நிலைபேறான மின்மயமாக்கல் குறித்து அரசுக்கு CMTA விடுக்கும் ஆலோசனை

மின்சார வாகனங்கள் (EVs) இலங்கையில் மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள வாகனங்களின் எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது எனும் அரசாங்கத்தின் கருத்தை, தெற்காசியாவின் மிக சிரேஷ்ட வாகன சங்கமான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) வரவேற்கிறது. குறைவான புகை வெளியேற்றம் மற்றும்  எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் EV களின் நன்மைகள் மிகவும் தெளிவாக காணப்படுகின்றது combustion என்ஜின்களில் (ICE) இருந்து EV களுக்கு மாறுவது – பொதுவாக மின்மயமாக்கல் என குறிப்பிடப்படும். சரியான திட்டமிடல் மற்றும் தகவலறிந்து முடிவெடுப்பதன் மூலம் அரசாங்கம், நுகர்வோர், தொழில்துறை ஆகிய அனைத்து பிரிவினரினதும் நலன்களைப் பாதுகாக்க முடியுமென CMTA சுட்டிக்காட்டுகின்றது.

உலகளாவிய EV உற்பத்தியாளர்களை அணுகக்கூடிய மற்றும் இலங்கையில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சங்கம் எனும் வகையில், இலங்கைக்கு EV களை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் அதனை ஏற்பது தொடர்பான உரிய விடயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என CMTA கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக உலகளாவிய உற்பத்தியாளர்களின் ஆலோசனையின் பேரில் சங்கமான KPMG உடன் ஒரு விரிவான வாகனத் தொழிற்துறை செயற்பாட்டு வரைபடத்தை உருவாக்க முடிவு செய்துள்ளதுடன், EV களின் நிலைபேறான அறிமுகத்தையும் அதில் உள்ளடக்கியுள்ளது. வாகன தொழில்துறை நடத்தை தொடர்பான குறித்த அறிக்கை, நிபுணர்கள் ஆலோசனைகளுக்காக உரிய அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

உலகளாவிய EV உற்பத்தியாளர்களினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய, கருத்தில் எடுக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்களை, கொள்கை வகுப்பாளர்களுக்கு CMTA அந்த அறிக்கையில் முன்வைத்துள்ளது. முதலாவதாக, உயர் மின்னழுத்த (HV) மின்கலங்கள் மற்றும் EV களின் மின்சார முகாமைத்துவ அமைப்புகள் உள்ளூர் காலநிலை நிலைமைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். காரணம் அவை அதிக உணர்திறன் கொண்டவை என்பதுடன் குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்திற்கு இணங்கும் வகையில் உற்பத்தியாளரால் அமைக்கப்பட வேண்டும். அது தவிர, HV மின்கலங்களின் அடிப்படையில், பயணிகளை ஏற்றும் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 5 வருடங்களும், 2 அல்லது 3 சக்கர வாகனங்களுக்கு 3 வருடங்களும் குறைந்தபட்ச உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். இது நுகர்வோருக்கு ஏற்படும் செலவுகளிலிருந்து பாதுகாக்கவும், இதற்கான பாகங்களுக்கு மிக அதிக செலவு என்பதை கருத்தில் கொண்டு, குறைபாடுள்ள மின்கலங்கள் மற்றும் அது தொடர்பான பாகங்களை மாற்றுவதன் காரணமாக ஏற்படும் நாட்டின் செலாவணி வெளியேற்றத்தை முன்கூட்டிய தடுக்கவும் வசதியளிக்கும். அது தவிர, EV தொடர்பான பழுதுபார்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள், உரிய பாதுகாப்பு உபகரணங்கள்,மற்றும் அவை தொடர்பான பயிற்சிகள், அபாயகரமான நிலையில் உள்ள (உ+ம்: விபத்துக்குப் பிறகு) வாகனங்கள் அல்லது HV மின்கலங்களை பேண தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களை கொண்டிருத்தல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு ரீதியில் உலகளவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தரங்களுக்கு இணங்கியவர்களாக இருக்கு வேண்டும்.

மின்மயமாக்கலுக்கான ஒரு நிலைபேறான பாதையினை ஊக்குவிக்கும் பொருட்டு, ஆயுட்காலம் நிறைவடைந்த HV மின்கலங்கள் மற்றும் ஏனைய கூறுகளை கையாளுதல் தொடர்பான சட்ட ரீதியான கட்டமைப்பை நிறுவுமாறு CMTA ஆனது அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது. அவற்றை உரிய வகையில் அகற்றாவிட்டால், HV மின்கலங்கள் சூழலுக்கு மாத்திரமல்லாது நிலத்தடி நீருக்கும் மிக ஆபத்தை ஏற்படுத்தும். குறைந்த தரத்திலான மின்கலங்களின் இறக்குமதிகளைத் தவிர்ப்பதற்காக, HV மின்கலங்களின் இறக்குமதியின் போது, அது தொடர்பான குறைந்தபட்சம் இருக்க வேண்டிய தொழில்நுட்பத் தரத்தின் அவசியத்தை வலியுறுத்துவதுடன், இறக்குமதி செய்யும் நிறுவனங்களுடன் அதன் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து உரிய தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன், நாட்டில் அதிநவீன HV மின்கல மீள்சுழற்சி மற்றும் மீள் கட்டமைப்பு வசதிகளை அமைக்க வேண்டுமென்பதையும் CMTA ஊக்குவிக்கிறது.

வெற்றிகரமான பாரிய அளவிலான மின்மயமாக்கலுக்கு பொது உட்கட்டமைப்பும் முக்கியமானது. புகழ்பெற்ற உலகளாவிய EV உற்பத்தியாளர்கள் அனைவரும், EV பயனாளர்களுக்கு மன நிறைவை வழங்கும் வகையிலும், நீண்ட பயணங்களுக்கு வழிவகுப்பதற்குமாக, வேகமாக சார்ஜ் செய்யவதற்கான பொது வலையமைப்பொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்படுகின்றது. EV பழுதுபார்ப்பதற்கான பயிற்சி வசதிகள் மற்றும் அது தொடர்பான வளங்களின் அவசியத்தை கருத்திற் கொண்டு, எதிர்காலத்தில் EV பழுதுபார்த்தல் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில், சான்றிதழ் அளிக்கப்பட்ட EV தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதற்காக தொழில்பயிற்சி நிறுவனங்களில் அது தொடர்பான பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் அவசியமாகும்.

தருணத்திற்கு ஏற்ற தலைப்பான EV பற்றி CMTA தலைவர் யசேந்திர அமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “வாகன மின்மயமாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு முக்கிய நகரங்களுக்கிடையேயான தூரம் மிக நவீன EV வரம்பிற்குள். மின்மயமாக்கலானது சந்தேகத்திற்கிடமின்றி அதுவே எதிர்காலமாகும். அத்துடன் நிலைபேறான மின்மயமாக்கலுக்கு உகந்த சூழலை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுப்பதைக் காண விரும்புகிறோம். ஏனெனில் ஒரு ஒழுங்கற்ற அறிமுகமானது, நுகர்வோருக்கும் தொழில்துறைக்கும் தீங்கு விளைவிக்கும் செயன்முறையாக மாற்றி விடும்.

பயணிகள் வாகனங்களை EV களாக மாற்றுவதோடு, வர்த்தக வாகனங்களை தொடர்ந்தும் எரிபொருள் பயன்பாட்டு வாகனங்களாக பேணுவதன் மூலம், எரிபொருள் இறக்குமதிகளில் எதிர்பார்க்கப்படும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதால் மின்மயமாக்கல் குறித்து ஒரு சமநிலையான மற்றும் தகவல் தெரிந்த முடிவை கொள்கை வகுப்பாளர்கள் எடுக்க வேண்டுமென CMTA சுட்டிக்காட்டுகின்றது. நாட்டில் தற்போதுள்ள பழைய பயணிகள் வாகனங்களின் பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியமாகும். நாட்டின் எரிபொருள் நுகர்வு மீது அவை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவற்றை கைவிடுதல் அல்லது மீள் ஏற்றுமதி கொள்கை மூலம் அது தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

ஒரு EV மாதிரியின் இறக்குமதிக்கான செலவு அதன் ICE மாதிரியின் இறக்குமதி செலவை விட 20-30% அதிகம் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது குறைவான எரிபொருள் நுகர்வு மற்றும் பராமரிப்பு செலவுகளால் ஒரு சில வருடங்களில் ஈடுசெய்யப்படும்.

2015ஆம் ஆண்டு, இலங்கை சந்தையில் மிகவும் குறைந்த இறக்குமதி வரிகளில், எந்தவொரு முன்யோசனையும் இல்லாமல், அவ்வேளையில் CMTA முன்வைத்த பரிந்துரைகளுக்கு மாற்றமாகவும் EV கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக தரம் குறைந்த (பயன்படுத்தப்பட்ட) வாகனங்கள் இறக்குமதியாகின. இது தற்போது மின்கல செயலிழப்பு காரணமாக, சுமார் 5,000 EV கொண்ட உரிமையாளர்களுக்கு பெரும் சுமையானதாக உள்ளது. இன்று வரை, இவ்வாடிக்கையாளர்களுக்கு எவ்வித தீர்வும் இல்லை என்பதுடன், அவற்றை சந்தை மதிப்புக்கு மிகக் குறைவான விலையில் விற்கவோ, பெட்ரோல் என்ஜின்களுக்கு மாற்றி சட்டவிரோத பதிவுகளுடன் பயன்படுத்தவோ அல்லது பழுதடைந்த அதன் மின்கலங்களுடன், 40 – 60 கி.மீ. எனும் ஒரு குறுகிய தூரம் வரை பயணிக்கும் வகையில் தொடர்ந்தும் பயன்படுத்தவோ அதன் உரிமையாளர்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். எதிர்காலத்தின் அவசியம் கருதி, 2015 இல் இடம்பெற்ற தவறுகளிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு, நிலைபேறான மின்மயமாக்கலுக்காக, புகழ்பெற்ற உலகளாவிய EV உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொள்ளுமாறு ​​CMTA பரிந்துரைக்கிறது.

Ceylon Motor Traders Association (CMTA),  1920 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இணைந்த துணை அமைப்பு எனும் வகையில், இலங்கை வாகன தொழிற்துறையின் குரலாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இப்பிராந்தியத்தில் மிக சிரேஷ்ட வாகன வர்த்தக சங்கம் இதுவென்பதுடன் அனைத்து முன்னணி சர்வதேச வர்த்தக நாமங்களையும் அதன் முகவர்களின் ஊடாக அது பிரதிநித்துவம் செய்கின்றது. CMTA உறுப்பினர்கள், ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான இலங்கையர்களை பணிக்கு அமர்த்தி, பயிற்சிகளை வழங்கும் அதே நேரத்தில், பொறியியல் மற்றும் முகாமைத்துவத்தில் சர்வதேச ரீதியாக கடைபிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகளை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதுடன், நன்கு பயிற்றப்பட்ட மற்றும் வெளிநாடுகளில் தொழில் பெறும் ஆற்றல் கொண்ட ஒரு தொழிற்படையை உருவாக்குகின்றது. CMTA உறுப்பினர்கள் அனைவரும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் உற்பத்தியாளர்களால் கணக்காய்வு செய்யப்படுவதோடு, இறக்குமதி செய்யும் வாகனங்களை உற்பத்தியாளரிடமிருந்து அவர்கள் நேரடியாக தருவிப்பதுடன், அவை இலங்கை சந்தை நிலைமைக்கு ஏற்ற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு, உரிய உற்பத்தியாளரின் முழு உத்தரவாதத்தையும் கொண்டுள்ளன.

– முற்றும் –

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top