உயர் தொழில்நுட்ப ZTE ஸ்மார்ட்போன் வர்த்தகநாமத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Singer

இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதன விற்பனையாளரான Singer Sri Lanka PLC நிறுவனம்,  ZTE Corporation உடன் இணைந்து ZTE ஸ்மார்ட்போன் வர்த்தகநாமத்தை இணையத்தின் ஊடாக மெய்நிகர் முறையில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் இலங்கையில் அறிமுகப்படுத்தியது. Singer நிறுவனமானது, ZTE வர்த்தகநாமத்தின் தேசிய விநியோகஸ்தர் என்ற வகையில், ஆரம்ப, நடுத்தர மற்றும் முதன்மையான ZTE ஸ்மார்ட்போன்களின் முழுமையான வரிசையை விரைவில் இலங்கையில் காட்சிப்படுத்தவுள்ளது.

இந்த மெய்நிகர் நிகழ்வின் போது,  அதி நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கவர்ச்சியான வடிவத்துடன் கூடிய  ZTE V30, ZTE V30 Vita ஆகிய ZTE V30 ஸ்மார்ட்போன் மாதிரிகளை  அறிமுகப்படுத்தியது.

ZTE ஒரு முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குனரென்பதுடன் வலுவான செயல்திறன் மூலம் வலுவூட்டப்படும் ஒரு புரட்சிகர பயனர் அனுபவத்தை வழங்கும் புத்தாக்க தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் செழுமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. 5G உட்கட்டமைப்பு, தரவு மையங்கள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள், அணியக்கூடிய தொழில்நுட்பங்கள், ஓடியோ சாதனங்கள், IoT சாதனங்கள் அடங்கலான ஸ்மார்ட் சாதனங்கள் பிரிவு போன்றவையே அதன் பிரதான முக்கிய கூறுகளாகும். வேகம், செயல்திறன், கெமரா போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி நவீன நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ப ஸ்மார்ட்போன் தொழில்நுட்பங்களை மேம்படுத்த ZTE வர்த்தகநாமம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

ஸ்மார்ட் வாழ்க்கைக்கு தடையற்ற அணுகலை வழங்கும் முழுமையான ஸ்மார்ட்போன் வரிசையினை ZTE அறிமுகப்படுத்துகின்றது. ZTE இன் ஸ்மார்ட்போன்களானது ZTE Blade தொடரின் கீழ் ஆரம்ப நிலை முதல் நடுத்தர நிலை ஸ்மார்ட்போன்களையும், ZTE Axon தொடரிலிருந்து முதன்மையான 5G சாதனங்களையும், RedMagic தொடரின் கீழ் அதன் உயர்நிலை கேமிங் ஸ்மார்ட்போன்களையும் உள்ளடக்கியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ZTE ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் தொடர்பில் Singer Sri Lanka PLC இன் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன கருத்து தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களுக்கு அதிக தெரிவுகளை வழங்கும் உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன் வர்த்தகநாமத்தை இலங்கைக்கு கொண்டு வருவதில் நாங்கள் உண்மையில் பெருமையடைகிறோம். புதிய ZTE  ஸ்மார்ட்போன்கள் அவற்றின் அனைத்து அம்சங்களிலும் ஒரு பாரிய முன்னேற்றத்தை நிரூபிக்கும் அதே நேரத்தில் ஸ்மார்ட்போன் பயனர்கள் வேகம், செயல்திறன், உருவாக்க தரம், கெமரா புத்தாக்கங்கள் மற்றும் மேலும் பலவற்றில் ஈடிணையற்ற மாற்றங்களைக் காண்பார்கள். ZTE ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், Singer நவீன தொழில்நுட்பத்தை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் போட்டித் தன்மை மிக்க விலையில் அணுக உதவுகிறது. செப்டெம்பர் முதல் புதிய ZTE ஸ்மார்ட்போன் வரிசையை வெளியிட நாம் எதிர்பார்க்கின்றோம்,”என்றார்.

அனைத்து ZTE  ஸ்மார்ட்போன்களும் நம்பகமான Singer உத்தரவாதத்தைக் கொண்டுள்ளதுடன், இதனை நாடளாவிய விநியோகஸ்தர்கள் ஊடாக கோர முடியும். தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை மற்றும் முகவர் வலையமைப்புகளுக்கு Singer மிகவும் புகழ் பெற்றது. Singer நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் 23 விநியோகஸ்தர்கள் உள்ளதுடன், அவர்கள் ஸ்மார்ட்போன்களை நன்கு கட்டமைக்கப்பட்ட விநியோக வலையமைப்பு மற்றும் ஒரு முழுமையான மின் வர்த்தக தளமான Singer.lk மூலம் 1800 இற்கும் மேற்பட்ட விற்பனை முகவர்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். சில்லறை மற்றும் விநியோகஸ்தர் பிரிவானது Singer இன் பலமானது அதை சில்லறை விற்பனையில் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

“ZTE இல், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒருங்கிணைந்த தொடர்பாடல்களில் தொடர்ச்சியான புத்தாக்கத்தில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எங்கள் தொழில்நுட்ப தீர்வுகளில் ஸ்மார்ட்போன்கள் ஒரு முதன்மைப் பிரிவாக இருப்பதால், மேம்பட்ட அம்சங்களுடன் எதிர்காலத்திற்கு ஏற்ற சாதனங்களை வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு விரிவான ஸ்மார்ட்போன் தயாரிப்பு வரிசையை நாங்கள் வழங்குகிறோம். அவை தொழில்சார் புகைப்படவியல், கேமிங் மற்றும் வழக்கமான பயன்பாடுகளுக்கேற்றவையாக உள்ளன. இலங்கை ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைவதற்கு Singer சிறந்த பங்குதாரர் என்பதை நாங்கள் கண்டறிந்தோம்,” என ZTE Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரியான யாங் மின் தெரிவித்தார்.

தேசிய விநியோகஸ்தராக ZTE உடனான Singer இன்  பங்குடமையின் மூலம் உள்நாட்டு சில்லறை விற்பனை ஜாம்பவானானது இலங்கையில் ZTE சாதனங்களின் வரிசையை தொடர்ந்து அறிமுகப்படுத்தும்.

(இடமிருந்து வலம்) தாரக வர்ணகுலசூரிய, டிஜிட்டல் தயாரிப்பு பிரிவுக்கான முகாமையாளர் – Singer Sri Lanka PLC,  ஷனில் பெரேரா, முகாமைத்துவ பணிப்பாளர்- Singer Sri Lanka PLC, மஹேஸ் விஜேவர்தன, பிரதம நிறைவேற்று அதிகாரி – Singer Sri Lanka PLC, யாங் மிங், பிரதம நிறைவேற்று அதிகாரி  – ZTE Lanka (PVT) LTD, யோங்கி ஷுஹேங், பிரதான வாடிக்கையாளர்களுக்கான முகாமையாளர் – ZTE Lanka (PVT) LTD, சமித் பெர்ணான்டோ, டிஜிட்டல் தயாரிப்புகளுக்கான வர்த்தகநாம முகாமையாளர் – Singer Sri Lanka PLC

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top