இலங்கையில் சலவை தொடர்பான தீர்வுகளின் முகத்தோற்றத்தை மீள்வரையறை செய்யும் தீவா

இலங்கையில் வீட்டுப் பாவனைக்கான சலவை தொடர்பான தேவைகளுக்கு உயர்தரமான தீர்வுகளை வழங்கி செழுமையான வரலாற்றைக் கொண்ட முன்னணி சலவை பரமாரிப்பு வர்த்தகநாமமாக  Hemas Consumer Brands இன் தீவா திகழ்கின்றது. உண்மையான இலங்கை வர்த்தகநாமமான தீவா, 2003 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, வழங்கும் பணத்திற்கு சிறந்த பெறுமதியை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தி, இலங்கையில் மிகவும் அரவணைக்கப்படும் வீட்டுப் பாவனை வர்த்தகநாமங்களில் ஒன்றாக இடம்பிடிக்கும் நோக்குடன் தனது பயணத்தை ஆரம்பித்தது.

சலவை  தீர்வுகளுக்கு கட்டுப்படியாகும் அணுகலை வழங்கும் அதே வேளையில் தீவா தனது தயாரிப்பு வரிசையை தொடர்ந்து விரிவுபடுத்தியது. கட்டுப்படியாகும் விலையைக் கொண்ட சலவை பராமரிப்பு தீர்வுகளின் மூலம் இலங்கையர்களை வலுவூட்டுவதை இதயத்தில் கொண்டிருந்ததுடன், இல்லத்தரசிகளின் புத்திசாலித்தனமான தெரிவாக இந்த வர்த்தகநாமம் இடம்பிடித்தது. இதன் சுவாரஸ்யம் என்னவெனில், தீவாவின் முதன்மை தயாரிப்புகள் உயர் தர வாசனை மந்திர சூத்திரம், பைபர் கிளீன் தொழில்நுட்பம் மற்றும் ஒப்டிகள் பிரைட்னர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளமையாகும்.

சலவை சவர்க்கார பாவனையாளர்களுக்கு வசதியான மாற்றீட்டை வழங்கும் நோக்கில் 2003 ஆம் ஆண்டில் தீவா தனது சலவைத்தூளை அறிமுகப்படுத்தியது. சந்தையில் சலவை சவர்க்காரம் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், சலவைத்தூளின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சலவைத்தூள் பற்றிய நுகர்வோரின் எண்ணத்தை மாற்றுவதற்கும் வர்த்தகநாமம் மேற்கொண்ட முயற்சிகள் தீவாவை உள்நாட்டு நுகர்வோரின் இதயங்களை வெல்ல உதவியுடன், அதனை அவர்கள் மிகவும் பயனுள்ள சலவை பராமரிப்பு தயாரிப்பாக  ஏற்றுக் கொண்டனர்.

புதுப்பிக்கப்பட்ட சூத்திரம் மற்றும் லெமன் வாசனையுடன் தனது சலவைத்தூளை மீள் அறிமுகம் செய்தமையினால் 2010 ஆம் ஆண்டு தீவாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்தது. அத்தோடு, ஒரு குடும்பத்தின் ஒரு மாத கால பாவனைக்கு போதுமான 1 கிலோ கிராம் பொதியையும் அறிமுகப்படுத்தியிருந்தது. மேலும் தீவா சலவைத்தூள் சிறு பக்கற்றுக்களை (Sachets) மிகவும் கட்டுப்படியாகும் விலையில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பல்வேறு நுகர்வோர் பிரிவுகளின் சலவை பராமரிப்பு தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியது. சலவை தயாரிப்புகளுக்கான சந்தையில் அதிக தெரிவுகளை வழங்கும் நோக்கத்துடன் ஒரு புதிய சவர்க்கார வரிசையை தீவா 2011 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

மேலும், தீவா பாவனையாளர்களை காணித் துண்டுகளின் உரிமையாளர்களாக மாற்றும் அதன் தனித்துவமான “இடமே வாசனாவ” போட்டியின் மூலம் நுகர்வோருக்கு உற்சாகத்தை அளித்தது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற “இடமே வாசனாவ” போட்டி 2011 முதல் ஆரம்பிக்கப்பட்டதுடன், 25 க்கும் மேற்பட்ட அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு காணித் துண்டுகளை வழங்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டில், தீவா சலவைத்தூளானது டிரிபிள் ஆக்சன் சூத்திரம், ஒப்டிகள் பிரைட்னர்கள் மற்றும் நன்கு மேம்படுத்தப்பட்ட லெமன் மற்றும் லைம் வாசனையுடன் மீள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த டிரிபிள் ஆக்சன் சூத்திரம் உண்மையில் மிகவும் பயனுள்ளதாகவும் வேகமானதெனவும் நிரூபிக்கப்பட்டது. இந்த தயாரிப்பானது மிகவும் சிறந்த முறையில் செயற்படக் கூடியதாக உள்ளமையை உறுதி செய்ய இந்த வர்த்தகநாமம் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொண்டதுடன், இதன் மூலமாக தாய்மார்கள் தங்கள் குடும்பத்துடன் செலவழிக்க மிகவும் பெறுமதிமிக்க நேரத்தை வழங்கியது. அதே ஆண்டில்,  மல்லிகை மற்றும் லைம் உள்ளிட்ட மூன்று புதிய வகைகளில் தீவா தனது சவர்க்கார வரிசையை மீள் அறிமுகம் செய்தது. 2018 ஆம் ஆண்டில், தீவா தனது சலவைத்தூள் தயாரிப்புகளின் வரிசையை பைபர் க்ளீன் தொழில்நுட்பத்துடன் மீண்டும் அறிமுகப்படுத்தியதுடன், இது சிறந்த சுத்தப்படுத்தல் மற்றும் புத்துணர்ச்சியை வழங்க துப்புரவு சூத்திரத்தை புரட்சிகரமாக்கியது. இதனைத் தொடர்ந்து 2019 இல் பர்ப்யூம் மெஜிக்குடன் கூடிய தீவா சலவைத்தூளை மீண்டும் அறிமுகப்படுத்தியது.

இந்த வர்த்தகநாமமானது சலவை நோக்கங்களுக்காக உயர்ந்த திரவ தயாரிப்புகளைத் தேடும் நுகர்வோருக்கு, முதற்தர தயாரிப்புகளுடன் தனது தயாரிப்பு வரிசையை திரவப் பிரிவில் விரிவுபடுத்தியதால், 2020 ஆம் ஆண்டு தீவாவிற்கு ஒரு முக்கிய ஆண்டாக அமைந்தது. இந்த வர்த்தகநாமமானது அதன் துணை வர்த்தகநாமமான தீவா பவரை 2020 ஆம் ஆண்டு ஒக்டோபரில் அறிமுகப்படுத்தியது. ஜேர்ம் கார்ட் & கலர் கார்ட் என்ற இருவேறு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தூள் மற்றும் திரவமானது வழங்கும் பணத்துக்கு ஏற்ற சிறந்த பெறுமதியை வழங்கும் தயாரிப்பாகும். சலவை பிரிவில் திரவ மீள் நிரப்பலைத் தொடங்கிய முதல் வர்த்தகநாமமாகவும் தீவா பெயர் பெற்றது. தீவாவின் சலவை தயாரிப்பு வரிசையின் அண்மைய இணைப்பே அரலிய மற்றும் லைம் சலவைத்தூள் தயாரிப்புகள் ஆகும். இவை இந்த தயாரிப்பு வரிசைக்கு புதிய புத்துணர்ச்சியை சேர்க்கிறன. இந்த புதிய மலர் வாசனையானது, இத் தொழிற்துறையில் சலவை பிரிவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

தனது 18 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தின் போது, ​​உள்நாட்டு நுகர்வோரின் மாற்றமடைந்து வரும் தேவைகளைப் புரிந்துகொண்டு உள்நாட்டு வீட்டுப்பாவனை வர்த்தகநாமமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதுடன், தீவாவால் சிறந்த சலவை தீர்வுகளுடன் இலங்கையர்களுக்கு ஆதரவளிக்க முடிந்ததுள்ளது. Hemas Consumer brands இன் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தீவா தொடர்ந்து இலங்கையர்களின் வாழ்க்கையை உயர்த்துவதுடன், சலவை பராமரிப்பு பிரிவில் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top