பேபி ஷெரமியின் புதிய மூலிகை லோஷன்: மல்லிகை மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலவையுடன் உங்கள் குழந்தையின் சருமத்திற்கு இயற்கை நன்மையை தருகிறது

இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி ஷெரமி, ‘Pichcha and Kasturi Kaha’ (பிச்ச, கஸ்தூரி கஹ)  மல்லிகை மற்றும் கஸ்தூரி மஞ்சள் இணைந்த இயற்கை நன்மையுடனான ஒரு புதிய மூலிகை லோஷனை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சமீபத்திய அறிமுகமானது, பேபி ஷெரமியின் கிரீம்கள் மற்றும் லோஷன் உற்பத்திகளின் வரிசையை மேலும் அதிகரித்துள்ளது. இப்புதிய உற்பத்தியானது, குழந்தையின் சருமத்தை நன்கு ஈரப்பதனுடன் பேணுவதற்கான இயற்கை மூலப்பொருட்களின் சாறினால் செறிவூட்டப்பட்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டிலுள்ள நுகர்வோரால் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட நன்கு அறியப்பட்ட இரண்டு மூலிகைப் பொருட்களின் கலவையை உன்னிப்பாக அவதானித்து பேபி ஷெரமி தேர்ந்தெடுத்துள்ளது. மல்லிகை ஆனது, அதன் நறுமணத்திற்காக அறியப்படும் ஒரு மூலப்பொருள் என்பதுடன் சாந்தப்படுத்தும் இயல்பையும் கொண்டுள்ளதுடன், உலர்ந்த மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. கஸ்தூரி மஞ்சள் சாறானது, சருமத்தை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கச் செய்கிறது. மல்லிகை மற்றும் கஸ்தூரி மஞ்சள் சாறின் உரிய வகையில் அமைக்கப்பட்ட கலவையானது, குழந்தையின் சருமத்திற்கு நீண்ட நேரத்திற்கு அதற்கு ஊட்டத்தையும், புத்துணர்ச்சியையும் வழங்குகிறது.

இலங்கையின் புழுக்கமான காலநிலையானது, குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் காரணங்களில் ஒன்றாகும் என்பதுடன், பெற்றோர்கள், குழந்தைகளுக்காக கிரீம் அல்லது லோஷனைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்திற் கொள்ளும் முக்கிய விடயமாகவும் அது அமைகின்றது. பெற்றோர்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு, மல்லிகை மற்றும் கஸ்தூரி மஞ்சளின் இயற்கையான சிறந்த சாறுகளால் ஆக்கப்பட்டு, விரைவாக உறுஞ்சப்படும் திறன் கொண்ட வகையிலும் ஈரப்பதனாக வைத்திருக்கும் கலவையைக் கொண்டதாக, இந்த மூலிகை லோஷனை பேபி ஷெரமி உருவாக்கியுள்ளது.

நுகர்வோருக்கு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சரியான நேரத்திலும் பொருத்தமான தயாரிப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துகின்ற ஒரு வர்த்தக நாமமான பேபி ஷெரமி, குழந்தைகளுக்காக இயற்கை சாறுகளுடன் கூடிய அதிகமான தயாரிப்புகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை அடையாளம் கண்டுள்ளது. காரணம் இன்றைய கஷ்டமான கால கட்டத்தில் பெற்றோர், தங்கள் குழந்தைக்கு சிறந்தது என நம்புகின்ற, இதுபோன்ற இயற்கை மூலப்பொருட்களை அணுகக் கூடிய ஆடம்பரமான நிலை இல்லை என்பதேயாகும்.

குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கேற்ற உயர் தரமானதும், பாதுகாப்புத் தரங்களைப் பேணி தயாரிக்கப்படும் தயாரிப்புகளை வழங்க பேபி ஷெரமி தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்துள்ளது. ஏனைய அனைத்து பேபி ஷெரமி தயாரிப்புகளைப் போலவே, நீண்ட நேரத்திற்கு நீடித்து நிலைக்கும் வாசனை கொண்ட சமீபத்திய மூலிகை லோஷன், சர்வதேச வாசனைத்திரவிய சங்கத்தின் (International Fragrance Association (IFRA)) தரத்திற்கு இணங்குகிறது. அனைத்து பேபி ஷெரமி கிரீம்கள் மற்றும் லோஷன்களும் குழந்தையின் சருமத்திற்கு ஆறுதலளிப்பதோடு, அதற்கு போஷணையை வழங்குகின்றன. அத்துடன் பரபென் (Paraben), பெற்றோலியம் எண்ணெய் (Petroleum oil), Formaldehyde போன்ற பாதிப்பை விளைவிக்கும் பொருட்களிலிருந்து விடுபட்டு, சமநிலையான pH நிலையை  கொண்டதாக தயாரிக்கப்படுகின்றன.

பேபி ஷெரமி இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமாகும், இது சுமார் ஆறு தசாப்தங்களாக மிக உயர்ந்த, தரமான, பாதுகாப்பான குழந்தைகளுக்கான பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குகிறது. அனைத்து குழந்தைப் பராமரிப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான விரிவான குழந்தை பராமரிப்பு தயாரிப்பு வரிசையை பேபி ஷெரமி கொண்டுள்ளது. அதன் பரந்த அளவிலான குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளில் பேபி சவர்க்காரம், பேபி கொலோன், கிரீம், லோஷன், சலவைத் தூள் மற்றும் திரவம், பேபி ஒயில், பருத்தி காது துடைப்பான், டயபர்கள், ஈர துடைப்பான்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

முற்றும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top