SLASSCOM தனது IT/BPM வாரத்தின் நான்காம் கட்டத்தை அண்மையில் நிறைவு செய்ததுடன், 2019 ஆம் ஆண்டுக்கான இந் நிகழ்வு ஊவா மாகாணத்தின் பதுளை நகரில் இடம்பெற்றது. இலங்கையில் முழுமையான தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தி, பிராந்திய நகரங்களில் மனித ஆற்றல் உருவாக்கத்தை ஆதரித்து, கட்டமைக்கும் SLASSCOM இன் திறமையான முயற்சிக்கு IT/BPM வாரம் பெரும் பங்களிப்பு செய்தது. SLASSCOM இன் முன்னைய IT/BPM வாரங்கள் 2018 ஆம் ஆண்டு காலி மற்றும் மாத்தறையிலும், 2016 ஆம் ஆண்டு கண்டியிலிலும், 2014 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை (ICTA) வின் ஆதரவுடன், பிராந்திய முயற்சியாண்மையை போஷித்தல் என்ற தலைப்பின் கீழ் ஊவா IT/BPM வாரத்தை SLASSCOM ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வின் இணை அனுசரணையாளர்கள் SimCentric Technologies, IFS, Exetel Sri Lanka, ISM APAC மற்றும் VitalHub Innovations Lab என்பதுடன் உத்தியோகபூர்வ பத்திரிக்கை Daily FT இணைந்து கொண்டிருந்தது. மூன்று நாட்கள் நடாத்தப்பட்ட இந்த அவை, தொழில்துறையின் நவீன போக்குகள், அதன் எதிர்பார்ப்புகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களின் இரகசியங்களை எதிர்கால கேள்விகளை பூர்த்தி செய்ய, புதுமையான யோசனைகளைக் கொண்டு வர மாணவர்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்க ஊக்குவித்தல் மற்றும் வழிகாட்டுதல் தொடர்பில் கவனம் செலுத்தும், இலங்கையில் உள்ள IT/BPM துறையின் பல தொழில் வல்லுநர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியது.
SLASSCOM Board Director மற்றும் Managing Director – SimCentric Technologies Haridhu Abeygoonaratne, கருத்து தெரிவிக்கையில், “புதிய போக்குகளைக் கற்றுக்கொள்வதற்கான மாணவர்களின் உற்சாகத்தையும், அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்த துடிப்பான தொழிலில் இணைய அவர்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளனர் என்பதையும் பார்க்க ஆச்சரியமாக உள்ளது. தொழில் முயற்சியாண்மை நிகழ்விற்கு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவிலானோர் பங்குபற்றியுள்ளமை, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஊவா எவ்வாறு பங்களிக்க ஆர்வமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.” SLASSCOM ஊவா IT/BPM வாரத்தின் முதல் நாள் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் (UWU) 300 மாணவர்களின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பங்குபற்றுதலுடன் உற்சாகமான ஆரம்பத்தைக் கொண்டிருந்தது.
இந் நிகழ்வானது இத்துறைசார் தலைவர்களின் பங்குபற்றுதல் மற்றும் இளம் மற்றும் துடிதுடிப்பான பார்வையாளர்களுக்கான Blockchain, QA Automation, Source controlling techniques, மற்றும் Artificial Intelligence என தகவல் தொடர்பாடல் துறையின் அண்மையகால பிரபலமான மற்றும் நவீன போக்குகள் தொடர்பான அவர்களின் அறிவுப் பரிமாற்றல் அமர்வுகளுடன் ஆரம்பமாகியது. மதிய உணவு இடைவேளையைத் தொடர்ந்து, ஒரு மென்பொருள் உருவாக்குநரின் பங்கு, செயல்திறன்மிக்க தொடர்பாடல், வேலை ஒத்துழைப்புக் கலை மற்றும் IT/BPM துறையில் வேலை வாய்ப்புகள் போன்ற பல நடைமுறை தலைப்புகளை மாணவர்களால் ஆராய முடிந்தது. இந்த அமர்வுகள் முக்கியமாக இந்த மாணவர்களுக்கு நன்மையளிப்பதாக இருந்தது. ஏனெனில், அவர்களது தொழில் வாழ்வின் பாதையானது இது போன்ற உணர்ச்சிமிக்க மற்றும் அடிப்படை தலைப்புகளை மையமாகக் கொண்டது என்பதுடன் அவர்கள் தமது தொழில் வாழ்வில் முகங்கொடுக்கக் கூடிய சிரமங்களுக்கு புதுமையான மற்றும் நடைமுறை சார்ந்த தீர்வுகளையும் வழங்கியது. முதல் நாள் மாணவர்களுக்கும் SLASSCOM குழுவிற்கும் இடையே ஒருவருக்கொருவர் இடையிலான கலந்துரையாடல் அமர்வுகளுடன் நிறைவடைந்தது.
இரண்டாவது நாளானது ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் E பிரிவில் உள்ள அதி நவீன கணனி கூடத்தில் தொழில்நுட்ப அமர்வுடன் ஆரம்பமாகியது. VitalHub Innovations Lab நிறுவனத்தின் Associate Software Architect, Kelum Thenuwaraவினால் Java/ JavaScripts, ISM APAC நிறுவனத்தின் Software Engineer, Nayanajith Pilapitiyaவினால் C# மற்றும் SimCentric Technologies நிறுவனத்தின் Technical Lead, Waruna Tennakoonஇனால் ISM APAC and Source Control, ஆகிய மூன்று தொழில்நுட்ப பிரிவுகளை மையப்படுத்திய செயன்முறை விளக்கங்கள் பங்குபற்றிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும், மாணவர்களை எதிர்கால சவால்கள் மற்றும் தீர்வுகளுக்கு பெரும் பங்களிப்பும் வகையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் SLASSCOM அதிகாரிகளினால் இலங்கையில் முயற்சியாண்மை, இலங்கைக்கு அப்பாலான வியாபாரம் மற்றும் Island of Ingenuity (IOI) branding, ICT/BPM தொழில் முயற்சியாளர்களுக்கான அரச உதவி மற்றும் இலங்கையில் தொடக்க நிலை வணிகங்களின் சூழல் கட்டமைப்பு தொடர்பில் அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தத் துறையில் இணைந்துகொள்ள அவசியமான திறன்கள் தொடர்பில் Saman Maldeni, Director Export Services – Sri Lanka Export Development Board, Haridhu Abeygoonaratne, Managing Director – SimCentric Technologies மற்றும் Board Director of SLASSCOM, Dilan Rajapakse, Managing Director – VitalHub Innovations Lab, Kanishka Weeramunda – Founder – Paymedia மற்றும் Nayanajith Pilapitiya, Software Engineer – ISM APAC, ஆகியோர் கலந்துகொண்ட கலந்துரையாடலுடன் இந்த நாள் நிறைவடைந்தது.
Kanishka Weeramunda – Founder, PayMedia மற்றும் SquareHub அணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வுடன் மூன்றாம் நாள் ஆரம்பமாகியதுடன், தற்போது இயங்கிவரும் வியாபாரங்கள் அல்லது முன்னெடுப்பதற்கு சில வடிவ மாற்றங்கள் தேவைப்படும் வியாபார யோசனைகளைக் கொண்ட 140 உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். இந்த அமர்வானது Ice breaker, அதனைத் தொடர்ந்து ஒரு நிமிடத்துக்குள் தமது யோசனைகளை முன்வைக்கும் pitching நிகழ்வுடன் ஆரம்பமாகியது. இந்த pitching நிகழ்வின் போது சுமார் 30 யோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், பங்குபற்றுனர்கள் இவற்றில் சாத்தியமானவை என தாம் கருதுபவற்றுக்கு வாக்களிக்க வேண்டியிருந்தது. திறன்கள் பகுப்பாய்வு, போட்டியாளர்கள், சந்தை தயார் நிலை போன்றவற்றின் மூலம் இந்த யோசனைகள் பின்னர் எண்ணக்கருக்களாக உருவாக்கப்பட்டன. இந்த செயலமர்வின் போது, Workforce.lk இன் ஸ்தாபகர் நிசங்க டி சில்வா, முயற்சியாளராக தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்தளித்த ஊக்கமளிக்கும் சொற்பொழிவொன்றும் இடம்பெற்றது.
இறுதியாக, வியாபாரத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன, பங்கேற்பாளர்களுக்கு தங்கள் வணிகங்களை மேலும் மேம்படுத்துவதற்கும், அவற்றை நிறுவுவதற்குமான வழிகள் குறித்து பின்னூட்டல்கள் வழங்கப்பட்டன. இந்த வருட நிகழ்வின் ஊக்கங்கள் மற்றும் வெற்றி குறித்து Saman Maldeni, Director, Export Services of the Export Development Board மற்றும் Haridhu Abeygooneratne, SLASSCOM Board Director மற்றும் Managing Director of SimCentric Technologies ஆகியோர் ஆற்றிய உரைகளுடன் இறுதி அமர்வு நிறைவடைந்தது.