COVID 19 க்கு எதிரான இலங்கையின் போருக்கு ஜோன் கீல்ஸ் குழு ஆதரவு அளிக்கிறது

ஜோன் கீல்ஸ் குழு அதன் சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான பொறுப்பை தொடர்ச்சியாக தடையின்றி நிறைவேற்றுவதோடு, இலங்கையில் COVID-19 சர்வதேச பரவல்  ஆரம்பித்ததிலிருந்து அதை                   எதிர்த்துப் போராடுவதிலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. இந்த சர்வதேச நோய் தீவிரமாக பரவியதிலிருந்து இலங்கையின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமும் குழுவின் வெவ்வேறு கம்பெனிகளும், தனது CSR ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் குழு வணிகங்கள் மூலம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாடு, முன்னணி சேவைகளில் இருப்பவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் உடனடி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளித்துள்ளது.

COVID-19 பரவியதை தொடர்ந்து இலங்கையின் தற்போதைய அவசர தேவையாக இருக்கும் பரிசோதனை திறனை அதிகரிப்பதை பூர்த்தி செய்யும் முகமாக ஜான் கீல்ஸ் அறக்கட்டளை (JKF) தெற்காசியா கேட்வே டெர்மினல்கள் (South Asia Gateway Terminals), டொய்ட்ச் வங்கி (Deutsche Bank) மற்றும் மெல்ஸ்டாகார்ப் பி.எல்.சி (Melstacorp PLC) ஆகியவற்றுடன் இணைந்து, தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் (ஐ.டி.எச்) மூலக்கூறு கண்டறியும் ஆய்வகத்தை நிறுவுவதற்கு ஆதரவளித்தது. ஆரம்பத்தில் ஒரு தற்காலிக ஆய்வக வசதி ஐ.டி.எச் இல் நிறுவப்பட்டு மார்ச் 29, 2020 முதல் செயல்பட தொடங்கியதோடு 2020 ஏப்ரல் 28 அன்று திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஐ.டி.எச் இன் சோதனை திறன் மற்றும் திருப்புமுனை நேரத்தை மேலும் மேம்படுத்தியது.

COVID -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் முன்னணியிலிருந்து செயல்படும்  நபர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், வைரஸின் தாகத்திற்கு முகம்கொடுப்பதை குறைக்கவும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (Personal Protection Equipment) JKF அரசு மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கி உதவியது. ஐ.டி.எச் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) உள்ள போதனா வைத்தியசாலைக்கும், ஹோமாகம அடிப்படை வைத்தியசாலைக்கும், , இலங்கை கோல்ட் ஸ்டோர்ஸ் (CCS) மற்றும் நெலுவா, ஹினிதும ஆகிய இடங்களில் உள்ள அடிப்படை மருத்துவமனைகளின் ஆதரவுடன் தேயிலை சிறுதொழில் தொழிற்சாலையுடன் (TSF) இணைந்து தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) நன்கொடையாக வழங்கப்பட்டன. கீல்ஸ் சூப்பர் மார்க்கெட்டுகள் கம்பஹாவில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனைக்கும், கொழும்பு மாவட்டத்திலுள்ள பொது சுகாதார ஆய்வாளர்களுக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை  (PPE) நன்கொடையாக வழங்கியது. நெலுவா, ஹினிதும ஆகிய இடங்களில் உள்ள அடிப்படை மருத்துவமனைகளின் பொது சுகாதார ஆய்வாளர்களுக்கு (PHI) JKF தேயிலை சிறுதொழில் தொழிற்சாலையின் ஆதரவுடன் (TSF) தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) நன்கொடையாக  வழங்கப்பட்டன.  பண்ணல, ஜா – எல, அவிசாவெல மற்றும் சண்டலங்காவ, சீதுவ, நவகமுவ மருத்துவமனைகள் மற்றும்   பண்ணல, ஜா – எல, நவகமுவ, அவிசாவெல காவல் நிலையங்களிலுள்ள சுகாதார அலுவலர்களுக்கு கீல்ஸ் உணவு தயாரிப்புகள் (KFP) மற்றும் எலிபாண்ட் ஹவுஸினால் (Elephant House) தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) நன்கொடையாக வழங்கப்பட்டன. பெலியகொட, மாபோல, மஹாபகே, சித்தவத்த , சீதுவ , எண்டெரமுல்லா மற்றும் அவிசாவளை ஆகிய இடங்களில் பி.எச். ஐ க்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களளுக்கான தேவை (PPE)  ஜோன் கீல்ஸ் லாஜிஸ்டிக்ஸ்சினால் சந்திகப்பட்டது.மேலும், எலிபாண்ட்  ஹவுஸ் ஜான் கீல்ஸ் ஆபிஸ் ஆட்டோமேஷனுடன் இணைந்து கடுவெலவில் உள்ள  சுகாதார அலுவலகத்திற்கு  (MOH)  ஒரு நகல் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியது. நெலுவா மருத்துவமனை மற்றும் நெலுவா நகரின் பொது இடங்களில் கிருமி நீக்கம் செய்வதற்கு (TSF) தேயிலை சிறுதொழில் தொழிற்சாலை உதவி செய்தது.

இலங்கையில் முடக்கப்பட்டதும் பல குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. JKF கீல்ஸ் உணவு தயாரிப்புகள் (KFP) மற்றும் எலிபாண்ட் ஹவுஸின் (Elephant House) உதவியினால் அரசு முகவரால் அடையாளம் காணப்பட்ட ஸ்லேவ் தீவு, திம்பிரிகஸ்யாயா, மட்டக்குளிய  மற்றும் கொலன்னாவ ஆகிய சமூகங்களிடையேயுள்ள குடும்பங்களுக்கு 10,000 அத்தியாவசிய பொருள் பொதிகள் இலவசமாக வழங்கப்பட்டன. கொழும்பு மாவட்ட செயலகம், பேரிடர் மேலாண்மைக்கான ஆசிய பசிபிக் கூட்டணி (A-PAD) மற்றும் அதன் ஊழியர்கள் ஆகியோரின் உதவியுடன் யூனியன் அஷ்யூரன்ஸ், மட்டக்குளிய, கொலன்னாவ, திம்பிரிகஸ்யாயா, கிருலப்பன மற்றும் நாரஹன்பிட்ட ஆகிய இடங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு 2,000 அத்தியாவசிய பொருள் பொதிகளை வழங்கியது. அத்துடன் அரசாங்க மருத்துவ அலுவலர் சங்கத்துடன் இணைந்து மாத்தறை , சிலாபம் , மஹோ, மாறவில, குருநாகல் மற்றும் தனமல்வில ஆகிய இடங்களில் அரச மருத்துவ அலுவலர் சங்கத்தின் உதவியுடன் 649 அத்தியாவசிய பொருள் பொதிகள் வழங்கப்பட்டது. சூரியவேவா பிரதேச செயலகத்தின் ஆதரவுடன் கீல்ஸ் சூப்பர் மார்க்கெட்டுகள் சூரியவேவாவில் உள்ள கீல்ஸ் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட காலமாக வழங்குபவர்கள் உட்பட ஏனைய சமூக உறுப்பினர்களுக்கு 300 அத்தியாவசிய பொருள் பொதிகளை நன்கொடையாக வழங்கியது.

COVID-19 தொற்று ஆரம்பித்த உடனடியாக JKF, கீல்ஸ் உணவு தயாரிப்புகள் (KFP) ,எலிபாண்ட் ஹவுஸ்  (Elephant House), சின்னமன் லேக்சைட் கொழும்பு மற்றும் சின்னமன் ரெட் கொழும்பு ஆகியன அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும்  நீரேற்ற உதவிகளை IDH ஊழியர்கள், ஆயுதப்படைகள் மற்றும் பிற சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்கியது. 

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பணியாளர்கள்  தமது தனிப்பட்ட நன்கொடைகள் மூலமும்  மருத்துவமனைகள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரண உதவிகளை விநியோகித்தல் மூலமும்  பல வழிகளில் குழுவின் நிவாரண முயற்சிகளுக்கு தன்னார்வ பணிகள் மூலமும் அதிரவளித்துள்ளனர். ஊரடங்கு காலங்களில் பல்பொருள் அங்காடிகள், பண்டகசாலை  செயல்பாடுகள், ஹோட்டல்கள், பயண மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் உட்பட பல வணிகங்கள், ஆன்லைன் விநியோகங்கள், உணவு மற்றும் அத்தியாவசிய தயாரிப்பு விநியோகச் சங்கிலிகளைப் பராமரித்தல், சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்புவது , நிவாரண உதவிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் கொண்டு செல்வது உள்ளிட்ட அத்தியாவசிய தேசிய தேவைகளுக்கு குழு ஊழியர்களின் பங்களிப்பு ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஆறு மையப் பகுதிகளில் பேரழிவு நிவாரணமும் ஒன்றாகும். `தேசத்தை நாளைக்காக மேம்படுத்துதல்’ என்ற CSR இன் சமூக பொறுப்புணர்வு பார்வையின் கீழ், குழு இலங்கையர்கள் மற்றும் உலகளாவிய சமூகங்களுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் துன்பம் மற்றும் பேரழிவு காலங்களில் உதவிக்கு வருவதாக உறுதியளிக்கிறது. அதன்படி, குழு வணிகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் உள்ளிட்ட பிற பங்குதாரர்களுடன் இணைந்து COVID-19 தொடர்பான நடுத்தர மற்றும் நீண்டகால ஆதரவுக்கான முயற்சிகளை JKF தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *