IIT இனால் புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு முன்னெடுப்பு

இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT), அண்மையில் நடைபெற்ற புதிய கல்வியாண்டுக்கான வரவேற்பு நிகழ்வில் பலதுறை இளமானிப் பட்டப்படிப்புக்களைத் தொடர எதிர்பார்க்கும் 400 க்கும் மேற்பட்ட மாணவர்களை வரவேற்றது. 2019 செப்டம்பர் 16 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 19 ஆம் திகதி வரை நான்கு நாட்களாக இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரைத் தெளிவுபடுத்தும் விதமாக பல்வேறு அமர்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுகளைப் போன்று இம்முறையும் IIT இன் BEng (Hons) in Software Engineering, BSc (Hons) in Computer Science, BSc (Hons) in Business Information Systems மற்றும் BA (Hons) in Business Management ஆகிய பட்டப்படிப்புக்களைத் தொடர்வதற்கென அதிகளவு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதன் காரணமாக மாணவர்கள் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வரவேற்பு அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் போது IIT இன் பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த விஜயரத்ன, IIT இன் பீடாதிபதியான நயோமி கிருஷ்ணராஜா மற்றும் ஏனைய சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலான சொற்பொழிவுகளை நிகழ்த்தினர்.

இந்த வரவேற்பு நிகழ்வானது, மாணவர்கள் தாம் தேர்ந்தெடுக்கும் துறை, விரிவுரையாளர் குழு, நவீன கற்றல் வசதிகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் போன்றவை தொடர்பான சகல விபரங்களையும் கிரமமான முறையில் உள்ளடக்கியிருந்தமை விசேட அம்சமாகும். அத்தோடு மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக ஐஐவு முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் பெற்றோரைத் தெளிவுபடுத்தும் விதமான அமர்வுகளை உள்ளடக்கியதன் வாயிலாக, இலங்கையின் முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகத்தில் பிள்ளைகளின் எதிர்கால அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்படும் என்ற உறுதிமொழியினை அவர்களுக்கு வழங்குவதற்கும் இதன்போது வாய்ப்பேற்பட்டது.

பட்டப்படிப்புத் திட்டங்களின் பின்னணி மற்றும் இதர அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தன் பின்னர், IIT இன் பீடாதிபதியான நயோமி கிருஷ்ணராஜா கருத்துத் தெரிவிக்கையில், ´புதிய கல்வியாண்டில் பட்டப்படிப்புக்களைத் தொடர எதிர்பார்க்கும் பெருமளவிலான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை வரவேற்பதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம். இங்கிருக்கும் ஒவ்வொரு மாணவனதும் திறமைகளை வளர்ப்பதன் வாயிலாக அவர்கள் அனைவரும் தத்தமது துறைகளில் பிரகாசிப்பதற்குத் தேவையான வலுவான அடித்தளத்தினை உருவாக்குவதே எமது முதன்மையான நோக்கமாகும். அந்தவகையில், IIT இன் விரிவுரையாளர்களின் வழிகாட்டுதலுடனான அடுத்த நான்கு ஆண்டுகளும் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு பயணமாக இருக்கும் என்பதில் எதுவித ஐயமில்லை.´ என்றார்.

பல்வேறு விநோதமான செயற்பாடுகளை உள்ளடக்கிய ஐஐவு இன் இந்த அணுகுமுறையானது, மாணவர்களிடையே அன்னியோன்னியம் மற்றும் சகோதரத்துவ உணர்வினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கியது. இது அடுத்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கழகங்கள் முதலிய இணைப்பாடவிதான செயற்பாடுகளை உள்ளடக்கிய நெகிழ்வான கற்றல் நடவடிக்கைகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் ஒரு முன்னோட்டமாக அமைந்தது. இதுதவிர, பாடநெறிகள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பாக பெற்றோருக்குள்ள சந்தேகங்களை விரிவுரையாளர் குழாமிடம் நேரடியாகக் கேட்டுத் தெளிவுபடுத்துவதற்கான பிரத்தியேகமான கலந்துரையாடல் ஒன்றும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *