இன் பிரதான நிறைவேற்று அதிகாரி, மஹேஸ் விஜேவர்தன இந்த சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “சிறந்த விநியோகஸ்தருக்கான பிராந்திய மற்றும் நாட்டுக்கான விருதுகளைப் பெறுவதில் நாங்கள் கௌரவம் அடைகின்றோம். இந்த இரண்டு மதிப்புமிக்க விருதுகளும், 2020 ஆம் ஆண்டில் எங்களுக்கு சவால்கள் காணப்பட்ட போதிலும் எங்கள் பெறுமதியான நுகர்வோருக்கு சேவையாற்றுவதற்கான எங்கள் மீளெழுச்சி மற்றும் உறுதிப்பாட்டிற்கான சான்றாகும். நாங்கள் அனைவரும் சிறந்த குழு உணர்வுடன் பணியாற்றியதோடு, வழக்கம் போல் ஒருவருக்கொருவர் ஆதரவளித்ததோடு உரிய நேரத்தில் நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய சிறந்ததை வழங்கினோம். 2014 முதல் நாம் வலுவான உறவைப் பேணி வரும் Dell Technologies அளித்த ஆதரவிற்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்,”என்றார்.

இந்த மெய்நிகர் நிகழ்வில் ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றதுடன், இதில்  Singer Sri Lanka PLC இன் குழும பிரதான நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன மற்றும் Singer Sri Lanka PLC இன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷனில் பெரேரா ஆகியோர் Dell Technologies Asia Emerging Markets இன் உப தலைவர் அனோதை வெட்டாயாகோர்ன் உடன் பிராந்தியத்தினுள் Dell Technologies இன் முன்னணி விநியோகஸ்தராகிய Singer இன் வெற்றிப் பயணம் தொடர்பில் பகிர்ந்து கொண்டார். அதன் நாடளாவிய விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பு போன்ற  Singer இன் மிகப் பெரிய பலங்களின் ஆதரவுடன் கோவிட் – 19 பரவலின் தாக்கங்களைச் சமாளிப்பதற்கான ஆரம்பகால தயார்படுத்தல்கள்- மடிகணினி பிரிவில் நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பங்களிப்புச் செய்ததாக தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தொற்றுநோய் மக்கள் வேலை செய்யும் முறை மற்றும் கற்கும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து வேலை மற்றும் வீட்டிலிருந்து கற்றல் முயற்சிகளுக்கு மாறுவது ஒவ்வொரு வீட்டிற்கும் மடிகணினி அல்லது தனிநபர் கணினியின் தேவையை வலியுறுத்தியுள்ளது. Singer போன்ற ஆற்றல் மிகுந்த ஒரு நிறுவனத்திற்கு, இந்த நிலைமை இலங்கையர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியது. மாபெரும் விற்பனை மற்றும் விநியோகஸ்தர் வலையமைப்புகள், ஒன்லைன் கொள்வனவுக்கான முழுமையான இணையத்தளம், வீட்டு வாசலுக்கேயான விநியோக வசதி மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகள் போன்றவற்றின் உதவியுடன் இதனை நிறைவேற்றியது.

Singer Sri Lanka PLC இலங்கையின் நுகர்வோர் சாதன சந்தையில் முன்னணியில் உள்ளதுடன், நாடு முழுவதும் அதிகரித்து வரும் நுகர்வோருக்கு பல்வேறு தரமான உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகநாமங்களை வழங்குவதில் புகழ் பெற்றது. Singer தனது விரிவான பங்காளர் வலையமைப்பு மற்றும் Singer Mega மற்றும் Singer  காட்சியறைகளைக் கொண்ட 432 விற்பனை நிலையங்கள் மற்றும் மின் வணிக தளமான (www.singer.lk) மூலம் வாடிக்கையாளர் தளத்தை தொடர்ந்து சென்றடைகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top