அனைத்து வகையான புதிய சொகுசு சுவிட்சுகள் மற்றும் சொக்கெட்களை அறிமுகப்படுத்தும் CHINT Energy

CHINT Energy (PVT) Ltd ஆனது, CHINT Electric தயாரிப்புகளின் முன்னணி ஸ்மார்ட் ஆற்றல் தீர்வுகளை வழங்குவதோடு, இலங்கை வாடிக்கையாளர்களுக்கு அனைத்து புதிய 2L தொடர் சுவிட்சுகள் (switches) மற்றும் சொக்கெட்டுகளை (sockets) அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் தயாரிப்பு வகைகளை மேலும் விரிவுபடுத்துகிறது. CHINT Energy (PVT) Ltd ஆனது, நாட்டில் CHINT Electric வர்த்தக நாமங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் என்பதுடன், இது மின்சார உபகரண உற்பத்திகள் பற்றிய பரந்த அறிவைக் கொண்ட தொழில்துறை நிபுணர்களைக் கொண்டுள்ளது. CHINT ஆனது, உலகின் 3ஆவது மிகப் பெரிய மின்சார நிறுவனமாகும்.

இந்த அறிமுக நிகழ்வில் CHINT Energy (PVT) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் காமில் ஹுஸைன் கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் இந்த தயாரிப்பை அறிமுகப்படுத்தியமையானது, எமது மாபெரும் சாதனையாகும். கடந்த சில ஆண்டுகளாக தொழில்துறையில் நாம் வெற்றிகரமான வளர்ச்சியைப் பெற்றுள்ளோம் என்பதோடு, தொழில்துறையில் எமது தயாரிப்பு வகைகளை விரிவுபடுத்துவதன் மூலம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளோம் என்பதை 2L ‘Feliz’ தொடரின் அறிமுகம் காண்பிக்கிறது. CHINT Electric மூலம் மிக உயர் தரமான தயாரிப்புகளை நாட்டுக்கு வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

2L தொடர் சுவிட்சுகள், ‘Feliz’ எனப் பெயரிடப்பட்டுள்ளன. இது ஸ்பானிய மொழியில் ‘மகிழ்ச்சி’ என்று பொருள்படுகின்றது. இது வழக்கமான சுவிட்சுகள் மற்றும் சொக்கெட் வகைகளின் விதிமுறைகளையும் அதன் ஏகபோக உரிமையையும் தகர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2L தொடரானது, அதி நவீன, சட்டகம் அற்ற வடிவமைப்புடன் (frameless design) வருவதுடன், அதி-ஆடம்பரமான சுவிட்சுகள் மற்றும் சொக்கெட்டுகளின் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. இவை மிக உயர் தரமான மூலப்பொருட்கள் மற்றும் அதி நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன. 2L தொடரானது வாழ்நாள் உத்தரவாதத்துடன் வருகிறது.

இந்த புதிய 2L தொடரானது, அனைத்து வகையான modular  சுவிட்சுகள் மற்றும் சொக்கெட்டுகளை வழங்குகிறது. இது வீட்டுத் தேவையை பூர்த்தி செய்வதுடன், தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்தும் கிடைக்கிறது. கொழும்பு 05, ஹெவ்லொக் வீதியில் உள்ள CHINT பிரத்தியேக ஸ்டோரில் அனைத்து CHINT தயாரிப்புகளையும் அனுபவிப்பதற்கான வாய்ப்பையும் CHINT Energy பயனர்களுக்கு வழங்குகிறது.

CHINT Energy (PVT) Ltd இன் தேசிய விற்பனை முகாமையாளர் சந்தன குணசேன குறிப்பிடுகையில், “எம் மீதும் எமது தயாரிப்புகள் மீதும் தொடர்ச்சியாக ஆதரவையும் நம்பிக்கையையும் அளித்து, நாடு முழுவதும் எமது வலையமைப்பை வளர்ச்சியடைய தொடர்ந்தும் உதவி வருகின்ற, எமது மதிப்புமிக்க விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நாம் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிக்க விரும்புகிறோம். சீனாவின் CHINT Global உடன் இணைந்து, மிகவும் ஆடம்பரமான சுவிட்சுகள் மற்றும் சொக்கெட்டுகள் இலங்கையில் கிடைப்பது தொடர்பில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

CHINT Energy (PVT) Ltd இன் கள விற்பனை முகாமையாளர் மஹிந்த ஏகநாயக்க தெரிவிக்கையில், “இந்த புரட்சிகரமான மற்றும் ஆடம்பரமான தயாரிப்பின் மூலம், சுவிட்ச் மற்றும் சொக்கெட் சந்தையில் ஒரு அடையாளத்தை உருவாக்குவோம் என்று நாம் நம்புகிறோம். இது சந்தையில் அடுத்த ட்ரெண்டாக இருக்கும் என்று நாம் நம்புவதுடன், இது இலங்கையில் முதன்மையான சுவிட்ச் மற்றும் சொக்கெட் தொடராக இருக்கும் என்பதால், இது நிறுவனத்தின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்றும் நம்புகிறோம்” என்றார்.

CHINT Energy (PVT) Ltd, அனைத்து இலங்கையர்களினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், மிக உயர்ந்த மற்றும் நீடித்த தரம் வாய்ந்த மின்சார உபகரண தீர்வுகளை வழங்குவதற்கு எப்போதும் உறுதி பூண்டுள்ளது. இந்த அர்ப்பணிப்பு தொடர்பில், 2021 இல் CHINT மாநாட்டில் குளோபல் விருது உட்பட மிக உயர்ந்த பல்வேறு பாராட்டுகள் மற்றும் விருதுகள் உள்ளிட்ட வடிவில் உலகளாவிய அங்கீகாரத்தை CHINT Energy (PVT) Ltd பெற்றுள்ளது. CHINT தரக்குறியீடானது 12 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைச் சந்தையில் தடம் பதித்துள்ளது.

CHINT Energy (PVT) Ltd ஆனது, அங்கீகரிக்கப்பட்ட விநியோக வலையமைப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களை நாடளாவிய ரீதியில் கொண்டுள்ளதுடன், பரந்தளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் கொண்டுள்ளது. CHINT Energy ஆனது, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலையான மின்சார உபகரணங்கள் மற்றும் திறனான ஆற்றல் முகாமைத்துவ தொகுதிகளுக்கான தீர்வுகளை விநியோகிப்பவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

Photo Caption

இடமிருந்து வலமாக, காமில் ஹுஸைன் – CHINT எனர்ஜி (PVT) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர், சந்தன குணசேன – CHINT Energy (PVT) Ltd இன் தேசிய விற்பனை முகாமையாளர், மஹிந்த ஏகநாயக்க – CHINT Energy (PVT) Ltd இன் கள விற்பனை முகாமையாளர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top