Singer Fashion Academy: முயற்சியாண்மையின் ஊடாக மேன்மையை அடைதல்

60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் Singer Fashion Academy, பெஷன் டிசைனிங் மற்றும் ஆடை உருவாக்கத்தில் பல தொழில் முயற்சியாளர்களை உருவாக்கியுள்ளது. இந்த தொழில் முயற்சியாண்மை தொடர்பான கதைகள் Singer Fashion Academy வழங்கிய முன்னேற்றப் படிகளுக்கான தனிநபர்களின் நன்றிக்கடன் மற்றும் பல வருடகால கடும் உழைப்பின் மூலம் அடைந்த வெற்றியை உள்ளடக்கியுள்ளது. மிக முக்கியமானதும், தீவிர ஆர்வம் தேவைப்படுவதுமான கைவினைப்பொருளை மையமாகக் கொண்ட தொழில்சார் தகைமையைப் பெற்றதைத் தொடர்ந்து, தாம் நேசிப்பதிலிருந்து வெற்றிகரமான வாழ்க்கைத் தொழில் மற்றும் என்றும் வளர்ச்சியடையும் வியாபாரத்தை கட்டியெழுப்ப எதிர்ப்பார்த்திருப்போருக்கு தெளிவான பற்பலவிதமான வாய்ப்புகளை Singer Fashion Academy ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அத்தகைய ஒரு தொழில் முயற்சியாளரே டபிள்யூ.எஸ். ஹன்சனி மதுஷானி பெர்ணாண்டோ. சிலாபத்தைச் சேர்ந்தவர், ஆடை உருவாக்கம் மற்றும் பெஷன் டிசைனிங் மீது அவர் கொண்டிருந்த ஆர்வத்தினாலேயே Singer Fashion Academy இல் நான்கு அடிப்படை கற்கை நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்தார். ஒரு விளம்பர துண்டுப்பிரசுரத்தின் மூலம் கற்கை நிலையம் தொடர்பில் அறிந்து கொண்டதுடன், தனது சொந்த ஊரில் ஒரு கிளை இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

“சிலாபம் போன்ற கிராமப் புறத்தில், கட்டுப்படியாகும் கற்கை நெறிகள் மற்றும் ஆடை உருவாக்கம் போன்ற நாம் வாழ்க்கைத் தொழிலாக கட்டியெழுப்ப விரும்பும் பாடங்களுடன் கூடிய கல்வி நிலையங்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமானதாகும். Singer Fashion Academy இன் ஒரு கிளை திறக்கப்பட்டமையைத் தெரிந்து கொண்டதும், அங்கு பதிவு செய்யவும், எனது தொழில் வாழ்வினைக் கட்டியெழுப்ப தேவையான தகைமையைப் பெறுவதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தேன்,” ஹன்சனி தெரிவித்தார்.

அவரது தொழில் முயற்சியாண்மையான “Hansi Bridal Palace” சிலாபத்தில் மணப்பெண்களுக்கான ஆடைகள் மற்றும் புடவைகளை வாடகைக்கு வழங்கும் வர்த்தக நிலையமாக உள்ளது. ஆறு மாதங்களுக்கும் அதிகமாக இயங்கி வரும், “Hansi Bridal Palace” ஆயத்த பள்ளிச் சீருடைகள் மற்றும் பிற ஆடை தயாரிப்புகளை ஓடர்கள் அடிப்படையில் வழங்குகிறது. தனது தொழில் முயற்சியாண்மையின் உரிமையாளர் மற்றும் ஆடை உருவாக்குனராக மட்டுமன்றி தனது சகோதரியுடன் இணைந்து திருமண அலங்காரங்களையும் விற்பனை செய்கின்றார்.

Fashion Designing, Scientific Dressmaking, Tailoring மற்றும் Saree Jacket tailoringஆகியவற்றில் அடிப்படை பாடநெறிகளைத் தொடர்ந்த ஹன்சனி, 2017 ஆம் ஆண்டில் Singer Fashion Academy இல் தனது ஆர்வத்தை ஒரு நிலையான மற்றும் வெற்றிகரமான தொழில்சார் வாழ்க்கையாக மாற்றும் நம்பிக்கையில் நுழைந்தார். தனது பயிற்றுவிப்பாளரான ருவனி நிசன்சாலாவின் வழிகாட்டுதலின் கீழ் ஹன்சனி, கற்கை நெறிகளில் தனக்கு விருப்பமான பாடங்களை மிகவும் ஆர்வத்துடன் கற்றார். தனது விரிவுரையாளர்கள் அனைவரும் தங்கள் மாணவர்களுக்கு அவர்களது பட்டப்படிப்புக்கான பயணம் முழுவதும் முழுமூச்சாக உதவியதாக அவர் குறிப்பிட்டார். அவர்கள் தொழில் முயற்சியாண்மைக்கான பாதையில் அவர்களை ஊக்குவித்தனர், மேலும் அவர்களுக்கு மேலும் உதவ மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினர்.

Fashion Designing, Dressmaking சான்றிதழ் கற்கைநெறிகள் 6 மாதங்கள் வரை நீடித்தன. அதேபோல் Saree Jacket Tailoring கற்கைநெறி 4 மாதங்களில் நிறைவு செய்யப்பட்டது. பெஷன் டிசைனிங் பிரிவில் B தரத்தைப் பெற்று 2019 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற ஹன்சனி, சிலாபத்தில் தனது வியாபாரத்தை தொடங்கினார். தற்போதைய நிலவரப்படி, தனது வருமானத்தில் பெரும்பகுதி திருமண ஆடைகள் மற்றும் புடவைகளின் வாடகையிலிருந்து தனக்கு கிடைக்கின்றது என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *