இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான முகாமையாளராக யூசுப் ஷிராஸை நியமித்தது VMware

இலங்கை, மாலைதீவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் கிளவுட் மற்றும் டிஜிட்டல் தீர்வுகள் தொடர்பான பயணங்களை துரிதப்படுத்த உதவும் வகையிலான, புத்தாக்கங்களை வழங்குவதற்கான VMware இன் உறுதிப்பாட்டை இந்நியமனம் வலுப்படுத்துகிறது

பெரு நிறுவனங்களுக்கான மென்பொருள் தீர்வுகள் தொடர்பான முன்னணி புத்தாக்க நிறுவனமான VMware, Inc., இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான அதன் முகாமையாளராக (Country Manager) யூசுப் ஷிராஸை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் இரண்டு தசாப்த கால அனுபவம் கொண்டுள்ள யூசுப், இலங்கை மற்றும் மாலைதீவு முழுவதும் VMware இனது வர்த்தக மேம்பாடு, வளர்ச்சி மற்றும் மூலோபாயம் தொடர்பில் கவனம் செலுத்துவார் என்பதுடன், நிறுவனத்தின் இருப்பு மற்றும் வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்துவதில் தனது பங்களிப்பை அவர் செலுத்துவார். யூசுப் தனது புதிய பதவிக்கு அமைய, இன்றைய பரந்துபட்ட சூழலில் வர்த்தக விருத்தி, அதன் அளவீடு, அதன் மீளெழுச்சி ஆகியன தொடர்பில் ஆராய்ந்து அவற்றை அதிகரிக்கும் வகையில், VMware இன் அதிநவீன கண்டுபிடிப்புகளின் விநியோகத்தை ஊக்குவித்து, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுவார்.

வளர்ந்து வரும் ஆசிய சந்தையின், நாட்டுக்கான தலைவரும் பொது முகாமையாளருமான நிதின் அஹுஜா (Asia Emerging Markets, Country Leader & Manager, Nitin Ahuja) இது தொடர்பில் தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்றானது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மற்றும் பணியாற்றுகின்ற சூழலை முற்றாக மாற்றியமைத்துள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இந்நிலையிலிருந்து மீண்டு, வளர்ச்சியை நோக்கி தங்கள் பயணத்தை துரிதப்படுத்தி வரும் இக்காலப் பகுதியில், ​​கிளவுட் மற்றும் நவீன மென்பொருட்கள், வணிக புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேலோங்கச் செய்வதன் மூலம், நிறுவனங்கள் உச்சங்களை நோக்கி எட்டுவதற்கு வலுவான டிஜிட்டல் அடித்தளம் மிக முக்கியமானதாகும்” என்றார். “யூசுப் இதற்கு முன்னர் பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். புதிய பொருளாதார வளர்ச்சி மற்றும் புத்தாக்க அம்சங்களில் அவர் கொண்டுள்ள விரிவான, ஆழமான அனுபவத்துடன், எமது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாற்றத்தை வழங்குவதில் அவர் முக்கிய பங்கு வகிப்பாரென நாம் நம்புகிறோம்.” என்றார்.

யூசுப்பிற்கு வழங்கப்பட்டுள்ள தற்போதைய நியமனத்திற்கு முன்னர், அவர் VMware இல் பங்காளி வர்த்தக முகாமையாளராக (Partner Business Manager) பதவி வகித்தார். இதன் போது அவர் கடந்த ஆண்டுகளாக இலங்கை மற்றும் மாலைதீவு முழுவதும் நிறுவனத்தின் பங்காளராக சந்தை உத்திகளை வழிநடத்தி வந்தார். யூசுப் VMware இல் இணைவதற்கு முன்னர், Dell Technologies இனது வணிக தலைவராகவும் Lenovo வில், நாட்டுக்கான வணிகத் தலைவராகவும் (Country Business Head) இருந்தார். அவரது வகித்த தலைமைத்துவ பதவிகளில், அவர் மூலோபாயக் கணக்கீடுகளை வழிநடத்தியதோடு, இலங்கை, மாலைதீவு, நேபாளம், பூட்டான் உள்ளிட்ட நாடுகளில் புதிய பொருளாதார முன்னேற்றம், ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை இடையிலான வணிக உத்திகள் போன்றவற்றிற்கு பொறுப்பாக இருந்தார்.

புதிய நியமனம் தொடர்பில் கருத்து வெளியிட்ட VMware இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான முகாமையாளர் யூசுப் ஷிராஸ், “நாம் டிஜிட்டல் மாற்றம் மற்றும் புத்தாக்கத்தின் இணைப்பு பாதையாக செயற்படுபவர்கள் எனும் ரீதியில், இலங்கை மற்றும் மாலைதீவில் உள்ள நிறுவனங்களுக்கு இது ஒரு உற்சாகமான நேரமாகும். நிறுவனங்கள் தங்களின் மாற்றத்திற்கான பாதை தொடர்பில் கரிசனையுடனும், அதனை உள்வாங்குவதிலும், அது தொடர்பில் துரிதப்படுத்துவதிலும் ஆர்வமாக இருப்பதால், நான் அத்தகைய தொழில்நுட்ப சூழலுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன். இதன் மூலம் அவர்களின் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி, எதிர்காலத்தை நோக்கி அவர்களை வேகமாக பயணிக்க உதவியாக இருப்பேன்.” என்றார்

இந்தோனேசியாவின் LCC InfoTech இல் கணனி விஞ்ஞானம் தொடர்பான இளங்கலை பட்டத்தைப் பெற்றுள்ள யூசுப், தற்போது Anglia Ruskin பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுகலைப் பட்டத்தை பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top