பிரம்மாண்ட ஒன்லைன் அறிமுக நிகழ்வில் பல ஸ்மார்ட் சாதங்களை அறிமுகப்படுத்திய Huawei

4 GB RAM + 64GB  நினைவகத்துடன் கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Y6p  அடங்கலாக

புத்தாக்க ஸ்மார்ட்போன் நிறுவனமான Huawei Y6p, Y5p, Huawei MatePad T 8, Huawei MateBook 13 மற்றும் MateBook D 15 என பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை இலங்கையின் முதலாவது பிரம்மாண்ட ஒன்லைன் நிகழ்வில், மாபெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மற்றும் உயர் ஈடுபாட்டுடனும் அறிமுகப்படுத்தியது. இந்த ஐந்து சாதனங்களும் இலங்கை சந்தையில் அவற்றின் தனித்துவமான அம்சங்களுடன் புரட்சியை ஏற்படுத்தவுள்ளதுடன், செயற்திறன், உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றில் புதிய அளவுகோலை நிர்ணயிக்கவுள்ளன.

Huawei Y6p, 4GB RAM + 64GB நினைவகத்துடன் ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்களுக்கான புதிய அளவுகோலாக ஸ்மார்ட்போன் அரங்கத்தில் நுழைகின்றது.  மேலும், இது 13MP பிரதான கெமரா, 5MP wide-angle  கெமரா மற்றும் 2MP depth கெமரா உள்ளிட்ட மூன்று கெமெரா அமைப்புடன் வருகின்றது. Huawei Y6p, உள்ளே பொருத்தப்பட்டுள்ள 5000 mAh மின்கலமானது, நாள் முழுவதும் தடையற்ற பாவனையை உறுதி செய்கின்றது. Huawei Y6p, phantom purple, emerald green, midnight black ஆகிய நிறங்களில், ரூபா. 30,449 என்ற அசத்தலான ஆரம்ப விலையில் கிடைக்கவுள்ளது.

நவீனமான கலை வடிவமைப்பில் அமைந்துள்ள Huawei Y5p, 2GB RAM மற்றும் 32GB உள்ளக நினைவகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3020 mAh  மின்கலம் மூலம் இயங்குவதுடன், midnight black, phantom blue மற்றும் mint green போன்ற புத்துணர்ச்சியூட்டும் வண்ணங்களில் கிடைக்கின்றது. இந்த கைக்கடக்கமான சாதனமானது, வசதியாக ஒற்றைக் கையில் பயன்படுத்தும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன்,  5.45 அங்குல HD திரையானது முழுமையான காட்சி அனுபவத்தை வழங்குகின்றது. Huawei Y5p இலங்கையில் ரூ. 18,999 என்ற அசத்தலான அறிமுக விலையில் கிடைக்கவுள்ளது.

“ஒரு பரந்த வாடிக்கையாளர் தளத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஐந்து Huawei சாதனங்களை அறிமுகப்படுத்திய, ஒரு அற்புதமான ஒன்லைன் அறிமுக நிகழ்வை நாம் கண்டு மகிழ்ந்தோம். ஸ்மார்ட் சாதனங்களைத் தயாரிப்பதில் புத்துருவாக்கம் ஒரு முக்கிய காரணி  என்பதுடன், வளர்ந்து வரும் எங்கள் தயாரிப்பு வரிசைக்கு புதுமையான இணைப்புகளைக் கொண்டுவருவதில் நாங்கள் முதன்மையாக கவனம் செலுத்துகிறோம்” என Huawei Devices Sri Lanka இன் இலங்கைக்கான தலைமை அதிகாரி, பீட்டர் லியூ தெரிவித்தார்.

Huawei MatePad T 8 ஒரு சிறிய, மிகவும் மெல்லிய வடிவமைப்பில் 80% screen-to-body-ratio மற்றும் 8 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இந்த கைக்கடக்கமான டெப்லட் Octa-core chipset மூலம் இயக்கப்படுவதுடன், இதன் பெரிய திரையில் தடையற்ற டெப்லட் அனுபவத்திற்கு துரித செயலாக்க வேகத்தை வழங்குகிறது. MatePad T 8, 5100 mAh நீடித்து நிலைக்கும் மின்கலத்தைக் கொண்டுள்ளது. இது 12 மணி நேரத்திற்கும் அதிக தொடர்ச்சியான வீடியோ பிளே பேக் மற்றும் இணையப் பாவனையை உறுதிப்படுத்துகிறது.

மிகவும் சக்திவாய்ந்த சாதனமான Huawei MateBook 13,  Huawei மடிக்கணினி வரிசையை அதன் புதுமையான அம்சங்களுடன் மிளிரச் செய்வதுடன்,  தொழில்முறை பணிகளுக்கு பல்வகையான திறனை சேர்க்கின்றது. இந்த 13 அங்குல அதி மெல்லிய மடிக்கணினி 88% screen-to-body-ratio உடன் வருவதுடன், ஒரு முழுமையான காட்சி அனுபவத்தை உயிர்ப்பிக்கிறது. இந்த மடிக்கணினி,  Huawei இன் தனித்துவமான பல்துறை ஒத்துழைப்பைக் கொண்டுள்ளதுடன், இது Huawei PC சாதனங்களின் பயனர் அனுபவத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் அறிவிப்புகளால் தொந்தரவு ஏற்படாமல் வேலையில் கவனம் செலுத்துவதையும், இரு சாதனங்களுக்கிடையில் கோப்புகளை இடம்மாற்றுவது போன்ற திறன்களைக் கொண்ட ஒரு சாதனத்தைப் பயன்படுத்துவதில் சௌகரியத்தையும், பாவனையாளர்கள் தமது  ஸ்மார்ட்போன் திரையை மடிக்கணினியில் பிரதிபலிக்கவும் அனுமதிக்கிறது. பல திரை ஒத்துழைப்பை செயற்படுத்துவதற்கு பாவனையாளர்கள் தமது மடிக்கணினியின் PC Manager ஐ,  Version 10 இற்கோ அல்லது அதற்கு பின்னரான தொகுப்புக்கு மேம்படுத்துவதுடன், NFC சிறப்பம்சத்துடன் கூடிய,  EMUI 10 ஐ இயக்கும், பல திரை ஒத்துழைப்புடன் கூடிய ஸ்மார்ட்போனுடன் இணைக்க வேண்டும். Huawei Matebook 13 ஆனது Intel மற்றும் AMD  ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கின்றது. மேலும் Huawei Matebook 13 Intel ரூபா 224,999 என்ற விலைக்கும், 179,999 ரூபா என்ற விலைக்கும் கிடைக்கின்றது. மேலும் இந்த பிரம்மாண்ட அறிமுக நிகழ்வில் Huawei MateBook D 15 மடிக்கணினியும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இது 15.6 அங்குல திரையுடன் கூடியதுடன், செயற்திறனை மேம்படுத்தும் AMD Ryzen புரசசரினால் வலுவூட்டப்படுகின்றது. இதன் பவர் பொத்தான் கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளமையானது இலகுவாகவும், பாதுகாப்பாகவும் உள்நுழைய வழி செய்கின்றது. இந்த மடிக்கணினியானது தொழில்சார் செயற்பாடுகளின் போது வினைத்திறன் மற்றும் செயற்திறனை மேம்படுத்தும் பல திரை ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது. Huawei MateBook D 15,  ரூபா.149,999  என்ற அசத்தலான அறிமுக விலையில் கிடைக்கவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top