Alliance Finance இற்கு அதன் நிலைபேறு தன்மையை அங்கீகரித்து ADFIAP விருதுகள் 2021 இல் இரு விருதுகள்

ஆசியா மற்றும் பசிபிக் அபிவிருத்தி நிதி நிறுவனங்களின் சங்கத்தின் (ADFIAP) 2021 விருது வழங்கும் நிகழ்வில், Alliance Finance Co. PLC (AFC) நிறுவனத்திற்கு, சமூக மற்றும் சூழல் நிலைபேறான நடைமுறைகளுக்கான அதன் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இரண்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இது அதன் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனைக்கு வழிவகுத்துள்ளது. சிறந்த அபிவிருத்தி திட்ட விருதுகளின் கீழ், ஒற்றுமைக்கான திட்டம் (Unity Project) தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒரு மில்லியன் மரங்களை நடும், பெரு நிறுவன சமூகப் பொறுப்புக்காக Merit விருதையும், சிறந்த நிலைபேறுதன்மை அறிக்கை தொடர்பில் மற்றொரு விசேட விருதையும் AFC வென்றுள்ளது.

ADFIAP விருதுகள் என்பது நிதித் துறை நிகழ்வுகளில், முதன்மையான விருது வழங்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். அது சமூக மற்றும் சூழல் நிலைபேறுதன்மை தொடர்பில், அபிவிருத்தி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சிறந்த முயற்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கிறது.

“ஒற்றுமைக்காக ஒரு மில்லியன் மரங்கள்” எனும் AFC இன் முதன்மையான சூழல் நிலைபேறுதன்மை திட்டத்திற்காக இக்கௌரவத்தை அது பெற்றுள்ளது. AFC இனது “துரு மிதுரு” திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 2019 இல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் போது, 991 பாடசாலைகளில் 370,000 பாடசாலை மாணவர்களின் பங்கேற்புடன் நாடு முழுவதும் 176,000 மரங்களை நடுவதில் AFC முன்னோடியாகதிகழ்ந்தது. AFC இன் சமீபத்திய மர நடுகை பிரசாரமானது, 2024ஆம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் மரங்களை நடவும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA), லயன்ஸ் கழகம், நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையம், அரச பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட திட்ட பங்காளிகளின் ஆதரவுடன் 300,000 மரங்களை இயற்கை அன்னைக்கு வழங்க இத்திட்டத்தின் மூலம் முடிந்துள்ளது.

நிலைபேறுதன்மை அறிக்கைக்கான இவ்வாண்டுக்கான விசேட விருதானது, AFC ஆண்டு அறிக்கைக்காக பெறப்படும் இரண்டாவது சர்வதேச அங்கீகாரமாகும். AFC தனது பங்குதாரர்களுக்கு 100% வெளிப்படைத்தன்மையுடன் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் தகவலை வழங்குவதனை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையிடலில் சிறந்த நடைமுறைகளை நிலைநிறுத்தி வருகிறது. இதன் மூலம் AFC அதன் அனைத்து வருடாந்த அறிக்கைகளிலும், சர்வதேச ஒருங்கிணைந்த அறிக்கையிடல் சபையினால் (International Integrated Reporting Council) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அறிக்கையிடல் வடிவமைப்பை பின்பற்றுகிறது. அத்துடன் அதன் நிலைபேறுதன்மை அறிக்கையானது, GRI நிலைபேறுதன்மை அறிக்கை தரநிலைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் Alliance Finance நிறுவனத்தின் பிரதித் தலைவரும் நிர்வாக பணிப்பாளருமான ரொமனிடி சில்வா தெரிவிக்கையில், “நிலைபேறான தன்மையின் பெறுமதியை உருவாக்குவதற்கான எமது அர்ப்பணிப்பின் காரணமாக, நாம் பெற்ற இந்த இரண்டு விருதுகள் தொடர்பிலும் பெருமையடைகிறோம். 2012 ஆம் ஆண்டில், வணிக தத்துவம், சமூகம், சூழல் ஆகிய மூன்று அடிப்படை அம்சங்கள் தொடர்பில் எமது பங்கு மற்றும் பொறுப்பு பற்றிய ஆழமான புரிதலுடன் சமூக முயற்சிகள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகிறோம். மர நடுகை பிரசாரம் போன்ற நிலைபேறான முயற்சிகளின் அவசியம், தற்போது மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. எமது எண்ணங்களைச் செயற்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் இதுவாகும். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், என்னால் வழிநடாத்த பாக்கியம் பெற்ற AFC கொண்டுள்ள சிறந்த அணிக்கு இந்த இரண்டு விருதுகளையும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவர்களின் முயற்சிகளே இந்த அங்கீகாரத்தை பெற எமக்கு உதவியது. இந்த இரண்டு விருதுகளை வெல்வதற்கு முன்பு, ADFIAP 2019 விருதுகள் நிகழ்வில், சமூக தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு தொடர்பில் AFC விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த மெரிட் விருதானது, நிலைபேறுதன்மைக்கான அர்ப்பணிப்புக்காக AFC பெறும் ஐந்தாவது சர்வதேச விருதாகும். ஒரு சமூக பொறுப்புள்ள நிறுவனம் எனும் வகையில், AFC ஒவ்வொரு ஆண்டும் அதன் இலாபத்தில் சுமார் 3-4% இனை நிலைபேறுதன்மை முயற்சிகளுக்காக முதலீடு செய்து வருகிறது. 2020/21 நிதியாண்டின் போது நிலைபேறுதன்மைக்கான முன்முயற்சிகளுக்கு AFC இன் பங்களிப்பு ரூ. 12 மில்லியனுக்கும் அதிகமாகும்; இதில் சமூகத்தில் உச்ச தாக்கத்தை செலுத்திய பல முன்முயற்சிகளும் அடங்குகின்றன. 2020ஆம் ஆண்டில், முன்னோடியான நிலைபேறுதன்மை தரநிலைகள் மற்றும் சான்றளிப்பு முன்முயற்சியின் (SSCI) கீழ் முழுமையான நிலைபேறுதன்மைக்கான சான்றிதழைப் பெற்ற தெற்காசியாவின் முதல் நிதி நிறுவனமாக AFC மாற்றமடைந்தது.

AFC இன் நிலைபேறுதன்மை முயற்சிகளுக்கான அணுகுமுறையானது, தொலைநோக்கு தலைமைத்துவத்தைக் கொண்ட AFC இன் பிரதித் தலைவரும் நிர்வாக பணிப்பாளருமான ரொமனி டி சில்வா மற்றும் பணிப்பாளர்கள் குழுவினால் வழிநடாத்தப்படுகின்றது. AFC தொடர்ந்து நிலைபேறான திட்டங்களில் முதலீடு செய்து, ஒரே எண்ணம் கொண்ட பங்குதாரர்களுடனான கூட்டாண்மையின் மூலம் அதன் நிலைபேறான வலையமைப்பை வலுப்படுத்தும். சூழல் பாதுகாப்பு முன்முயற்சிகளுக்கு AFC இன் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில், AFC மர நடுகை திட்டங்களுக்கான முக்கிய விநியோகஸ்தரான Ath Pavura Social Business தளத்தின் Thuru Viyana Plant நாற்றுமேடை திட்டமானது உதவிகளை வழங்கியது. மலைநாட்டுச் சிறுத்தைகளைப் பாதுகாக்கும் திட்டத்தில் வனப்பகுதி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளையுடன் இணைந்து, திட்டம் அமுல்படுத்தப்படும் இடத்தில் சிறுத்தைகளுடன், 35 பல்வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பாதுகாக்கவும் நிறுவனம் உதவியது. “நிலைபேறான நிதியின் மூலம் உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுதல்” எனும் அதன் நோக்கத்திற்காக AFC தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

Alliance Finance PLC பற்றி

Alliance Finance PLC ஆனது விருது பெற்ற, இலங்கையில் அனுமதிப்பத்திரம் கொண்ட நிதி நிறுவனமாகும். நிதி சார்ந்த வணிகத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், விசுவாசம் மிகுந்த நான்கு தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கல், நிதி உள்ளடக்கம், நிலைபேறுதன்மைக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது. AFC அதன் வாடிக்கையாளர்களின் வளர்ச்சி மற்றும் செழிப்பை ஏற்படுத்த, அவர்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்பி, நீடித்த உறவுகளை வளர்ப்பதற்கான பரஸ்பர நோக்கத்தை கொண்டுள்ளது. சூழல் மற்றும் நிலைபேறுதன்மை முன்முயற்சிகள் ஆகியன AFC இன் பெறுநிறுவன சமூக பொறுப்பு (CSR) நிகழ்ச்சி நிரலின் மையத்தில் உள்ளன. இது குறித்த மூன்று அடிப்படை அம்ச அணுகுமுறையை நோக்கி நிறுவனத்தின் உந்துதலை உள்ளடக்கியதாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top